Monday, April 23, 2018

என்னத்தைச் சொல்ல?

என்னத்தைச் சொல்ல?
ஒரு பொம்மையை வைத்து நாலு அய்யர்மார் அதற்கு நீர் ஊற்றுகிறார்கள். ஏன் என்று கேட்டால் “பூமி சூடாகிவிட்டது. அதனால் தண்ணீர் ஊற்றி குளிர்விக்கிறோம்” என்கிறார்கள்.
பொம்மைக்கு தண்ணீர் ஊற்றினால் பூமி எப்படி குளிரும் என்று கேட்டால் “ கல்லை வைத்து பூஜை செய்யும்போது அது அருள் கொடுக்கவில்லையா? அதுபோல் பொம்மையை வைத்து தண்ணீர் ஊற்றினால் பூமி குளிரும்” என்கிறார்கள்.
இதுகூடப் பரவாயில்லை. “சூரியனில் இருந்து மின்சாரம் எடுத்தால் சூரியபகவானுக்கு கோபம் என்று இந்திய பாஜக எம்.பி அசோக் சக்சேன கூறியுள்ளார்.
இதனால் சில முட்டாள்கள் உடனே சூரியனில் இருந்து மின்சாரம் தயாரித்த பேனல்களை அடித்து உடைத்துள்ளார்கள்.
கீழ்வரும் லிங்கில் இந்த முட்டாள்தனத்தை பார்வையிடலாம்.
இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. ஏனெனில் 1400000000 கி.மீ தூரத்தில் இருக்கும் செவ்வாய் கோளானது பூமியில் இருக்கும் பெண்களின் கல்யாணத்தை நிறுத்தும் வேலையை செய்வதாக பல்லாண்டுகளாக மக்களை நம்ப வைத்திருக்கிறார்களே?
இந்த லட்சணத்தில் 2020ல் இந்தியா வல்லரசாகும் என்கிறார்கள். இது டிஜிட்டல் இந்தியா என்று வேற கூறுகிறார்கள்.
குறிப்பு- இந்த பதிவை படித்ததும் ஏன் கிருத்தவத்தில் முட்டாள்தனம் இல்லையா, முஸ்லிம் முட்டாள்தனத்தை சொல்ல தைரியம் இருக்கா என்று கேட்டுக்கொண்டு ஒரு கூட்டம் ஓடிவரும். அவர்களுக்கான எமது பதில் “ அனைத்து மத முட்டாள்தனங்களையும் நாம் எதிர்க்கிறோம்”.

No comments:

Post a Comment