Saturday, March 2, 2013

மாத்தறையில் முஸ்லிம் மாணவிகள் மூவர் மீது தாக்குதல்


“ஹிஜாப், அபாயா அணியக் கூடாது”!- மாத்தறையில் முஸ்லிம் மாணவிகள் மூவர் மீது தாக்குதல்

இலங்கையில் முஸ்லிம்களுக்கும் ஹலால் முறைமையை அனுமதிக்கக் கூடாது!- பொது பலசேனா

இலங்கையில் முதன் முதலில் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம் நடத்தப்பட்டபோது வடக்கு கிழக்கு மற்றும் மலையக தமிழர்கள் அவர்களுக்காக குரல் கொடுக்கவில்லை.

பின்னர் மலையக தமிழர்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டு அவர்கள் நசுக்கப்பட்டபோது வடக்கு கிழக்கு தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை.

பின்னர் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு எதிராக இனவெறி கட்டவிழ்த்து விட்டபோது மலையக மக்கள் மற்றும் முஸ்லிம் மக்கள் குரல் கொடுக்கவில்லை.

சிறுபான்மை மக்களை தனித்தனியாக பிரித்து பேரினவாதம் ஒடுக்குமுறை மேற்கொள்வதை உணர்ந்து இனியாவது பொது எதிரிக்காக அனைத்து மக்களும் ஒன்றுபடல் வேண்டும். இதுவே வெற்றிக்கான ஒரே வழியாகும்.

சிறுபான்மை மக்களின் ஜனநாயகத்தை மறுக்கின்ற பெருபான்மையினம் ஒருபோதும் ஜனநாயகத்தை அனுபவிக்க முடியாது என்பதை சிங்கள மக்களுக்கு உணர்த்திடல் வேண்டும்.

5 comments:

  1. இலங்கையில் முஸ்லிம்களுக்கும் கூட ஹலால் முறைமையை அனுமதிக்கக் கூடாது என்றும் ஹலால் சான்றிதழ் வழங்கும் முறைமையை நாட்டில் இருந்து முழுமையாக அகற்ற வேண்டும் என்றும் கடும்போக்கு பௌத்த அமைப்பான பொதுபலசேனா அறிவித்துள்ளது.

    ReplyDelete
  2. இலங்கையில் 9 வீதமாக உள்ள முஸ்லிம்களால் பௌத்த மதத்துக்கும், கலாச்சாரத்துக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

    தற்போது அமுலில் உள்ள ஹலால் சான்றிதழ் வழங்கும் முறைமை நகைப்புக்குரியது என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

    ReplyDelete
  3. பொதுபலசேனா அமைப்பை அரசாங்க அமைச்சர்கள் சிலர் விமர்சிக்கின்றபோதிலும், அந்த அமைப்புக்கு அரசாங்கத்தில் உள்ள ஒருசில தரப்புக்களில் இருந்து ஆதரவு கிடைப்பதாகவும் கூறப்படுகின்றது.

    ReplyDelete
  4. கேகாலை மாவட்டத்தில் உள்ள மசூதி ஒன்றின் மீது கல்வீச்சு நடந்ததாகவும் சில செய்திகள் கூறுகின்றன.

    ReplyDelete
  5. மாத்தறை மாவட்டத்தில் முஸ்லிம் மாணவிகள் மூவர் இனந்தெரியாதோரினால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வகுப்பு முடிந்து வீடு திரும்பும் போது மாத்தறை மகானாம பாலத்தின் அருகில் வைத்து தடிகளுடன் வந்த பேரினவாத இளைஞர்கள் சிலர் இவர்களைத் தாக்கியுள்ளனர். இனிமேல் ஹிஜாப், அபாயா அணியக் கூடாது என்றும் பொலிஸில் முறைப்பாடு செய்யக் கூடாது என்றும் எச்சரித்துள்ளனர்.

    ReplyDelete