Monday, April 23, 2018

ஒப்பிரேசன் சக்சஸ் ஆனால் நோயாளி அவுட்!

•ஒப்பிரேசன் சக்சஸ் ஆனால் நோயாளி அவுட்!
நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ரணில் வென்றுவிட்டார். ஆனால் அவரோ அல்லது அவரது ஆட்சியினரோ இனி ஊழல் ஒழிப்பு பற்றி கதைப்பதற்கு அருகதையாகிவிட்டனர்.
மத்தியவங்கி பிணை முறிப்பு ஊழலில் பிரதமர் ரணிலுக்கும் பங்கு இருப்பது தெரியவந்ததும் ரணில் தானாகவே பதவியை ராஜினாமா செய்து விசாரணைக்கு ஒத்துழைத்திருக்க வேண்டும்.
அல்லது, இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தபோதே ரணிலை நீக்கிவிட்டு வேறு யாராவது ஒருவரை பிரதமராக ஜனாதிபதி மைத்திரி நியமனம் செய்திருக்க வேண்டும்.
தமிழ்தேசிய கூட்டமைப்பும்கூட ராஜினாமா செய்யும்படி பிரதமர் ரணிலிடம் வலியுறுத்தியிருக்க வேண்டும்.
ஆனால் இவர்கள் எல்லோரும் ரணிலை ஆதரித்ததன் மூலம் ரணிலின் ஊழலுக்கு ஆதரவளித்துள்ளார்கள்.
இனி இவர்கள் யாருக்குமே ஊழல் ஒழிப்பு பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை.
குறிப்பாக மகிந்த ராஜபக்ச கும்பல்கள் புரிந்த ஊழல்கள் பற்றி இனி எப்படி இவர்களால் பேச முடியும்?

No comments:

Post a Comment