Tuesday, July 30, 2019

என்ன ஆட்டம் போட்டாங்கள்

என்ன ஆட்டம் போட்டாங்கள்
கொஞ்சம் நஞ்சமா? ஆடின ஆட்டம் என்ன?
தோத்திட்டாங்கள் என்றதும் மனம் குதூகலிக்கிறதே.
என் இந்த நிலை இந்திய அணிக்கு?
அத்தனை தலைக்கனம். அட்டகாசம். சகிக்க முடியாத அளவிற்கு.
இந்திய அணிக்கு எதிரான ஈழத் தமிழரின் உணர்வு புரிந்து கொள்ளக் கூடியதே. அதில் ஆச்சரியம் இல்லை.
ஆனால் தமிழக தமிழரும் பகிரங்கமாக இந்திய அணிக்கு எதிராக கருத்து பகிர்கிறார்களே, அது ஏன் ஏற்பட்டது?
இவ்வாறு எதிராக கருத்து பகிர்பவர்களை “தேசத் துரோகிகள”; என்று பழிப்பதை விடுத்து இத்தனை நாளும் தன் நாடு என்றுஆதரித்தவன் இன்று ஏன் இப்படி எதிராக மாறினான் என்று கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.
இந்திய அரசு தமிழ் இனத்திற்கு எதிராக செயற்படுகின்றது என்று ஒவ்வொரு தமிழனும் உணர ஆரம்பித்து விட்டான் என்பதால்தானே இது நடக்கிறது.
சரி அதை விடுவம். இதைக் கேட்டால் உடனே “விளையாட்டை விளையாட்டாக பாருங்கள், அரசியலாக பார்க்காதீர்கள்” என்று உபதேசம் செய்வீர்கள்.
அப்படியென்றால் நீங்கள் ஏன் விளையாட்டில்கூட காவியை புகுத்துகிறீர்கள் என்று கேட்டால் உடனே “அன்ரி இன்டியன்” என்பீர்கள்.
அது சரி தேர்தலில் வெல்ல யாகம் செய்கிறீர்கள். யாகம் செய்தால் மழை பெய்யும் என்கிறீர்கள். அப்ப ஒரு யாகம் செய்து கிரிக்கட்டிலும் வென்றிருக்கலாமே?
யாகம் செய்கிறீர்களோ இல்லையோ ஆனால் உங்கள் தேர்தல் மெசினை வைத்து ரன் எண்ணியிருந்தால் நிச்சயம் வென்றிருக்க முடியும்.
ஆனால் அதிலும் ஒரு சிக்கல், அந்த மெசின் பாவித்தால் இந்தியா வெற்றி என்பதற்கு பதிலாக பாஜக வெற்றி என்று அல்லவா அது அறிவிக்கும்?

No comments:

Post a Comment