Thursday, March 7, 2013

பெண்களுக்கு முழு சுதந்திரம் வாங்கிக் கொடுக்காத வரையிலும்,பாட்டாளி வர்க்கம் முழு விடுதலையை அடைய முடியாது." - லெனின்


பெண்களுக்கு முழு சுதந்திரம் வாங்கிக் கொடுக்காத வரையிலும்,பாட்டாளி வர்க்கம் முழு விடுதலையை அடைய முடியாது." - லெனின்

ஒரு முதலாளித்துவ குடியரசில் எவ்வளவு ஜனநாயகம் உள்ள நாடாக இருந்த போதிலும் தனிச் சொத்துரிமை இருக்கின்ற நாடான போதிலும் உலகத்தின் எந்தப் பகுதியிலும் அதிகமான முன்னேற்றம் அடைந்த நாட்டில் கூட பெண்களுக்கு ஆண்களைப் போல் முழு அளவுக்கு சமமான உரிமைகள் இல்லை.

முதலாளித்துவ ஜனநாயகம் என்பது சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் பற்றி அலங்காரமான சொற்றொடர்களும் கம்பீரமான வார்த்தைகளும் மிதமிஞ்சிய வாக்குறுதிகளும் ஆர்பாட்டங்களுமாக ஒலிக்கும் கோஷங்களும் உள்ள ஜனநாயகமாகும். ஆனால் பெண்களின் உண்மை நிலையை அதாவது சமத்துவமும் சுதந்திரமும் இல்லாது இருப்பதை மூடி மறைக்கிறது.

ஆனால் ´சோலிஸ்ட் ஜனநாயகம்´ என்பது புரட்டான பகட்டான போலியான வார்த்தைகளை அலட்சியப்படுத்துகிறது...

ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஒடுக்குவோர்களுக்கும் சுரண்டப்படுபவர்களுக்கும் சுரண்டுவோருக்கும் இடையே சமத்துவம் என்பது இல்லை. அப்படி ஏற்படவும் முடியாது.

ஆண்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சட்டப்பூர்வமான தனி உரிமைகளால் பெண்குலம் பாதிக்கப்படும் வரை மூலதனத்திலிருந்து தொழிலாளிக்கு விடுதலை கிடைக்காத வரை முதலாளி நில உரிமையாளர் வணிகர் ஆகியோரின் அதிகாரத்தில் இருந்து உழைக்கும் விவசாயிக்கு விடுதலை கிடைக்காத வரையில் உண்மையான சுதந்திரம் என்பது கிடையவே கிடையாது.

"ஒடுக்கப்பட்ட பெண்ணினத்துக்கு சுதந்திரமும், சமத்துவமும்...."

"தொழிலாளிகளுக்கும், உழைக்கும் விவசாயிகளுக்கும் சுதந்திரமும், சமத்துவமும்..."

"ஒடுக்குபவர்களுக்கு எதிராக, முதலாளிகளுக்கு எதிராக, ஏழை விவசாயிகளைச் சுரண்டும் பணக்கார விவசாய உடைமையாளர்களுக்கு எதிராகப் போராட்டம்..."

இதுவே நமது போர் முழக்கம்! இதுவே நமது பாட்டாளி வர்க்க உண்மை!!.

6 comments:

  1. பிரெஞ்சுப் புரட்சி நடைப்பெற்று 125- ஆண்டுகள் சென்றும் இந்நிலையே பெண்களுக்கு நீடிக்கிறது.

    ReplyDelete
  2. ஒவ்வொரு பெண்ணும் நிரந்தரமாகவே வீட்டுக்குள் புகுந்துக் கொண்டிருப்பதில் இருந்து வெளியேற வேண்டும். ஆண்களுக்கு இணையாக பெண்கள் தங்கள் உடல் உழைப்பை சமூகத்திற்காக பங்களிக்கும் போது ஆணுக்கு நிகராக பெண்கள் இருப்பார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

    ReplyDelete
  3. குழந்தை வளர்ப்பு, குடும்பத்தினருக்காக சமைப்பது, மற்றும் இதர வேலைகளை பெண்களுக்கான பொறுப்புகள் என்று அவர்கள் மீது திணிக்கப்பட்டு இருக்கிறது.பெண்களின் உணர்ச்சிகள் மழுங்கிப் போகும்படி செய்து அவமானகரமான அடிமைத்தன வாழ்க்கையிலிருந்து பெண்களைக் விடுவித்து சமூக ரீதியில் பயனுள்ள உழைப்பில் ஈடுபடச் செய்ய வேண்டும்.

    ReplyDelete
  4. பெண்களின் உடல் உழைப்புகளை குடும்பத்திற்கு மட்டும் உபயோகித்துக் கொண்டு இழிவான அநீதியை பெண்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது முதலாளித்துவம். இதன் மூலம் பெண்களை அடக்கி ஆளவும் எதற்கும் உபயோகமற்றவர்களாகவும் சித்திரித்து தங்கள் கட்டுக்குள் வைத்திருக்க முயல்கின்றனர்.

    ReplyDelete
  5. எங்கே நிலவுடைமையாளர்களும், முதலாளிகளும், வணிகர்களும் இருக்கிறார்களோ அங்கே சட்டத்தின்படி பெண்கள் ஆண்களுக்குச் சமமானவர்களாக இருக்க முடியாது.எங்கே நிலவுடைமையாளர்களும், முதலாளிகளும், வணிகர்களும் இல்லையோ, எங்கே உழைக்கும் மக்களின் அரசாங்கம் சுரண்டல்காரர்கள் இல்லாத புதிய வாழ்க்கையை நிர்மாணித்துக் கொண்டிருக்கிறதோ அங்கே சட்டப்படி ஆண்களும் பெண்களும் சமமாக இருப்பார்கள்.

    ReplyDelete
  6. தனித் தனிக் கருத்துகளாகத் தெரிவிப்பதற்கு ஒரு கட்டுரையே எழுதலாமே!

    ReplyDelete