Wednesday, January 31, 2018

ஒரு ஈழத் தமிழனும் தங்கவேல் அய்யாவும் உரையாடல்!

ஒரு ஈழத் தமிழனும் தங்கவேல் அய்யாவும் உரையாடல்!
வன்னியில் இருக்கும் நான் கனடாவில் இருக்கும் தங்கவேலு அய்யாவுடன் முகநூலில் இன்று உரையாடினேன்
" நான் உண்மையான தமிழனா" என்று அவரிடம் கேட்டேன் .
சற்று யோசித்த தங்கவேலு அய்யா சில கேள்விகளுக்கு பதில் கூறுமாறு கேட்டார்.
இலங்கை தேசிய கீதத்தை தமிழில் ஒலிக்கவிட்டு இதை யார் எழுதியது என்று கேட்டார்?
அதை யார் எழுதியது என்று தெரியாது என்றேன்.
ஆனால் தேசியகீதம் ஒலிக்கும்போது உடனே எழுந்து நின்று சம்பந்தர் அய்யா ஆட்டியது போல் நானும் ஒரு சிங்க கொடியை ஆட்டிக் காட்டினேன்.
இதைப் பார்த்ததும்; தங்கவேலுவின் அய்யாவின் முகம் மலர்ந்ததை என்னால் உணர முடிந்தது.
அடுத்து, சம்பந்தர் அய்யா சொகுசு பங்களாhவில் தண்ணியடித்தக்கொண்டு ஒய்யாரமாக படுத்திருக்கும் படத்தை காட்டிவிட்டு அமைதியோடு என்னை நோக்கினார் தங்கவேலு அய்யா.
என்னால்தான் என் தலைவர் மீதான பற்றை அடக்க முடியவில்லை.
மறுபடியும் எழுந்து நின்று “சம்பந்தர் அய்யா வாழ்க” என்றேன்.
“தமிழ் மக்களுக்காக ஒரு சிறியவீட்டில் சிறிய கட்டிலில் அய்யா வாழ்வதாகவே என் கண்ணுக்கு தெரிகிறது” என்றேன்.
இப்போது தங்கவேலு அய்யா மகிழ்சியுடன் ஒரு புன்சிரிப்பை உதிர்த்தார்.
அடுத்து கனடாவில் சுமத்திரன் பேசிய வீடியோவை ஓடவிட்டார் தங்கவேலு அய்யா.
பொறுமையாக முழுவதும் பார்த்தேன். ஒன்றும் புரியவில்லை. ஆனால் நன்றாக தமிழ் மக்களை ஏமாற்றுகிறார் என்பது மட்டும் புரிந்தது. ஆனால் இதைக்கூறினால் தங்கவேலுக்கு அய்யாவுக்கு கொபம் வருமே.
எனவே, “அற்புதமான பேச்சு.. இவருக்கு வாழும் வீரர் பட்டம் கொடுத்தால் என்ன அய்யா?” என்று கேட்டேன்.
“அது ஏற்கனவே குகதாசன் சம்பந்தருக்கு கொடுத்துவிட்டார். எனவே சுமந்திரனுக்கு வேறு ஏதாவது பட்டம் கொடுக்க வேண்டும்” என்றார்.
குகதாசன் அய்யாவின் பெயரை தங்கவேலு அய்யா கூறியதும் “அதனால்தான் அவருக்கு சம்பந்தர் அய்யாவின் இணைப்பாளர் பதவி வழங்கப்பட்டதா அய்யா?” என்று கேட்டேன்.
உடனே தங்கவேலு அய்யாவின் முகம் கோபமாக மாறியது. “அது எங்கள் கட்சி விடயம். அதை நீ கேட்க முடியாது” என்றார்.
“அய்யா! எதிர்க்கட்சி தலைவரின் இணைப்பாளர் பதவி என்பது கட்சிப் பதவியும் இல்லை. அது உங்கள் கட்சி உள்விடயமும் இல்லை. யாரும் இதைப் பற்றி கேட்கலாம் அய்யா” என்றேன்.
அதுமட்டுமன்றி, “இந்த பதவியை தனக்கு தரும்படி சந்திரகாந்தன் நேரு கேட்டதாகவும் ஆனால் அவருக்கு கொடுக்காமல் குகதாசன் அய்யாவுக்கு கொடுத்ததாக கூறுகிறார்களே. இது உண்மையா அய்யா?” என்று கேட்டேன்
இதைக் கேட்டதும் அய்யாவுக்கு இன்னும் கோபம் அதிகரித்துவிட்டது. அதை ஒருவாறு அடக்கிக்கொண்டு “சந்திரகாந்தன் உமக்கு உறவோ?” எனக் கேட்டார்.
அய்யா! சந்திரகாந்தன் நேரு எனது உறவினர் இல்லை. அவர் உங்கள் தமிழ்தேசியகூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அய்யா” என்று நான் பதில் அளித்தேன்.
அதற்கு அவர் " உங்களுக்கு எல்லாம் சூடு சொரணை எதாவது இருக்கா ..." என வெறி பிடித்தாற்போல் கேட்டார் .
" அதெல்லாம் தெரியாது. அய்யா. ஆனால் .என்னிடம் வாக்காளர்; அட்டை இருக்கிறது ஐயா .." என பயபக்தியோடு வாக்காளர் அட்டையை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டேன்.
வாக்காளர் அட்டையைக் கண்டதும் தங்கவேலு அய்யா முகமலர்ச்சியோடு “ எங்களுக்கு வோட்டு போட்டமைக்கு வாழ்த்துக்கள்” என்றார்.
நான் குழப்பமாகி “ உங்களுக்கு போடுவதாக நான் சொல்லவில்லையே. அதுமட்டுமல்ல யாருக்கு போடுவது என்றுகூட இன்னும் நான் நினைக்கவேயில்லையே” என்றேன்.
அதற்கு தங்கவேலு அய்யா புன்சிரிப்புடன் “ நீங்கள் யாருக்கு வோட்டு போட்டாலும் அது சுமந்திரன் சின்னத்திற்கே விழும்” என்றார்.
“ஆமாம் ஆமாம். நன்றி” என்று கூறிவிட்டு வெளியே வந்த போது வெயில் அடித்துக் கொண்டிருந்தது, காற்று வீசிக்கொண்டிருந்தது. அவையாவும் “ஏக்கியராஜ்ஜிய” என கூறிக்கொண்டிருந்தது.
.நான் துண்டை எடுத்து தலையில் போட்டுக் கொண்டேன். கோமணத்தை இறுக்கிக் கட்டினேன். ஏனெனில் அதுவும் உருவப்பட்டுவிடக்கூடாதே!
குறிப்பு- இவை யாவும் உண்மைகள் நிறைந்த கற்பனை உரையாடல்.

No comments:

Post a Comment