Sunday, April 29, 2018

•“ஓர் இனப் பிரச்சனையும் ஓர் ஒப்பந்தமும்” நூல் அறிமுக விழா

•“ஓர் இனப் பிரச்சனையும் ஓர் ஒப்பந்தமும்” நூல் அறிமுக விழா
(1) நூலை எழுதிய தி.ராமகிருஸ்ணன் இந்திய பத்தரிகையாளர் என்று குறிப்பிடுவது தவறு. அவர் “இந்து”ப் பத்திரிகையாளர்.
(2) இந்து பத்திரிகையும் அதன் எடிட்டர் ராமும் எப்போதும் தமிழ் இன விடுதலைக்கு எதிரானவர்கள். இலங்கை அரசுக்கு விசுவாசமானவர்கள்.
(3) தமிழ் இனப் பிரச்சனைக்காக இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்யப்படவில்லை. இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பே ஒப்பந்தம்.
(4) ஒப்பந்தம் மூலம் இந்தியா பெற்றுக்கொள்ளும் அரசியல், ராணுவ, பொருளாதார நலன்கள் வருமாறு,
A. அரசியல், ராணுவ நலன்கள்
(அ) இலங்கையின் வெளி உறவுகளில் கட்டுப்பாடு செலுத்தும் உரிமை
(ஆ) ஒலி, ஒளிபரப்புகளை கட்டுப்படுத்தும் உரிமை
(இ) திரிகோணமலை தளத்தின்மீது கட்டுப்பாடு. இந்தியாவின் நலனுக்கு எதிரான அந்நிய படைகள் எதனையும் அனுமதிக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு
(ஈ) இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கும் உரிமை
(உ) இலங்கை ராணுவம் மீதும் இதர நாடுகளுடனான ராணுவ உறவுகள் மீதும் கட்டுப்பாடு
B. பொருளாதார நலன்கள்
(அ)இந்திய பொருட்களின் ஏற்றுமதிக்கான தடைகள் நீக்கப்படும்
(ஆ) திரிகோணமலை எண்ணெய்க் குதப்பணி ஒப்பந்தம் புத்துயிர்ப்பு செய்யப்படும். இதன் செயல்பாடுகளிலும் இலாபத்திலும் இந்தியாவிற்கு கட்டுப்பாடு.
(இ) சுமார் 400 கோடி ரூபா அளவிலான நிர்மாணப் பணிகள் இந்தியாவிற்கு வழங்கப்படும்.
(ஈ)மீன்பிடி, எண்ணெய் ஆய்வு, ஆற்றல்துறை ஆகியவற்றில் இந்தியாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்
(உ) இலங்கை திட்டக்குழு மற்றும் உயர் வங்கி அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் உரிமை மூலம் இலங்கை பொருளாதாரத் திட்ட வகுப்பில் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு
(ஊ) உதவி என்கிற அடிப்படையில் இந்திய ரயில் பெட்டிகள் மற்றும் அசோக் லேலண்டு பேருந்துகள் ஏற்றுமதி செய்தல்.
(5) ஒப்பந்தம் தமிழ் மக்களின் நலனைவிட இந்திய நலனையே அதிகம் கொண்டிருந்தமையினால் புலிகள் இயக்கம் ஒப்பந்தம் ஒரு அடிமை சாசனம் என்றும் அதன்மூலம் வந்த இந்திய அமைதிப்படையை ஒரு ஆக்கிரமிப்பு படை என்றும் அறிவித்தார்கள்
(6) 1965ல் பாகிஸ்தான் மீது இந்தியா தொடுத்த போர் 22 நாட்கள் நடைபெற்றது. பின்னர் 1971ல் வங்கதேசத்தை உருவாக்க நடத்திய போர் 14 நாட்கள் நடைபெற்றது. ஆனால் 1987ல் 1லட்சத்து 20ஆயிரம் வீரர்களுடன் இலங்கை வந்த இந்திய ராணுவம் இரண்டரை வருடங்களுக்கு மேலாக போர் நடத்தியது.
(7) இந்தியாவில் விலைவாசி 14 சதவிகிதம் அதிகரித்திருந்தது. பண வீக்கம் பத்து சதவிகிதத்தை தாண்டியிருந்தது. இந்த சூழலில்தான் அமைதிப்படைக்கு தினந்தோறும் ஆறு கோடி ரூபாய்கள் வீதம் இரண்டரை வருடங்களாக மொத்தம் 5400 கோடி ரூபாவை இந்திய அரசு செலவு செய்தது.
(8) இந்திய ராணுவத்தால் 8000 க்கு மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். 700 க்கு மேற்பட்ட பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார்கள். மக்களின் கோடிக் கணக்கான சொத்துகள் சேதமாக்கப்பட்டன.
(9) ஒப்பந்தம் மூலம் ஏற்படுத்தப்பட்ட வடக்கு கிழக்கு இணைப்பு கைவிடப்பட்டுள்ளது. அது பற்றிக்கூட இந்திய அரசு அக்கறை கொள்ளவில்லை.
(10) ஏனெனில் இந்திய அரசின் அக்கறை என்பது எப்போதும் இலங்கை மீதான ஆக்கிரமிப்பேயொழிய தமிழருக்கான தீர்வு அல்ல.
(11) இன்று,
பலாலி விமான நிலையம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
காங்கேசன் துறைமுகம், சீமெந்து இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது
மன்னார் பெற்றோல் வளம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
புல்மோட்டை இல்மனைற் கனிமவளம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது
திருகோணமலை துறைமுகம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
திருகோணமலை எண்ணெய்குதம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது
சம்பூரில் 500 ஏக்கர் நிலம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சம்பூர் அனல்மின்சார நிலையம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
(12) இப்படி தமிழ் மக்களின் அனைத்து வளங்களும் இந்தியாவினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
(13) ஆனால் இவற்றை எல்லாம் மறைத்து ஒப்பந்தம் பற்றி புத்தகம் எழுதி அதை எம் மத்தியில் விற்பதற்கு வந்துள்ளார் “இந்து” பத்திரிகையாளர் ராமகிருஸ்ணன்.
(14) அதற்கு உடந்தையாக இந்திய விசுவாசிகளான சம்பந்தர் அய்யா, வரதராஜபெருமாள் போன்றவர்களும் இருக்கின்றனர்.
(15) ஆனால் இவர்கள் எல்லோரும் ஒன்றை மறந்து விட்டனர். தங்கள் காலடியில் பல்லாயிரக் கணக்கான தமிழர்களின் சாம்பல் மேடு உள்ளது என்பதையே.

No comments:

Post a Comment