Tuesday, July 30, 2019

ஈழத்து கருணாநிதியும் தமிழகத்து சம்பந்தர் ஐயாவும்!

•ஈழத்து கருணாநிதியும் தமிழகத்து சம்பந்தர் ஐயாவும்!
துரோகத்திற்கு மரியாதை கொடுக்க வேண்டும் எனக் கோருவது
பெருந்தன்மையானது அல்ல மாறாக இளிச்சவாய்த்தனமானது!
சம்பந்தர் ஐயாவின் வயதிற்கு மரியாதை கொடுக்க வேண்டும் என சிலர் கோருகின்றனர். அவருடைய முதுமையை கேலி பண்ணக் கூடாது என்றும் கூறுகின்றனர்.
இதுவரை செய்த சாதனைகளைக் கூறி மரியாதை தரும்படி கேட்க முடியாதவர்கள் வயதிற்காக செய்த துரோகத்தை மறக்கும்படி கோருகின்றனர்.
சம்பந்தர் ஐயாவின் வயதிற்கு மரியாதை கொடுக்கும்படி சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவர்கூட கூறவில்லையே. அது ஏன்?
அல்லது, சம்பந்தர் ஐயாவின் முதுமையை கேலி பண்ண வேண்டாம் என்று கடந்த இரண்டு வருடங்களாக போராட்டம் நடத்தும் காணாமல் போனவர்களின் உறவுகளில் ஒருவர் கூறவில்லையே? அது ஏன்?
அல்லது, தனக்கு இரண்டு பங்களா வாங்கிய சம்பந்தர் ஐயா வேலை கேட்டு வந்த பட்டதாரிகளுக்கு வேலை கேட்டால் உரிமை கேட்க முடியாது என்றாரே. அந்த பட்டதாரிகளில் ஒருவர் கூட சம்பந்தர் ஐயாவுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று கூறவில்லையே. அது ஏன்?
அல்லது, தனது சொந்த நிலத்தை கேட்டு வீதியில் உறங்கி போராடும் கேப்பாப்புலவு மக்களில் ஒருவர்கூட சம்பந்தர் ஐயாவின் வயதிற்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று கூறவில்லையே. அது ஏன்?
மாறாக சம்பந்தர் ஐயாவின் வயதிற்கு மதிப்பு கொடுக்க வேண்டும் எனக் கோருபவர்களே,
யாழ்ப்பாணத்தில் சொகுசு வாகனத்தில் வந்த சம்பந்தர் ஐயா மீது மண் அள்ளி வீசி செத்து போ என தூற்றினார்களே தாய்மார்கள். அவர்களுக்கு ஏன் உங்களால் சொல்ல முடியவில்லை?
சில மாதங்களின் முன்னர் வவுனியாவில் சம்பந்தர் ஐயாவின் உருவப் பொம்மையை கொளுத்தி செத்த வீடு நடத்தினார்களே காணமல் போனவர்களின் உறவுகள். அந்த பெண்களிடம் போய் சம்பந்தர் ஐயாவின் வயதிற்கு மரியாதை கொடுக்கும்படி ஏன் உங்களால் கூற முடியவில்லை?
மரியாதை என்பது கொடுத்து வாங்குவது. மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு மக்கள் மரியாதை தர வேண்டும் என எதிர் பார்க்கக் கூடாது.
மக்கள் எதிரியைக் கூட மன்னிப்பார்கள். ஆனால் துரோகிகளை ஒருபோதும் மறக்கவும் மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள்.
எனவே சம்பந்தர் ஐயாவுக்கு மரியாதை வேண்டுமென்றால் நீங்கள் கோர வேண்டியது மக்களிடம் அல்ல. மாறாக இனியாவது துரோகம் செய்ய வேண்டாம் என்று சம்பந்தர் ஐயாவிடம் கோருங்கள்.
மாறாக சம்பந்தர் ஐயா தொடர்ந்தும் துரோகம் செய்வார். ஆனால் மக்கள் அதை மறந்து மரியாதை தர வேண்டும் என நீங்கள் கோருவது மக்களை இளிச்வாயர்களாக இருக்கும்படி கோருவதற்கு ஒப்பாகும்.
மக்கள் ஒருபோதும் அப்படி இருக்க மாட்டார்கள்.

No comments:

Post a Comment