Thursday, March 7, 2013

தமிழீழம் அமைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்


இலங்கையில் தமிழீழம் அமைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இது அவரின் கருத்து மட்டுமல்ல சோனியா காந்தி, மன்மோகன் சிங் எல்லோருடைய கருத்தும் இதுதான்.

வாஜ்பாய் பிரதமாராக இருந்தபோதும் இதையே தெரிவித்தார். இன்று தமிழீழம் என குரல் கொடுக்கும் கலைஞர் அவர்களும் முதலமைச்சராக இருந்தபோது இலங்கை பிரிக்காமல் தீர்வு காணப்பட வேண்டும் என்றார். இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்ற ஜெயா அம்மையார் ஆட்சி பீடம் ஏறிய பின்பு தற்போது ஈழம் குறித்து பேசுவதில்லை.

இதிலிருந்து தெரிவது என்னவெனில் இந்திய ஆளும் வர்க்கம் ஒருபோதும் தமிழீழம் பிரிவதை ஏற்றுக்கொள்ளாது. ஒருவேளை இலங்கை அரசு சம்மதித்தாலும் இந்திய அரசு சம்மதிக்காது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

இது நன்கு தெரிந்தும் தமிழக தலைவர்கள் இந்திய அரசை எதிரி என்று கூறுவதில்லை. மாறாக அறிந்தும் அறியாமலும் இந்திய அரசின் நலன்களுக்கு உதவி வருகின்றனர். தங்களின் பதவி நலன்களுக்காக தமிழ் மக்களை பலி கொடுக்கின்றனர்.

இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிராக போராடுவோம்.
போலிதலைவர்களைஅம்பலப்படுத்திதூக்கியெறிவோம்.

7 comments:

  1. ராஜிவ் காந்தியை கொன்றிருக்காவிட்டால் இந்தியா தமிழீழம் பெற்றுத் தந்திருக்கும் என்று கூறும் அப்பாவிகள் சிலர் இருக்கின்றனர். ஆனால் ராஜீவ் கொலைக்கு முன்னரும் இந்திய அரசு தமிழீழத்தை ஆதரிக்கவில்லை என்பதை அவர்கள் தெரிந்து கொள்வதில்லை..

    ReplyDelete
  2. முள்ளிவாயக்கால் படுகொலைக்கு ஆயுதம் கொடுத்து, தனது ராணுவ நிபுனர்களை இரகசியமாக கொடுத்து உதவிய இந்திய அரசை, மகிந்தவை தண்டிக்கும்படி கேட்கும் தமிழக தலைவர்களின் அறியாமையை என்னவென்று அழைப்பது?

    ReplyDelete
  3. மத்திய அரசு தமிழீழம் கிடைப்பதை அனுமதிக்க மாட்டோம் என உறுதியாக தெரிவித்துள்ளது. ஆனால் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கலைஞர் மற்றும் திருமாவளவன் ஆகியோர் தமிழீழம் பெறாமல் ஓயமாட்டோம் என்று டெசோ மாநாடு நடத்துகின்றனர். இது எப்படி இருக்கு?

    ReplyDelete
  4. குடிக்க கஞ்சிக்கு வழியில்லை. பன்னீரில் குளிக்க கனவு காணுவதுமாதிரி கைது அடைத்து வைத்திருப்பவர்களை மகிந்த அரசு இன்னும் விடுதலை செய்யவில்லை. காணாமல்போனவர்களின் உறவினர்கள் கொழும்பு சென்று இது குறித்து கேட்கக்கூட அனுமதி மறுக்கப்படுகிறது. ஆனால் தமிழக தலைவர்கள் தமிழீழ கனவு காண்கின்றனர்.

    ReplyDelete
  5. இத்தனை அழிவுக்கு பின்னரும் இத்தனை அழிவுக்கும் உதவிய அன்னை சோனியாவின் கண்களில் இரக்கத்தை கண்டதாக லண்டன் தமிழர் ஒருவர் அறிக்கை விடுகிறார். இன்னும் சிலர் இந்திய உளவுத்துறை அதிகாரிகளை அழைத்து வந்து விருந்துண்டு மகிழ்கின்றனர். இப்படி இலங்கை தமிழரில் சிலர் பகிரங்கமாக துரோகம் இழைக்கும்போது தமிழ்நாட்டு தலைவர்களை எப்படி குற்றம் சொல்வது?

    ReplyDelete
  6. தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் “கோமாளிகள்” என்று முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகா கூறியிருந்தார். ஒரு ராணுவ தளபதி அரசியல் தலைவர்களை அதுவும் எமது தலைவர்களை எப்படி கோமாளிகள் என்று கூறலாம் என நானும் அப்போது ஆத்திரப்பட்டேன். அனால் இன்று எமது தலைவர்கள் நடந்து கொள்வதைப் பார்க்கும்போது அவர் சரியாகத்தான் கூறியிருக்கிறார் என நினைக்கத் தோன்றுகிறது.

    ReplyDelete
  7. இலக்கு இன்றி அம்பு எய்வதில்லை. சேரும் இடம் இன்றி பயணம் தொடங்குவதில்லை. அதுபோல் நண்பன், எதிரிகள் வகுக்காமல் புரட்சி நடைபெறுவதில்லை. எதிரியை நண்பன் என்றோ அல்லது நண்பனை எதிரி என்றோ தவறாக இனம் கண்டால் அந்த போராட்டம் ஒருபோதும் வெற்றி பெறப்போவதில்லை. இலங்கை தமிழர் விடுதலைக்கு இலங்கை அரசு மட்டுமல்ல இந்திய அரசும் எதிரி என்பதை நாம் சரியாக இனங்கண்டு கொள்ளவேண்டும். இல்லையேல் நாம் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. இந்திய அரசை நண்பன் என்று கூறுவோர் இலங்கை தமிழர் நலனில் அக்கறையற்றோர் என்பது மட்டுமல்ல இந்திய அரசின் நலன்களுக்கு துணை போவோர்கள் ஆவர்.

    ReplyDelete