Saturday, November 30, 2019

கொஞ்சம்கூட மூளையை பயன்படுத்துவதில்லை

கொஞ்சம்கூட மூளையை பயன்படுத்துவதில்லை என்று முடிவு செய்தவர்களுடன் வாதிடுவது செத்துப்போன மனிதனுக்கு மருந்து ஊட்டுவதற்கு நிகராகும்- அறிஞர் அண்ணா
ஒரு வருடத்தில் தீர்வு பெற்று தருவோம் என்று கூறி வோட்டு வாங்கிவிட்டு இதுவரை தீர்வு பெற்று தராதது தவறு இல்லையாம்
ஒவ்வொரு தீபாவளிக்கும் அடுத்த தீபாவளிக்குள் தீர்வு கிடைத்துவிடும் என்று அறிக்கை விட்டு மக்களை ஏமாற்றியது தவறு இல்லையாம்
வேலை கேட்டால் தீர்வு கிடைக்காமல் போய்விடும் என்று கூறிவிட்டு தமக்கு சொகுசு பங்களா, சொகுசு வாகனம் வாங்கியது தவறு இல்லையாம்.
ஆனால் அவர்கள் தேர்தலுக்கு வவனியா வரும்போது அவர்களுக்கு பாதிக்கப்பட்ட ஒரு பெண் செருப்பு காட்டியது மிகப் பெரிய தவறாம்.
அநத பெண் ஏன் கோத்தாவுக்கு செருப்பு காட்டவில்லை என்றும் அவர் ஒரு கட்சியால் தூண்டப்பட்ட பெண் என்றும் சுமந்திரன் விசுவாசிகள் கூறுகிறார்கள்.
போகிற போக்கைப் பார்த்தால் கோத்தாவிடம் காசு வாங்கிவிட்டுத்தான் அந்த பெண் சுமந்திரனுக்கு செருப்பு காட்டினார் என்று எழுதுவார்கள் போல் இருக்கிறது.
முதலாவது, இந்த பெண் 2009ல் செருப்பு காட்டவில்லை. 2019ல் பத்து வருடம் பொறுமையாக இருந்துவிட்டே காட்டியுள்ளார்.
இரண்டாவது, ஒரு வருடத்தில் தீர்வு பெற்று தருவோம் என்று கூறி யார் வோட் வாங்கினார்களோ அவர்களிடம்தான் அந்த பெண் தன் கோபத்தை காட்டியுள்ளார்.
மூன்றாவது, அவர் செருப்பு காட்ட வேண்டும் என்று அந்த இடத்திற்கு வரவில்லை. தலைவர்களுடன் பேசுவதற்காகவே வந்திருக்கிறார். கூட்டம் முடிந்து செல்லும்போது தலைவர்களுடன் பேச முடியும் என்று அவரிடம் பொலிசார் கூறியுள்ளனர். எனவே கூட்டம் முடியும்வரை அவர் பொறுமையுடன் இருந்துள்ளார். ஆனால் கூட்டம் முடிந்த பின்பு தலைவாகள் அவருடன் பேசாமல் வண்டியில் சென்றதாலே அவர் வேறு வழியின்றி செருப்பைக் காட்டியுள்ளார்.
நான்காவது, செருப்பை காட்டுவது தவறான கலாச்சாரம் கிடையாது. உலகில் அமெரிக்க ஜனாதிபதிக்கே அதிகளவு செருப்படிகள் விழுந்துகொண்டிருக்கின்றன. அதை தவறான கலாச்சாரம் என்று யாரும் கூறுவதில்லை.
ஜந்தாவது, சஜித் பிரேமதாசாவை ஆதரிக்காதவர்கள் எல்லாம் கோத்தாவின் கைக்கூலிகள் என்று தமிழ்தேசிய கூட்டமைப்பினர் கூறுகின்றார்கள். அவர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று “துரோகிகள்” என்றும் முத்திரை குத்துகின்றனர்.
இதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை. ஏனெனில் ஈழத் தமிழ் அரசியலில் இந்த “துரோகி” முத்திரை குத்தும் வழக்கத்தை ஆரம்பித்து வைத்தவர்களே இவர்கள்தான். இறுதியாக அதற்கு பலியாகுபவர்களும் இவர்களே.

No comments:

Post a Comment