Saturday, November 30, 2019

இரண்டு நாளில் 40 ஆயிரம் தமிழர்களை கொன்றுவிட்டு

இரண்டு நாளில் 40 ஆயிரம் தமிழர்களை கொன்றுவிட்டு அருகில் இருக்கும் ஏழு கோடி தமிழர் அமைதியாக இருந்து விடுவார்கள் என்று சிங்கள அரசும் இந்திய அரசும் நினைத்தன.
அது மட்டுமல்லாமல் தமிழ் மக்களுக்காக மாண்டவர்களை “பயங்கரவாதிகள்” என்றுகூறி இந்திய அரசு மேலும் ஜந்து வருடம் தடையை நீடித்துள்ளது.
ஆனால் இறந்தவர்கள் தமது “மாவீரர்கள்” என்று கூறி அந்த ஏழு கோடி தமிழர் ஒன்று திரண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
அது மட்டுமல்ல டில்லிக்கே சென்று தமிழ் மக்களை கொலை செய்த கோத்தாவுக்கு வைகோ அவர்களும் அவரது தொண்டர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இன்றைய அரசியல் சூழ்நிலையில் இப்படியான ஒரு எதிர்ப்பை காட்டுவதால் வைகோ விற்கு எந்த அரசியல் பயனும் இல்லை.
ஆனாலும் ஈழத் தமிழருக்கு ஆதரவாக அவர் கோத்தாவுக்கு எதிர்ப்பு காட்டியது பாராட்டுக்குரியது.
இனி இந்திய அரசு நினைத்தாலும் தமிழகத்தில் இருந்து தனக்கு எதிராக உருவாகும் எதிர்ப்பை தணிக்க முடியாது என்பதை கோத்தா நிச்சயம் உணர தொடங்குவார்.
இத்தனை நாளும் தன்னை எதிர்ப்பவர்கள் வெறும் நாற்பது லட்சம் என்றே கோத்தா நினைத்தார். ஆனால் இனி இது ஏழு கோடியே நாற்பது லட்சம் என்பதை அவர் இந்த இந்திய பயணத்தின் பின் உணருவார்.

No comments:

Post a Comment