Friday, January 19, 2018

•உப்பு போட்டு சோற்றை தின்பவன் ஒருவனாவது இல்லாமல் போய்விடுவானா என்ன?

•உப்பு போட்டு சோற்றை தின்பவன்
ஒருவனாவது இல்லாமல் போய்விடுவானா என்ன?
செய்தி- சாவகச்சேரியில் தமிழ்தேசியகூட்டமைப்பு வேட்பாளர் மீது தாக்குதல்.
சபாஷ். மானமுள்ள தமிழன் ஒருவன் இருக்கிறான் என்பதை காட்டியுள்ளது இச் சம்பவம்.
இதனை “ஜனநாயகப் படுகொலை” என்று ஒரு கூட்டம் இப்ப கத்திக்கொண்டு வரும் பாருங்கள்.
ஜனநாயகம் என்ற போர்வையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் அராஜகங்களை பொறுத்துக்கொண்டிருக்க முடியாது.
வீட்டுக்குள் புகுந்து வாக்குபோடும்படி கேட்கின்றனர். போடமுடியாது என்று கூறினால் பேசாமல் வரவேண்டியதுதானே. அதைவிடுத்து தகராறு பண்ணினால் உதைக்காமல் என்ன செய்வது?
நல்லாட்சி அரசின் ஆதரவுடன் சிங்கள பொலிஸ் பாதுகாப்புடன் தமிழ்தேசியகூட்டமைப்பு செய்யும் அக்கிரமங்களை பொறுத்துக்கொள்வது ஜனநாயகம் ஆகாது.
என்றுமில்லாதவாறு தேர்தல் அறிவித்த நாளில் இருந்து தமிழ்தேசியகூட்டமைப்பின் அராஜகங்கள் தலைவிரித்தாடுகின்றன.
சாவகச்சேரியில் தமிழ்தேசியகூட்டமைப்பு வேட்பாளர் மீது விழுந்த அடி
ஜனநாய விரோதம் அன்று. மாறாக ஜனநாயகத்தைக் காப்பதற்கான “மக்கள்அடி” இது.
சாவகச்சேரியில் ஏற்பட்ட தீப்பொறியை பாதுகாப்போம். பெரும் தீயாக தமிழ் பிரதேசம் யாவும் வளர்ப்போம்.

No comments:

Post a Comment