Tuesday, February 26, 2013

கலைஞர் முற்றும் துறந்த மனிதனும் அல்ல. குஸ்பு படிதாண்டா பத்தினியும் அல்ல

•7 தமிழர்களின் உயிர் தூக்கு கயிற்றில் ஊசலாடுவது பற்றியோ

•கூடங்குளத்தில் அணுக்கசிவு ஏற்பட்டுள்ளதாக கூறுவது பற்றியோ

•காவிரி நீர் இன்றி விவசாயிகள் தற்கொலை செயவது பற்றியோ

•கெலிகொப்டர் வாங்கியதில் ஜனாதிபதி ஊழல் பங்கு பற்றியோ

சிந்திக்கும் மக்கள் கவனத்தை திருப்ப ஆளும் வர்க்கம் உருவாக்கிய செய்தியே கலைஞர் குஸ்பு சமாச்சாரம் ஆகும்.

கலைஞர் முற்றும் துறந்த மனிதனும் அல்ல. குஸ்பு படிதாண்டா பத்தினியும் அல்ல.

“ஒருவனுக்கு ஒருத்தி இதுவே தமிழ் பண்பாடு” என்று மேடையில் முழங்கும் கலைஞர் சொந்த வாழ்வில் மனைவி, துணைவி, முன்னாள் மனைவி என பல மனைவிகளை வைத்திருப்பார். அதுபோல் குஸ்புவும் பல பேருடன் வாழ்வார். இது அவர்களுக்கு சகஜம். எனவே இது பற்றி நாம் அக்கறைப்படுவதற்கு எதுவும் இல்லை.

எமது அக்கறை எல்லாம் பரந்துபட்ட மக்களின் அடிப்படை பிரச்சனைகள் குறித்தே.

3 comments:

  1. ஒரு முறை (1991) மதுரை சிறையில் தி.மு.க இளைஞரணிப் பொறுப்பாளர் ஜெயப்பெருமாளுடன் உரையாடும்போது உங்கள் தலைவர் மேடையில் ஒருவனுக்கு ஒருத்தி. இதுவே தமிழர் பண்பாடு என்று பேசுகிறார். அனால் தன் சொந்த வாழ்வில் மனைவி, துணைவி என்று பக்கத்தில் இருவரை வைத்திருக்கிறாரே இது நியாயமா? எனக் கேட்டேன். அதற்கு அவர் “தலைவருக்கு கட்ஸ் இருக்கு வைத்திருக்கிறார். நீங்க ஏன் பொறாமைப் படுகிறீர்கள?”; எனக் கேட்டார். நல்ல தலைவர். நல்ல தொண்டர்கள். நல்ல கட்சி. நிச்சயம் உருப்படும் என்று நான் நினைத்துக்கொண்டேன்.

    ReplyDelete
  2. எம்.ஜி.ஆர் ஜெயலலிதா மற்றும் ஜெயலலிதா சோபன்பாபு என பிரபலங்களின் வாழ்வில் கிசு கிசு சகஜம்தான். அனால் இங்கு எனது கவலை என்னவெனில் தூக்கு கயிற்றில் 7 தமிழர்களின் உயிர் ஊசலாடுகிறது. அதுபற்றி அக்கறை கொள்ளாமல் இந்த பிரபலங்களின் கிசு கிசுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதுகிறோமே என்பதுதான்.

    ReplyDelete
  3. “குஸ்பு 18 வயதுக்கு மேற்பட்டவர். எனவே அவர் தனக்கு விருப்பமானவருடன் வாழ உரிமை உள்ளது. அதை விமர்சிப்பது ஆணாதிக்க மனோபாவம்”; என்று பெண் உரிமைவாதி கேட்கிறார். உண்மைதான். குஸ்பு விரும்பினால் பிரபுவுடன் வாழலாம். சுந்தர் சியுடன் வாழலாம். நாளை கலைஞருடனும் வாழலாம். இங்கு நான் அவுருடைய உரிமை குறித்து விமர்சனம் செய்யவில்லை. எனது கவலை எல்லாம் மக்களின் அன்றாட பிரச்சனைகளில் இருந்து கவனத்தை திருப்பவே இதுபோன்ற செய்திகள் பரப்பப்படுகின்றன என்பதூன்.

    ReplyDelete