நல்லது நடந்தால் கடவுள் செயல். கெட்டது நடந்தால் விதி எனில் மனிதனுக்கு மூளை எதற்கு?
மனித மூளையில் உள்ள மயலின் நரம்பிழைகளின் மொத்த நீளம் சுமார் 176000 கிலோ மீற்றர். மனித மூளையில் உள்ள 60 பில்லியன் நரம்பணுக்களில் சுமார் 10 பில்லியன் புறணிக் கோபுர உயிரணுக்கள். இவை தமக்குள் சமிக்கைகளை அனுப்பிக்கொள்ள ஏறத்தாழ 100 டிரிலியன் நரம்பிணைப்புகளை பயன்படுத்துகின்றன.
நல்லது நடந்தால் கடவுள் செயல் , கெட்டது நடந்தால் அது விதி எனில் இத்தகைய சிறப்பான மூளை மனிதனுக்கு எதற்கு? பூசை செய்யவா?
உலப் புகழ்பெற்ற அறிஞர் ஸ்டீபன் கேவாக்கிங் கேட்கிறார் “கடவுள் தன்னால் தூக்க முடியாத ஒரு கல்லைப் படைக்க முடியுமா?”
பக்தர்களே உங்கள் பதில் என்ன?

கடவுளால் அப்படி ஒரு கல்லைப் படைக்க வில்லை என்றாலும் அல்லது அப்படி ஒரு கல்லைப் படைத்து தூக்க முடியவில்லை என்றாலும் எல்லாம் வல்ல கடவுள் என்பது பொய்யாகிவிடும் அல்லவா!
ReplyDeleteநெல்லியடியில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டபோது “கலை மகள் உறைவது நாவில் எனில் அவள் மலசலம் கழிவது எங்கே? என்றும் “கல்வியைக் கொடுப்பது கலைமகள் எனில் கைநாட்டுக்காரர் நாட்டில் இருப்பது ஏன்?” என்றும் கேட்டு நெல்லடியடி சந்தை சுவரில் போஸ்டர் ஒட்டினோம். அதற்குகலைமகள் எமக்கு தண்டனை தரவில்லை. ஆனால் ஒரு சோசலிச “இயக்கம்”; இனி இப்படி எழுதினால் மண்டையில் வெடி விழும் என்றார்கள்.
ReplyDeleteகரவெட்டியில் ஒரு கோயில் திருவிழாவில் சுவாமி வெளி வீதியில் வலம் வந்து கொண்டிருந்தபோது இந்திய ராணுவம் துப்பாக்கிப் பிரயோகம் செய்தது. சுவாமியை அப்படியே நடுவீதியில் விட்டுவிட்டு பக்தர்கள் ஓடிவிட்டனர். இதனை அறிந்த நாம் “பக்தர்களை காப்பாற்ற முடியாத பிள்ளையார் கடவுள் அல்ல. மாறாக போராளிகளே கடவுள்” என எழுதி மதவடியில் ஒட்டினோம். வழக்கம்போல் பக்தகோடிகளால் இயக்கத்திடம் முறையிடப்பட்டது. கவனிக்கவும் பிள்ளையாரிடம் அல்ல இயக்கத்திடமே முறையிடப்பட்டது. நல்ல வேளையாக விசாரிக்க வந்த பொடியனுக்கு தங்களை கடவுள் என ஏழுதியது சந்தோசத்தைக் கொடுத்ததால் நாம் தப்பினோம்.
ReplyDeleteநாட்டிலும் சரி புலத்திலும் சரி ஒவ்வொரு ரோட்டிலும் கோயில் கட்டுகிறார்கள். ஆடம்பரமாக திருவிழா செய்கிறார்கள். இன்னொரு புறம் பாடசாலைக்கு நிதிகேட்டு மகிந்தவின் அமைச்சர்கள் காலில் விழுகிறார்கள். இவர்களின் செயல் என்னை வெட்கி தலை குனிய வைக்கிறது.
ReplyDelete