Wednesday, February 27, 2013

தொடரும் பாலியல் கொடுமைகள்

இலங்கை அரச படைகளின் தொடரும் பாலியல் கொடுமைகள்
மனித உரிமை காப்பகம்(Human Rights Watch) தெரிவிப்பு

2009 யுத்தம் முடிவற்ற பின்னரும் தமிழர்கள் மீது இலங்கை அரச படைகளால் பாலியல் சித்திரவதைகள் நடத்தப்படுவதாக Human Rights watch தெரிவித்துள்ளது. தனது 141 பக்க அறிக்கையில் அது இது தொடர்பாக பல விபரங்களை வெளியிட்டுள்ளது.

நாட்டில் தற்போது அமைதி நிலவுவதாகவும் சட்ட ரீதியான ஆட்சி நடைபெறுவதாகவும் ஜனாதிபதி மகிந்த தெரிவிக்கிறார். அனால் தற்போதும் தமிழ் மக்கள் மீது அரச படைகளின் பாலியல் கொடுமைகள் இடம்பெறுவதாக சர்வதே மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

“இலங்கையில் அமைதி நிலவுகிறது. எனவே தமிழ் அகதிகள் இலங்கைக்கு திரும்பி செல்ல வேண்டும்” எனக் கோரும் இந்திய மற்றும் ஜரோப்பிய அமெரிக்க அரசுகள் இதற்கு என்ன பதில் கூறப்போகின்றன? 

Human Rights Watch இன் அறிக்கையை படிக்க விரும்புவோர் கீழ்வரும் இணைப்பை பார்வையிடவும்.
http://www.hrw.org/news/2013/02/26/sri-lanka-rape-tamil-detainees

3 comments:

  1. இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு, ராணுவத்தினர் மற்றும் பாதுகாப்பு படையினரால் நிகழ்த்தப்பட்ட சித்ரவதைகள் பற்றிய தகவல்கள் அடங்கிய அறிக்கையை மனித உரிமை கண்காணிப்பு குழு லண்டனில் இன்று வெளியிட்டது.

    ReplyDelete
  2. இக்குழுவின் ஆசிய பிரிவு இயக்குனர் பிராட் ஆடம்ஸ் வெளியிட்டுள்ள 141 பக்க அறிக்கையில், தமிழ்ப் பெண்கள் மற்றும் ஆண்கள் சந்தித்த அடக்குமுறைகள் மற்றும் கொடுமைகள் குறித்த வாக்குமூலங்கள் இடம்பெற்றுள்ளன.

    ReplyDelete
  3. கடந்த 2006 முதல் 2012-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும் நூற்றுக்கணக்கானோர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ள பிராட் ஆடம்ஸ், இவர்கள் அனைவரும் சித்திரவதைக் கூடங்கள், அல்லது இரகசிய விசாரணை மையங்களில் இருந்த போது பாதிக்கப்பட்டவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    ReplyDelete