Sunday, September 28, 2014

ராணுவத்திற்கான நில அபகரிப்பு நிறுத்தப்படுமா?

ராணுவத்திற்கான நில அபகரிப்பு நிறுத்தப்படுமா?
அன்று பயங்கரவாதிகளிடமிருந்து தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்காகவே யுத்தம் செய்வதாக மகிந்த ராஜபக்ச கூறினார்.
இன்று யுத்தம் முடிந்து ஜந்து வருடங்களின் பின்னரும் ராணுவம் தமிழ் பகுதிகளில் இருந்து வாபஸ் பெறப்படவில்லை.
ராணுவம் நிலைகொண்டிருப்பது மட்டுமன்றி தமிழ் மக்களின் நிலங்கள் ராணுவத்திற்காக தொடர்ந்து அபகரிக்கப்படுகிறது.
வலிகாமத்தில் மக்கள் இன்னும் மீள்குடியேற்றப்படவில்லை. எப்போது குடியேற்றப்படும் ? என்ற அந்த மக்களின் குரலுக்கு எந்த அரசு அதிகாரிகளும் பதில் அளிப்பதில்லை.
சம்பூரில் இந்திய அனல் மின்நிலையத்திற்காக வெளியேற்றப்பட்ட தமிழ் மக்கள் பிரச்சனை இன்னும் தீர்க்கப்படவில்லை. இது குறித்து பேசினாலே இந்திய அரசுக்கு பிடிக்காது என்று தமிழ் தலைவர்கள் மௌனம் காக்கின்றனர்.
இந்திய புதிய பிரதமர் மோடி இந்த பிரச்சனைகளை எல்லாம் தீர்த்து வைப்பார் என தமிழ் தலைவர்கள் கூறினார்கள். ஆனால் அவரோ மகிந்தவுக்கு விருந்து வைத்து மகிழ்கிறார்.
ஜ.நா வில் பேசி தீர்வு காண்போம் என்றார்கள். ஆனால் ஜ.நா வோ மகிந்தவை பேச அழைத்து வாய்ப்பு கொடுக்கிறது.
ஈழத்தாய் ஜெயா அம்மையார் ராணுவத்தை அனுப்பி தமிழர்களுக்கு விடிவு ஏற்படுத்துவார் என்றார்கள். அவரோ (இல்லாத) புலிகளால் தனக்கு ஆபத்து என்கிறார்.
தமிழின தலைவர் கலைஞர் உதவுவார் என எதிர்பார்த்தால் அவரும் “டெசோ” மாநாடு நடத்துவதுடன் முடித்துக்கொண்டார்.
பாவம் தமிழ் மக்கள். எல்லோரையும் நம்பி நம்பி ஏமாறுவதே அவர்கள் தலைவிதியாக இருக்கிறது!

No comments:

Post a Comment