•கேட்டது சிறையில் இருந்து விடுதலை
கிடைத்தது பத்தாயிரம் ரூபா பணம்!!
கிடைத்தது பத்தாயிரம் ரூபா பணம்!!
குழந்தைகளுக்காக தந்தை ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யும்படி தமிழ் மக்கள் கேட்டார்கள்.
ஜனாதிபதி மைத்திரியும் சித்திரைப் புத்தாண்டிற்கு முன் விடுதலை செய்வதாக உறுதியளித்திருந்தார்.
உறுதியளித்தபடி விடுதலை செய்யாதது மட்டுமன்றி ஏன் விடுதலை செய்யப்படவில்லை என்பதையும் ஜனாதிபதி தெரிவிக்கவில்லை.
இன்று ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளை நேரில் அழைத்து சந்தித்த வடமாகாண ஆளுநர் பத்தாயிரம் ரூபா பணத்தை வழங்கியுள்ளார்.
ஆனந்த சுதாகரனின் குழந்தைகள் தமது தந்தையின் விடுதலையை கோருகின்றார்களேயொழிய பண உதவி கோரவில்லை.
ஆளுநர் அளித்த விருந்தில் மாவை சேனாதிராசா, இந்திய தூதுவர் பாலச்சந்திரன், சரவணபவன் சிவமோகன் என பல தமிழ் தலைவர்கள் இருந்தனர்.
இவர்களில் ஒருவர்கூட ஆனந்த சுதாகரன் ஏன் விடுதலை செய்யப்படவில்லை என்று ஆளுநரிடம் கேட்கவில்லை.
ஆனந்த சுதாகரனின் குழந்தைகளுக்கு ஆறுதல் சொல்லக்கூட இந்த தலைவர்களுக்கு தோன்றவில்லை.
இனி அடுத்த தேர்தல் வரும்போதுதான் இவர்களுக்கு தமிழ் மக்களின் நினைவு வரும்.




No comments:
Post a Comment