Friday, January 19, 2018

இத்தனை தடவை புள்ளடி இட்டோம் இதுவரை எமக்கு கிடைத்தது என்ன?

•இத்தனை தடவை புள்ளடி இட்டோம்
இதுவரை எமக்கு கிடைத்தது என்ன?
1948 ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது முதல்
தமிழ்மக்கள பல தடவை வாக்களித்து விட்டார்கள்.
ஒவ்வொரு தடவையும் தமிழர் உரிமை பறிபோகிறதேயன்றி
தமிழ் மக்களுக்கு இதுவரை கிடைத்தது என்ன?
எதிர்க்கட்சி தலைவர் பதவியால் செய்ய முடியாததை
மாகாணசபை முதல்வர் பதவியால் செய்ய முடியாததை
பிரதேசசபை பதவியைப் பெறுவதன்மூலம்
என்ன செய்துவிட முடியும்?
ஒன்றும் செய்தவிட முடியாது என்றால்
அப்புறம் எதற்காக போட்டியிடுகின்றீர்கள்?
ஒருசிலருக்கு பதவி கிடைப்பதற்காக
அந்த ஒருசிலர் பணம் சம்பாதிப்பதற்காக
அந்த ஒருசிலர் சொகுசு வாகனம் அடைவதற்காக
அந்த ஒருசிலர் பொலிஸ் பாதுகாப்பு பெறுவதற்காக
நாம் தொடர்ந்து வோட்டு போட்டுக்கொண்டிருக்க வேண்டுமா?
முதலில் ஒரு வருடத்தில் தீர்வு என்றீர்கள்
பின்பு இருவாரத்தில் நல்ல செய்தி வரும் என்றீர்கள்
இந்தமுறை என்ன சொல்லி ஏமாற்றப் போகிறீர்கள்?
காணாமல் போனோரை கண்டு பிடிக்க முடியவில்லை
அரசியல் கைதிகளை விடுதலை செய்விக்க முடியவில்லை
இடம்பெயர்ந்தோரை மீள் குடியேற்றம் செய்ய முடியவில்லை
ஆகக்குறைந்தது, அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்து
அவர்களுக்கு மக்கள் ஆதரவு உண்டு என்பதையாவது காட்டியிருக்கலாமே?
அதற்குகூட உங்களில் ஒரு கட்சிகூட விருப்பம் கொள்ளவில்லையே?
பிரதேசசபை உறுப்பினர் பதவியைக்கூட
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க தயார் இல்லாத நீங்கள் எல்லாம்
அந்த மக்களுக்காக தியாகம் செய்யப்போகிறீர்கள் என்று எப்படி நம்புவது?
போங்கடா பரதேசி நாய்களா,
நீங்களும் உங்கட பதவி வெறியும்.

No comments:

Post a Comment