Sunday, April 29, 2018

• நாய்க்கு வளைகாப்பு விழா (இது ஒரு ரிலாக்ஸ் பதிவு)

• நாய்க்கு வளைகாப்பு விழா (இது ஒரு ரிலாக்ஸ் பதிவு)
நான் எப்போதும் சீரியஸ்சான அரசியல் பதிவுகளை போட்டு வருவதாக சில முகநூல் நண்பர்கள் குறைபட்டுக்கொள்கிறார்கள்.
அவர்களுக்கான ஒரு ரிலாக்கஸ் பதிவு இது.
கீழே உள்ள படத்தை அனுப்பி இது பற்றி என் கருத்து என்ன என்று ஒரு நண்பர் இன்பாக்சில் கேட்கிறார்.
இது நாய்க்கு வளைகாப்பாம். என்னத்தை சொல்ல?
இது ஏங்கே? எப்போது? நடந்தது என்ற விபரம் அறிய முடியவில்லை. யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்.
ஏற்கனவே கனடாவில் ஒரு தமிழர் நாய்க்கு செத்தவீடு நடத்தினார். இப்போது வளைகாப்பு என்கிறார்கள்.
போகிற போக்கைப் பார்த்தால் இனி நாய்க்கு பிறந்தநாள் விழா படங்களையும் பேஸ்புக்கில் காணலாம்.
ஒருபுறத்தில் வன்னியில் மக்கள் பட்டினியால் சாகும்போது மறுபுறத்தில் நாய்க்கு இப்படி ஒரு விழா தேவையா என்று கேட்க தோன்றுகிறது.
ஆனாலும் அவ்வாறு கேட்க முடியவில்லை. ஏனென்றால் “மை கார், மை பெற்றோல், மை றோட்” என்பதுபோல் “எனது காசு நான் செலவு செய்கிறேன் கேட்பதற்கு நீ யார்?” என்று பதில் கூறுவார்கள்.
இது குறித்து எனது மருத்துவ நண்பரிடம் கேட்டேன். அதற்கு அவர் கூறினார் “ ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பையித்தியக்காரக் குணம் உண்டு. அது அதிகமாகும்போது பையித்தியம் என்கிறோம்”.
அந்த மருத்துவர் கூறியது எனக்கு முழுமையாக புரியவில்லை. ஆனால் இது பற்றி நாம் உரையாட வேண்டும் என்று தெரிகிறது.
மனிதன் ஒரு சமூகப் பிராணி. ஒரு மனிதனின் தவறுகள் சமூகத்தை பாதிக்குமானால் அது குறித்து கருத்துச் சொல்ல இன்னொரு மனிதனுக்கு உரிமை உண்டு.
இதனடிப்படையில் எமது விமர்சனங்களை முன்வைப்போம். என்றாவது ஒருநாள் அது சமூகத்திற்கு பயன் கொடுக்கும் என்று நம்புவோம்.

No comments:

Post a Comment