Tuesday, February 26, 2013

சின்ன திருடனை தண்டிக்கும்படி பெரிய திருடன்களிடம் கெஞ்சிக்கொண்டிருக்கிறோம்.

•ஈராக், ஆப்கானில் அமெரிக்கா செய்ததையே
•தீபெத்தில் சீனா என்ன செய்து வருகிறதோ
•காஸ்மீரில், சதீஸ்கரில் இந்தியா என்ன செய்கிறதோ

அதையே மகிந்தா இலங்கையில் தமிழருக்கு செய்தார்.

ஆனால் நாங்களோ சின்ன திருடனை தண்டிக்கும்படி பெரிய திருடன்களிடம் கெஞ்சிக்கொண்டிருக்கிறோம். 

எங்கள் அறியாமையை என்னவென்று அழைப்பது?

•60 ஆயிரம் சிங்கள மக்கள் கொல்லப்பட்ட போது நாம் அக்கறை கொள்ளவில்லை.

•50 ஆயிரம் போஸ்னியர்கள் கொல்லப்பட்டபோது நாம் அக்கறை கொள்ளவில்லை. 

•இன்று காஸ்மீரில், சிரியாவில் மக்கள் கொல்லப்படுவதை நாம் கண்டு கொள்வதில்லை. 

ஆனால் 40 அயிரம் தமிழர் கொல்லப்பட்ட போது உலகம் கண்டு கொள்வில்லையே என்று கேட்க எமக்கு என்ன தகுதி இருக்கு?

இனியாவது உணர்ச்சி பூர்வமாக சிந்திப்பதை விடுத்து உணர்வுபூர்வமாக சிந்தியுங்கள்.

அமெரிக்கா, இந்தியா, ஜ.நா என்று நம்பி ஏமாறுவதை விடுத்து சொந்த மக்களை நம்புங்கள்.

2 comments:

  1. “இந்தியாவின் உதவி இன்றேல் நாம் போரில் வென்றிருக்க முடியாது” என்று கோத்தபாயா கூறுகிறார். அனால் சிலர் மகிந்தவை தண்டிக்க வேண்டும் என்று இந்தியாவிடம் கெஞ்சுகின்றனர். இந்த கோமாளித் தனத்தை என்னவென்பது?

    ReplyDelete
  2. மகிந்தவுடன் பேரம் பேச வசதியான சில படங்களை மட்டும் வெளியிடுவதை விட்டு அனைத்து போர்க்குற்ற படங்களையும் வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். மகிந்த மட்டுமல்ல அவருக்கு உதவிய ஏகாதிபத்தியங்களும் தண்டிக்கப்பட வேண்டும்.

    ReplyDelete