Tuesday, July 30, 2019

•இரண்டு வீடுகள் இரண்டு அரசியல்வாதிகள்.

•இரண்டு வீடுகள்
இரண்டு அரசியல்வாதிகள்.
இரண்டு அரசியல்வாதிகள் இரண்டு வீடுகள் கட்டியுள்ளனர்.
ஒருவர் சிங்கள அரசியல்வாதி. சிறையில் தன்னுடன் சில நாட்கள் பழகிய தமிழ் அரசியல் கைதிக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார்.
மற்றவர் தமிழ் அரசியல்வாதி. அவரும் ஒரு வீடு கட்டியிருக்கிறார். ஆனால் அது தமிழ் அரசியல் கைதிக்காக கட்டிய வீடு அல்ல. மாறாக தனக்காக கட்டிய வீடு அது.
அவர் மட்டும் உயரமானவர் இல்லை. மாவிட்டபுரத்தில் அவர் தன் வீட்டிற்கு கட்டிய மதில்களும் உயரமானவை.
இந்த சிங்கள அரசியல்வாதிக்கு தமிழ் மக்கள் ஒருபோதும் வோட்டு போடப் போவதில்லை. இது அந்த சிங்கள அரசியல்வாதிக்கும் நன்கு புரியும்.
ஆனாலும் சிறையில் தன்னுடன் சில நாட்கள் பழகிய தமிழ் அரசியல் கைதிக்கு கொடுத்த வாக்குறுதியை அவர் காப்பாற்றியிருக்கிறார்.
இந்த உயரமான தமிழ் அரசியல்வாதி தனக்கு வீடு கட்ட வேண்டாம் என நாம் கூற வரவில்லை.
அல்லது, இந்த தமிழ் அரசியல்வாதி தமிழ் அரசியல் கைதிகளுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்றுகூட நாம் கூற வரவில்லை.
நாம் இங்கு கூற வருவது என்னவென்றால் தமிழ் மக்களைக் கொன்ற மகிந்த வின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு இருக்கும் அக்கறை கூட தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஏன் இல்லாமற் போனது?
இந்த தமிழ் அரசியல்வாதிகள் கொஞ்சமாவது அக்கறை காட்டியிருந்தால் சிங்கள அரசியல்வாதியிடம் கைநீட்டி வீட்டை வாங்க வேண்டிய அவலநிலை தமிழ் கைதியின் குடும்பத்திற்கு ஏற்பட்டிருக்காதே!
இதில் குறிப்பிடப்பட்டுள்ள
தமிழ் அரசியல்வாதி- மாவை சேனாதிராசா
சிங்கள அரசியல்வாதி – நாமல் ராஜபக்சா.
குறிப்பு- தமிழ் அரசியல் தலைவர் சம்பந்தர் ஐயாவின் இரண்டாவது சொகுசு பங்களாவிற்கு பெயிண்ட் அடிக்க மட்டும் பாராளுமன்றம் மூலம் ஒதுக்கப்பட்ட தொகை 4 கோடி ரூபா.

No comments:

Post a Comment