Tuesday, July 30, 2019

திமுக சங்கர மடமா?

திமுக சங்கர மடமா?
கலைஞர் உயிரோடு இருந்தபோது திமுக சங்கரமடம் இல்லை என்றார். ஆனாலும் அவர் வாரிசு ஸ்டாலின் பதவி பெற்றார்.
இப்போது ஸ்டாலின் மகன் உதயநிதி பதவி பெற்றுள்ளார். நாளை உதயநிதியின் மகன் பதவி பெறலாம்.
ஆனால் சங்கர மடத்தில்கூட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சங்கராச்சாரியர்களாக நியமிக்கப்படுவதில்லை.
திமுக கலைஞரின் குடும்ப சொத்துதானே. எனவே அதன் தலைவராக அவரின் வாரிசுகள் நியமிக்கப்படுவதில் ஆச்சரியம் இல்லை.
ஆனால் தயவு செய்து உதயநிதி வரவில்லை என்றால் பாஜக வந்துவிடும் என்றெல்லாம் கதை சொல்லாதீங்கடா.
அதுவும் உதயநிதி நியமிக்கப்பட்டதெற்கெல்லாம் வாழ்த்து அனுப்பும் நிலையில் தோழர் நல்லகண்ணு இருப்பது கொடுமையடா.
கேவலம் இரண்டு சீட்டுக்காக ரஸ்சிய தலைவர் ஸ்டாலினை மறந்து கோபாலபுரம் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிலையில் கம்யுனிஸ்ட் கட்சியை கொண்டு வந்திட்டிட்டீங்கடா. அதுதான்டா தாங்க முடியல்லையடா.
ஆனால் ஒன்றடா, என்ன இருந்தாலும் ஈழத்து கருணாநிதி என்று நாம் அழைக்கும் சம்பந்தர் ஐயா தன் இரு மகன்களில் ஒருவரைக்கூட தன் வாரிசாக அரசியலுக்கு அழைத்து வந்து பதவி கொடுக்கவில்லை.
இனி இதைப் பார்த்து அந்தாளுக்கும் ஆசை வந்து தொலைக்கப்போகுதே?

No comments:

Post a Comment