Monday, April 23, 2018

இவர்கள் மீது “எடுபிடி” எடப்பாடி அரசு

•இவர்கள் மீது “எடுபிடி” எடப்பாடி அரசு
ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை?
திருமுருகன்காந்தி முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த முயன்றமைக்காக கைது செய்யப்பட்டார்.
மெழுகுதிரி என்னும் பயங்கர ஆயுதம் வைத்திருந்ததாக கூறி அவர்மீது குண்டர் சட்டம் போடப்பட்டது.
நெடுவாசல் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தமைக்காக மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்ட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பிரதமர் மோடியை விமர்சித்து பாட்டு பாடிவிட்டார் என்று பாடகர் கோவன் கைது செய்யப்பட்டார்.
ஆனால் பெண்களை கேவலமாக கூறியுள்ள எஸ.வி. சேகர் மீது வழக்கும் இல்லை. கைதும் இல்லை.
பெண்களைப் பற்றி கேவலமாக பதிவு போட்ட எச்ச.ராசா மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
அது தனக்கு தெரியாமல் அட்மின் போட்ட பதிவு என்றார் எச்ச.ராசா. அதன்படி தமிழக முதல்வர் எடப்பாடி அட்மினுக்கு கண்டனம் தெரிவித்தார்.
நாம் அறிந்தவரையில் அட்மினுக்கு கண்டனம் தெரிவித்த ஒரே தமிழக முதல்வர் எடப்பாடிதான்.
இப்போது, தான் எழுதவில்லை என்றும் தான் போர்வேட் செய்த பதிவு அது என்றும் எஜ.வி. சேகர் கூறியுள்ளார்.
எனவே வழக்கம்போல் தமிழக முதல்வர் எடப்பாடி இம்முறையும் போர்வேட்டுக்கு கண்டனம் தெரிவிப்பார் என்று நம்புவோம்.
“துக்ளக்” குருமூர்த்தி அய்யர் “ஆண்மையற்ற அரசு” என்று தமிழக அரசை விமர்சித்தபோதும்கூட எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கைகட்டிக்கொண்டு நிற்கிறது தமிழக அரசு.
திருமுருகன்காந்தி, வளர்மதி, கோவன் போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் எடப்பாடி அரசு குருமூர்த்தி, எச்ச.ராசா, எஸ்.வி.சேகர் போன்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை?
இவர்கள்மீது நடவடிக்கை எடுக்காவிட்டாலும் பரவாயில்லை இவர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு அல்லவா வழங்குகிறது.
ஏன் இந்த நிலை?
இது கேவலம் இல்லையா?

No comments:

Post a Comment