Wednesday, January 31, 2018

•STF காவலுடன் சங்கிலி அறுக்க வந்தால் என்ன செய்வது?

•STF காவலுடன் சங்கிலி அறுக்க வந்தால் என்ன செய்வது?
கீழே படத்தில் இருக்கும் நபர் தமிழரசுக்கட்சி வேட்பாளர். ஒரு பெண்ணின் சங்கிலியை அறுத்தமைக்காக பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு வேட்பாளர் திருட்டுக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டால் அதற்கு தலைவர்கள் எப்படி பொறுப்பாகும் என சிலர் கேட்கலாம்.
டெலோவும் பிளாட்டும் முன்னாள் ஆயுததாரிகள். கறைபடித்த கரங்களின் சொந்தக்காரர்கள் என்று சுமந்திரன் கூறியிருக்கிறார்.
எனவே தமிழரசுக்கட்சியின் வேட்பாளர்கள் நிச்சயம் எந்தக் குற்றச்சாட்டும் இல்லாதவர்களாக இருப்பார்கள் என்று நம்பினோம்.
ஆனால் அப்படி இல்லையே.! சரி பரவாயில்லை.
இப்ப தமிழ் மக்களின் கவலை என்னவெனில் பதவிக்கு வர முன்னரே இப்படி திருடுபவர்கள் பதவிக்கு வந்தபின் எப்படி திருடுவார்கள்?
அதுமட்டுமல்ல பதவிக்கு வந்தபின் தமக்கு STF பொலிஸ் பாதுகாப்பு வேண்டும் என்பார்கள்.
அப்புறம் STF பாதுகாப்போடு வந்து சங்கிலி அறுத்தால் என்ன செய்வது?
இதைப் படித்தவிட்டு “அப்ப சுமந்திரன் STF பாதுகாப்போடு சங்கிலி திருடுகிறார் என்று கூறுகிறீர்களா?” என சிலர் கேட்கலாம்.
அவர்களுக்கு நான் சொல்வது “சே சே சுமந்திரன் அப்படி சில்றைத்தனமாக எல்லாம் திருடமாட்டார். அவர் லெவல் வேற”

No comments:

Post a Comment