Tuesday, July 30, 2019

•காஷ்மீர் ஆளுநர் தெரிவித்த நியாயமான கருத்தும் தவறான கருத்தும்!

•காஷ்மீர் ஆளுநர் தெரிவித்த
நியாயமான கருத்தும் தவறான கருத்தும்!
காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் அவர்கள் “ இதுவரை காஷ்மீரை சுரண்டிய அந்நிய முதலாளி யாரையாவது சுட்டுக் கொன்றிருக்கிறீர்களா?” என கேட்டிருக்கிறார்.
இது நியாயமான கருத்துதான். இந்த கருத்தை வேறு யாராவது ஒரு சாதாரண இந்தியர் கூறியிருந்தால் இந்நேரம் பயங்கரவாதி என முத்திரை குத்தி சிiயில் அடைத்திருப்பார்கள்.
ஆனால் அதேநேரம் பலம்பொருந்திய புலிகளையே தோற்கடித்துவிட்டார்கள். எனவே ஆயுதப் போராட்டம் தேவையில்லை என்று அவர் கூறியது தவறான கருத்தாகும்.
இதே கருத்தை ஈழத்திலும் சிலர் முப்படைகள் வைத்திருந்த புலிகளே தோற்றுவிட்டார்கள். எனவே இன்னொரு ஆயுதப் போராட்டம் சாத்தியம் இல்லை என்று கூறுகிறார்கள்.
எனவே ஆளுநருக்கு மட்டுமல்ல இவர்களுக்கும் பதில் சொல்ல வேண்டிய தேவை எமக்கு எற்பட்டுள்ளது.
முதலாவது,
போராட்டம் ஒருபோதும் தோல்வியை தருவதில்லை. எனவே புலிகள் போராட்டம் வெற்றி பெறவில்லை என்பதற்காக அவர்களது போராட்டம் தோல்வியடைந்து விட்டது என்று அர்த்தம் கொள்வது தவறு ஆகும்.
இரண்டாவது,
புலிகள் தமது ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்தார்களே யொழிய தமது ஆயுதப் போராட்டம் மௌனிப்பதாகவோ அல்லது தோல்வியடைந்து விட்டதாகவோ அறிவிக்கவில்லை.
மூன்றாவது,
அடக்குமுறை இருக்கு மட்டும் அதற்கு எதிரான போராட்டமும் இருக்கும். அடக்குமுறைக்கு எதிராக மக்கள் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதையும் மக்கள் தீர்மானிப்பதில்லை. அரசின் அடக்குமுறையே தீர்மானிக்கிறது.
நான்காவது,
செப்டெம்பர் 11 இற்கு பின்பு ஆயுதப் போராட்டம் சாத்தியம் இல்லை என்று சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதற்கு இவர்கள் புலிகளின் போராட்டத்தை உதாரணமாக சுட்டிக் காட்டுகிறார்கள்.
இந்தியாவில் நக்சலைட்டுகள் உட்பட உலகில் இன்றும் பல ஆயுதப் போராட்டங்கள் நடந்து வருவதை இவர்கள் வசதியாக மறந்து விடுகின்றனர் அல்லது மறைத்துவிடுகின்றனர்.
ஐந்தாவது,
நக்சலைட்டுகள் என்று பலர் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்
நக்சலைட்டுகள் என்று பலர் சிறையில் அடைக்கப்படுகின்றனர்
நக்சலைட்டுகள் என்று பலர் சித்திரவதை செய்யப்படுகின்றனர்.
நக்சலைட்டு ஒழிப்பிற்கு என்று பல்லாயிரம் கோடி ரூபா செலவழிக்கப்படுகின்றது.
நக்சலைட்டுகள் சீன ஊடுருவல் என்று முதலில் கூறினார்கள். அப்புறம் இப்போது ஐரோப்பிய ஊடுருவல் என்கிறார்கள்.
ஆனாலும் இதுவரை நக்சலைட்டுகளை அழிக்கவும் முடியவில்லை. ஒழிக்கவும் முடியவில்லை.
மாறாக நாளுக்கு நாள் அவர்கள் ஆயிரம் ஆயிரமாக வளர்ந்து வருகிறார்கள்.
இன்று அவர்கள் இந்தியாவில் 9 மாநிலங்களில் செல்வாக்குடன் இருப்பதாக இந்திய அரசே கூறுகிறது.
இன்று அவர்களின் உறுப்பினர்கள் எண்ணிக்கை லட்சத்தை தாண்டிவிட்டது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இன்று சுமார் 120 மாவட்டங்களில் அவர்களுடைய ஆட்சியே நடைபெறுவதாக இந்திய அரசே வெட்கமின்றி ஒத்துக்கொள்கிறது.
பாகிஸ்தானைவிட நக்சலைட்டுகளே இன்று இந்தியாவின் முதன்மையான எதிரி என்று முன்னாள் பிரதமர் மன்மோகனள் சிங் கூறியிருந்தார்.
ஆனால் உச்சநீதிமன்றமோ “நக்சலைட்டுகள் தேசவிரோதிகள் இல்லை. அவர்கள் தேச பக்தர்கள்” என்று கூறியுள்ளது.
இப்போது நாம் கேட்பது என்வென்றால் இது குறித்து காஷ்மீர் ஆளுநரோ அல்லது ஆயுதப் போராட்டத்திற்கு எதிரான கருத்தை கூறும் அரசியல் ஆய்வாளர்களோ என்ன கூறப் போகிறார்கள்?
குறிப்பு- வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நாம் போராட வேண்டும் என வேறு சிலர் கூறுகிறார்கள். ஆயுதப் போராட்டம் என்றால் ஏதோ கத்தியும் மண்வெட்டியும் பயன்படுத்துவதாக நினைக்கும் அல்லது தொழில்நுட்பத்தை ஆயுதப் போராட்டம் மறுக்கிறதாகவோ நினைக்கும் இவர்களுக்கு எப்படி சொல்லி புரியவைப்பது?

No comments:

Post a Comment