Saturday, November 30, 2019

இவர்கள் பயங்கரவாதிகள் என்றார்கள்

இவர்கள் பயங்கரவாதிகள் என்றார்கள்
இவர்கள் இலங்கை ராணுவத்தைவிட அதிக தமிழ் மக்களை கொன்றவர்கள் என்றார்கள்
இவர்களிடமிருந்து தமிழ் மக்களை விடுவிப்பதற்காகவே யுத்தம் செய்தோம் என்றார் மகிந்த ராஜபக்சா
இவர்களை கொன்றதால்தான் தன்னால் சுதந்திரமாக திருகோணமலைக்கு சென்றுவர முடிகிறது என்றார் சம்பந்தர் ஐயா.
இவர்கள் செய்த குற்றங்கள் மற்றும் இனச் சுத்திகரிப்பையும் விசாரணை செய்ய வேண்டும் என்றார் சுமந்திரன்.
இவர்களால் இப்பவும் தமக்கு ஆபத்து என்று இந்திய அரசு தடையை நீடிக்கிறது.
ஆனால் தமிழ் மக்கள் கொட்டும் மழையிலும் இவர்களுக்காக அஞ்சலி செலுத்துகின்றனர்.
ஏனெனில் இவர்கள் தமது உறவுகள் என்பதற்காக அல்ல, மாறாக இவர்கள் தமக்காக மாண்டவர்கள் என்று உணர்வதாலேயே அஞ்சலி செலுத்துகின்றனர்.
எனவேதான் தமிழக தமிழர்கள் மட்டுமல்ல உலகெங்கும் வாழும் அத்தனை தமிழர்களும் இவர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.
அதனால்தான் எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனை தடைகளையும் தாண்டி தமிழ் மக்கள் இவர்களை நினைவு கூர்கின்றனர்.

No comments:

Post a Comment