Friday, January 19, 2018

ஒரு ஈழப்போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தோழர் காந்தி தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்
“ஒரு ஈழப்போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தோழர் காந்தி தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
தோழர் காந்தி “பேரவை” அமைப்பின் சார்பாக மலையாளப்பட்டி முகாமில் தோழர் தமிழரசனிடம் மார்க்சிய அரசியலைக் கற்றவர்.
தோழர் தமிழரசன் மறைவுக்கு பின்னர் தோழர் பொழிலனை எனக்கு அறிமுகப்படுத்தியவரும் இவரே.
அடுத்து நான் எழுதும் நூலில் தோழர் காந்தியின் பங்களிப்பு பற்றிய விபரங்களை விரிவாக காணலாம்.
எனது நூல் பற்றி தோழர் காந்தி தெரிவித்த கருத்துகள் வருமாறு,
தோழர் பாலன் எழுதியுள்ள “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்னும் நூல் சிறப்பாக உள்ளது. அவருக்கு முதலில் எனது பாராட்டுக்கள்.
இந்த நூலைப்படித்ததும் எனது நினைவுக்கு வந்த சில விடயங்களை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
1984ல் பயிற்சியின் பொருட்டு தமிழ்நாட்டிற்கு வருகை தந்தேன். நான் வந்த தினம் நன்றாக நினைவில் இருக்கிறது. ஏனெனில் அன்றுதான் பிரதமர் இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்ட்ட நாளாகும்.
நானும் என்னுடன் கூட வந்த தோழர்களும் பெரம்பலூர் மலையாளப்பட்டியில் உள்ள எமது அரசியல் பயிற்சி முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.
அங்குதான் முதன் முதலில் தமிழரசன் என்னும் பெரிய தோழரை சந்தித்தேன். அவரும் சுத்தரம் தோழரும் மாறி மாறி எங்களுடனேயே நிரந்தரமாக தங்கினார்கள்.
நீளமான கொட்டில் இரவில் 3மணி நேரத்துக்கு ஒருவர் விழித்திருப்போம் அப்போது பெரியவரும் (தமிழரசன்)வெகுநேரம் எங்களுடன் விழுத்திருப்பார்.
இங்கு நான் ஓரு சம்பவத்தை சொல்ல வேண்டும். காலை உணவாக பெரும்பாலும் கடலைதான் நாங்கள் அவித்து உண்போம். அது எமக்கு அதிக செலவை ஏற்படுத்தியது.
அப்போது பெரியதோழர் (தமிழரசன்)ஒரு உத்தியை சொன்னார். குதிரைத் தீவனத்திற்காக பயன்படும் கொள்ளு சாப்பிடலாம் என்றார்.
செலவு குறைவு என்பதால் அதனையும் வாங்கிச்சாப்பிட்டேம்.
எமது தோழர்களால் அதனைச்சாப்பிட முடியாமல் பெரியவருக்குத் தெரியாமல் கொட்டியதை அவர் கேள்விப்பட்டு பின்னர் ஒன்று விட்டு ஒருநாள் என்ற அடிப்படையில் மாற்றி மாற்றி சாப்பிட்டோம்.
அதேபோல் தான் பால் தேனீருக்கு பதிலாக பருத்திப்பால் (பருத்திக்கொட்டையை அரைத்து) அதை தேயிலையுடன் வடிகட்டி குடித்தோம்.
இது ஆரம்ப காலங்களில் வயிறு உபாதையை கொடுத்த போதும் பின்னர் ஓரளவு பழகிக்கொண்டோம்.
தோழர் தமிழரசன் மிகவும் எளிமையாக பழகுவார். சிக்கனமாக நடந்துகொள்வார். ஒரே உடுப்புத்தான் பாவிப்பார். ஏந்த நேரமும் அவதானம் தவறாமல் இருப்பார்.
மலையாளப்பட்டியில் உள்ளவர்களுக்கு நாங்கள் இலங்கை அகதிகள் என்றுதான் தெரியும்
ஒருநாள் அங்குள்ள பண்ணையார் ஒருவரின் மகளுக்கு ஆடம்பரத் திருமணம் நடைபெற்றது. அங்கு எம்மையும் வரவழைத்து மதிய உணவு அளித்தார்கள்.
அன்றிரவு வந்த பெரியவரிடம் ( தமிழரசன்) இதைச் சென்னோம் அவர் மிகுந்த ஆத்திரப்பட்டார்.
மக்களைச் சுரண்டுபவர்களின் வீட்டுக்கு உணவுக்காக ஏன் போனீர்கள் என்று பெரிதும் ஏசினார்
இன்னும் ஒரு நாள் (கொள்ளிமலை பச்சமலை தொடரின் அடிவாரத்தில் தான் மலையாழப்பட்டி கிராமம் இருந்தது.) மேல் மலையில் பின் தங்கிய 60 கிராமங்கள் இருப்பதாகவும் இவர்களைத்தான் நாங்கள் சென்று பார்க்க வேண்டும் என்று எம்மை அழைத்துச்சென்றார்.
சுமார் 15 கிராமங்களுக்கு எமமை அழைத்துச்சென்ரார். ஒரு கிராமத்தில் உள்ள சத்துணவு கூடத்தில் அன்றிரவு தங்கினேம்.
அந்தக் கிராமத்தில் பெண்கள் கூட மேலாடையின்றியே காணப்பட்டனர். அவ்வளவு தூரம் அம்மக்கள் பின் தங்கியிருந்தனர்.
இரவில் கரடித்தொல்லை இருப்பதாகக் கூறி எம்மை துங்கவிட்டு பெரியவர் (தமிழரசன்)முழித்திருந்தார்.
மலையில் வைத்து எமது ஒரு தோழர் காய்ச்சலால் அவதிப்பட்டார் அவரை நாங்கள் கம்புகட்டி தூக்கி சுமந்து வந்தோம்.
அப்போது அங்குள்ள மக்களும் இவ்வாறுதான் நோய்வாய்ப்பட்டால் கீழே காவிவரவேண்டும் என்று எம்மை செயற்பாட்டு ரீதியாக உணர்த்தினார் தோழர் தமிழரசன்.
தோழர் தமிழரசன் அனைத்து வாகனங்களையும் ஓட்டவேண்டும் அனைத்து ஆயுதங்களையும் இயக்க வேண்டும் என்பதில் பேரவாக்கொண்டிருந்தார்.
புள்ளட் மோட்டபைக்கை ஓட்ட பிற்காலத்தில் என்னுடன் சேர்ந்துதான் அவர் பழகினார்.
அவர் எவ்வளவு துரம் இடதுசாரிப்புரட்சியில் பற்றுறுதி கொண்ட எஃகு உள்ளம் கொண்ட மனிதர் என்பது நெருங்கிப் பழகியவர்களுக்குத்தான் தெரியும்
அவரில் நான் கண்ட இன்னும் ஒரு பண்பையும் இங்கு கூற விரும்புகிறேன். உணவு இருக்கும் போது அதிகமாக சாப்பிடுவார். புpன்னர் உணவு இல்லாதவேளைகளில் தண்ணீரை மட்டும் குடித்துக்கொண்டு ஓரிரு நாட்களுக்கு கூட இருப்பார்.
ஒரு கொரில்லா வீரனுக்கு இப்பண்பு அவசியம் போலும். போராட்டத்தில் மாத்திரமல்ல வாழ்க்கையிலும் அவரிடம் நிறையப் பாடம் ஒவ்வோருவரும் கற்கவேண்டும் என நாம் பேசிக்கொள்வோம்.
பின்னர் நான் மதுரை மாவட்டம் வாடிப்பட்டிமுகாமிற்கு பயிற்சியின் பொருட்டு சென்றதன் பின்னர் பெரியவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனது.
அதன்பின்னர் சில மாதங்களில் நான் ஈழம் திரும்பினேன். ஈழத்தில் சில காலம் இருந்தபின் மீண்டும் எமது அமைப்பு பணி நிமித்தம் தமிழகம் சென்றேன்.
மீண்டும் தமிழகம் திரும்பியதும் சென்னையில் தோழர் தமிழரசனை சந்தித்தேன். அவர் எனக்கு சென்னையில் இரண்டு பேர்களை அறிமுகப்படுத்தி வைத்தார்.
ஒருவர் உலகத்தமிழினமுன்னேற்றகழக தலைவர் அறிஞர் பெருஞ்சித்திரனார். மற்றவர் எழும்பூர் தமிழ் மெட்டிக்குலேசன் பள்ளி ஆசிரியர் விசுவாச்சரம்.
அறிஞர் பெருஞ்சித்திரனார் மகன் பொழிலன் அறிமுகம் கிடைத்தது. அவர்மூலம் வள்ளியூரைச் சேர்ந்த மாணவர் எடிசன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது.
இவர்கள் எல்லோருடனும் பழகிய நாட்கள் மறக்க முடியாதவை. அனைவரும் எமக்கு ஆதரவாகவும் உதவிகரமாகவும் இருந்தார்கள்

No comments:

Post a Comment