Monday, April 23, 2018

•கருணாஸ் தமிழிசை

•கருணாஸ் தமிழிசை
இருவரின் யாழ் விஜயம்!
நடிகர் கருணாஸ் யாழ்ப்பாணம் விஜயம் செய்திருந்தார். தமிழகத்தில் இருக்கும் அகதிகளின் உயர் கல்விக்காக ஒரு கல்லூரி கட்ட இருப்பதாக அறிவித்தார்.
அவர் அமைக்கும் கல்லூரியால் எத்தனை அகதி மாணவர்கள் வாயப்பு பெறுவார்கள் என்று தெரியவில்லை.
ஆனால் அவர் அவ்வாறு அறிவித்ததன் மூலம் தமிழகத்தில் அகதிகளுக்கு உயர் கல்வி வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்ற உண்மை வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது.
எந்தவித விளம்பரமும் இன்றி அகதிகளுக்கு நீண்ட காலமாக தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருபவர் நடிகர் கருணாஸ்.
அவர் தற்போது சட்ட மன்ற உறுப்பினராக இருக்கிறார். அவரது அரசியல் குறித்து விமர்சனம் இருப்பினும் அகதிகளுக்கு உதவும் அவரது மனம் நிச்சயம் பாராட்டுக்குரியது.
அவர் ஜெனிவா வந்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கும் வருகை தந்து தமது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.
இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் ஒரு வருடத்திற்கு மேலாக போராடும் காணாமல்போனவர்களின் உறவுகளின் போராட்டதிலும் அவர் கலந்து கொண்டு தனது ஆதரவினை தெரிவித்துள்ளார்.
எமது தலைவர்கள் என்று கூறப்படும் சம்பந்தர் , சுமந்திரன் கூட இதுவரை இவர்களின் போராட்டத்தில் கலந்துகொண்டது கிடையாது.
ஆனால் கருணாஸ் கலந்து கொண்டது மட்டுமன்றி தான் இந்தப் பிரச்சனையை தமிழக சட்ட மன்றத்தில் எழுப்புவேன் என்றும் உறுதியளித்துள்ளார்.
இதேவேளை இரு மாதங்களுக்கு முன்னர் தமிழக பாஜக தலைவர் தமிழிசை அவர்கள் யாழ்ப்பாணம் வந்திருந்தார்.
அப்போதும் காணாமல்போனவர்களின் உறவுகள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.
ஆனால் அவர்கள் போராட்டம் நடத்திய வீதியால் சென்ற தமிழிசை அவர்களை சந்திக்கவும் இல்லை. ஆறுதல் சொல்லவும் விரும்பவில்லை.
இருந்தும் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தவர்கள் தமிழிசை சந்திக்க விரும்பினார்கள். ஆனால் தமிழிசை அவர்களை பார்க்க மறுத்துவிட்டார்.
இப்போது கூறுங்கள். ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் கருணாஸ் உயர்ந்தவரா அல்லது தமிழிசை உயர்ந்தவரா?
யார் பாராட்டுக்குரியவர்கள்?

No comments:

Post a Comment