Saturday, November 30, 2019

வடமாகாணத்திற்கு ஆளுநராக முரளிதரன் நியமனம்?

•செய்தி - வடமாகாணத்திற்கு ஆளுநராக முரளிதரன் நியமனம்?
யாழ் மாவட்டத்தில் எதற்கு இரண்டு இந்திய தூதர்கள்?
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமது உறவுகளுக்கு உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் நினைவஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் அவ்வாறு தமிழ் மக்கள் கொல்லப்பட்டதே தமக்கு மகிழ்சியான செய்தியாக இருந்தது என்று கூறிய முரளிதரனை தமிழ் மக்களுக்கு ஆளுநராக கோத்தபாயா நியமித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒருபுறம் பழையதை மறந்து நாட்டைக் கட்டியெழுப்ப வாருங்கள் என்று தமிழ் மக்களுக்கு அழைப்புவிடும் கோத்தபாயா மறுபுறத்தில் தமிழருக்கு எதிரான நடவடிக்கைகளை செய்கிறார்.
முதலில் முள்ளிவாய்க்காலில் கொலை செய்த இராணுவ தளபதியை பாதுகாப்பு செயலாளர் ஆக்கினார். அடுத்து முள்ளிவாய்க்கால் படுகொலை தனக்கு சந்தோசம் தந்;ததாக கூறிய முரளிதரளை ஆளுநராக்கியுள்ளார்.
அதேவேளை இந்திய அரசே முரளிதரனை நியமிக்கும்படி அழுத்தம் கொடுத்தாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் இருக்கும் இந்திய தூதரே அனைத்து விடயங்களிலும் தலையிட்டு வருகிறார்.
இந்நிலையில் ஆளுநரும் தமது ஆளாக இருக்க வேண்டும் என இந்திய அரசு விரும்புகிறது.
எமக்கு ஒருவிடயம் புரியவில்லை. எதற்காக யாழ் மாவட்டத்தில் இரண்டு இந்திய தூதுவர்களை வைத்திருக்க இந்திய அரசு விரும்புகிறது?
முரளிதரனை ஆளுநராக்கினால் தமிழக கட்சிகள் எதிர்ப்பு காட்டமாட்டாது என இந்திய அரசு நினைக்கிறதோ தெரியவில்லை.
இந்திய அரசு முரளிதரனை நியமிப்பதால் தமிழ்தேசிய கூட்டமைப்பும் எதிர்ப்பு காட்ட முடியாமல் பம்முகிறது.
ஆனால் தமிழ் மக்கள் தமது எதிர்ப்பை தயங்காமல் வெளிப்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment