Monday, April 23, 2018

சுமந்திரனுக்கு பாராட்டுகள்!

•சுமந்திரனுக்கு பாராட்டுகள்!
பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கலந்துகொண்டு சுமந்திரன் உரையாற்றியுள்ளார்.
12000 போராளிகளை முன்னாள் மகிந்த அரசாங்கம் விடுவித்த நிலையில் தற்போது இருக்கும் அரசியல் கைதிகளை விடுவிக்க ஏன் தற்போதைய அரசாங்கம் தயங்குகிறது என்று சுமந்திரன் கேட்டுள்ளார்.
அதுமட்டுமன்றி, ஜேவிபி போராளிகளை மன்னித்த அரசாங்கம் ஏன் புலிப் போராளிகளை மன்னிக்க மறுக்கிறது என்றும் அவர் கேட்டுள்ளார்.
அத்துடன், காணிகள் விடுவிக்கப்படாததுடன் அதில் ராணுவம் முன்பள்ளிகளையும் விவசாயங்களையும் நடத்துகின்றது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், அரசியலமைப்பு சபையின் இடைக்கால அறிக்கை முன்னோக்கி நகராமல் உள்ளது. அரசின் செயற்பாடுகளில் அதிருப்தி கொண்டவர்களாக உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
சுமந்திரன் தற்போது தெரிவித்துள்ள கருத்துகள் யாவும் இதுவரை நாம் தெரிவித்து வந்த கருத்துகள் ஆகும்.
இக் கருத்துகளை நாம் தெரிவித்த போதெல்லாம் அதனை மறுத்து அரசை ஆதரித்து வந்த சுமந்திரன், தற்போது தானே அவற்றை இன்று தெரிவித்துள்ளார்.
இக் கருத்துகளை வெளிப்படையாக அதுவும் பாராளுமன்றத்திலேயே சுமந்திரன் பேசியிருப்பது உண்மையில் பாராட்டப்பட வேண்டியதே.
“அடியைப் போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்” என்பதுபோல அண்மையில் ஏற்பட்ட தேர்தல் தோல்வி சம்பந்தர் சுமந்திரன் போக்குகளில் சிறிது மாற்றத்தை எற்படுத்தியிருக்கிறது.
தேர் பாதையில் சரியாக செல்வதற்கு சக்கட்டை அவசியமாக இருப்பது போன்று, எமது அரசியல் தலைமைகள் சரியாக செல்வதற்கு விமர்சனம் அவசியமாக உள்ளது.
எனவே முகநூல்களில் இன்னும் அதிகமாக அரசியல் விமர்சனங்கள்; செய்வோம்.

No comments:

Post a Comment