Monday, April 23, 2018

போராட்டம் ஒருபோதும் தோல்வியைத் தருவதில்லை

•போராட்டம் ஒருபோதும் தோல்வியைத் தருவதில்லை என்றால்
தமிழக மக்களின் போராட்டம் தோல்வி அடைந்துவிடுமா என்ன?
காவிரி ஆணையம் அமைத்தால் கர்நாடகம் கொந்தளிக்கும், சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துவிடும் என்று மத்திய அரசு கூறுகிறது.
அப்படியென்றால் ஆணையம் அமைக்கவில்லை என்றால் தமிழகம் கொந்தளிக்காதா? அல்லது தமிழகம் கொந்தளித்தாலும் அதுபற்றி தனக்கு கவலை இல்லை என்று மத்திய அரசு கருதுகிறதா?
ஆனாலும் தமிழக மக்கள் அறவழியில் தமது தமது உரிமைக்காக மெரினா கடற்கரையில் போராட முனைந்தார்கள்.
உடனே அவர்களை கைது செய்த தமிழக அரசு, மெரினா கடற்கரையில் போராடுவதற்கு உயர்நீதிமன்றம் தடை உத்தரவு போட்டுள்ளது என்று கூறுகிறது.
அதாவது ஆணையம் அமைக்கும்படி உச்சநீதிமன்றம் விதித்த உத்தரவை அமுல்படுத்தாத அரசு, உயர்நீதிமன்றம் மெரினாவில் போராட தடை விதித்த உத்தரவை அமுல்படுத்துகிறது.
மக்கள் அற வழியில் போராடுவதற்கு அரசு தடை விதிக்கப்பட்டமையினால் இயல்பாகவே தனி மனித போராட்டங்கள் வெடித்தன.
டிரபிக் ராமசாமி என்ற வயதானவர் உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார். கும்பகோணத்தில் தனியார் பள்ளி அசிரியர் தேசியக்கொடியை கொளுத்துகிறார்.
காவிரி ஆணையம் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு போராடும் மக்களை உடனே கைது செய்து வருகிறது.
இதனால் தமிழகவாழ்வுரிமைக்கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் மக்கள் டோல்கேட்டுகளை அடித்து நொருக்கியுள்ளனர்.
இதுவரை உளுந்தூர்பேட்டை, ஓமலூர், சேலம் சுங்கச்சாவடிகள் மக்களால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. மதுரவாயல் சுங்கச்சாவடி மக்களால் முற்றுகைக்குள்ளானது.
வருடந்தோறும் 85000 கோடி ரூபாவை வரியாக தமிழகத்தில் இருந்துபெற்றுவரும் இந்திய அரசுக்கு அரசுக்கு சுங்கச்சாவடி மீதான தாக்குதல் நிச்சயம் கலக்கத்தைக் கொடுக்கும்.
எனவேதான் “சுங்கச்சாவடியை தாக்குவது பெரிய வீரமா? முடியுமென்றால் ஆளுனர் மாளிகையை தாக்குங்கள் பார்க்கலாம்” என்று மக்கள் கவனத்தை திசைதிருப்ப பாஜக விசுவாசிகள் முயல்கிறார்கள்.
மக்கள் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை மக்கள் ஒருபோதும் தீர்மானிப்பதில்லை. மக்களின் எதிரியான அரசின் அடக்குமுறையே தீர்மானிக்கின்றது.
போராட்டம் வெற்றியை தராமல் போகலாம். ஆனால் அது ஒருபோதும் தோல்வியை தருவதில்லை.
தமிழக மக்களின்; “தண்ணியைக்கொடு இல்லையேல் தனியாக விடு” போராட்டமும் தோல்வியை ஒருபோதும் தராது. மாறாக வெற்றியையே பெற்றுக் கொடுக்கும்.

No comments:

Post a Comment