Tuesday, July 30, 2019

கரவெட்டியில் உதித்திட்ட சூரியன்

கரவெட்டியில் உதித்திட்ட சூரியன்
மலையகத்தில் மறைந்திட்ட சூரியன்
எத்தனை தடவை இன்னல் வந்தபோதும்
அத்தனை தடவையும் தப்பி நின்ற சூரியன்
ஏதோ ஒரு கெட்ட இரவு
எல்லோரும் உறங்கிய இரவு
நேரில் உன்னை எதிர்கொள்ள முடியாதவர்
துரோகத்தால் உன்னை முடித்த இரவு
துவக்கால் சுட்டால் சத்தம் கேட்கும் என்று
பாவிகள் உன்னை அடித்தே கொன்றனரே
புதைத்தால் நீ முளைப்பாய் என்றஞ்சி
ஓடும் ஆற்றில் தூக்கி வீசினரே உன்னை
உடல் கிடைத்தாலும் அடையாளம் தெரிந்துவிடக்கூடாது என்று
உன் சிரித்த முகத்தை கல்லால் குத்தி சிதைத்தனரே
நீ பிறந்த தேதி தெரியவில்லை வாழ்த்து கூற
நீ இறந்த தேதியும் தெரியவில்லை நினைவு கூர
ஆம். சூரியனின் பிறப்பும் இறப்பும் யார் அறிவார்?
குறிப்பு- தோழர் நெப்பொலியன் (மனோகரன்) கரவெட்டியில் பிறந்தவர். அவர் முதலில் பலிகள் இயக்கதில் சேர்ந்தார். பின்னர் புலிகள் இயக்கம் உடைந்தபோது புதியபாதை பிரிவில் இயங்கினார். அப்பிரிவு புளட் ஆக மாறிய போது அவர் பேரவை இயக்கத்தை உருவாக்pனார். அவர் தோழர் தமிழரசன் தலைமையில் இயங்கிய தமிழ்நாடு விடுதலைப் படைக்கு பயிற்சி மற்றும் ஆயதம் வழங்கியதால் இந்திய உளவுப்படையானது ஈரோஸ் இயக்கத்தின் மூலம் அவரை மலையகத்தில் வைத்து கொலை செய்தது.

No comments:

Post a Comment