Monday, May 25, 2020
மீண்டும் கரடி காரித் துப்பிடிச்சு!
மீண்டும் கரடி காரித் துப்பிடிச்சு!
ஆனால் இந்த முறை அது மல்லாந்து படுத்துக்கொண்டு தனக்குத்தானே காரித் துப்பிடிச்சு
முதலில், சுமந்திரன் கூற்று அவரது தனிப்பட்ட கூற்று. கட்சியின் கூற்று இல்லை என்று அறிக்கை
அடுத்து, சுமந்திரன் நேர்மையாக பதில் அளித்துள்ளார் என்று பாராட்டு அறிக்கை.
வயதான காலத்தில் ஒரு சொகுசு பங்களாவை தக்க வைப்பதற்காக எப்படியெல்லாம் பல்டி அடிக்க வேண்டியிருக்கு இந்த வயதான மனிதருக்கு.
பாவம் இந்த மனிதர். இந்த வயதான காலத்தில் தானே அழைத்து வந்த சுமந்திரனுக்குகூட அஞ்சவேண்டியிருக்கு.
Image may contain: 1 person, text
•எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
•எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
உலகெங்கும் உள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே!
மறக்கவும் முடியவில்லை
மன்னிக்கவும் முடியவில்லை
எமக்கென்னவென்று
கடந்து போகவும் முடியவில்லை
இறுதி மூச்சு உள்ளவரை
இவர்களுக்குரிய நீதியை
பெறாமல் ஓய்ந்து விடப் போவதுமில்லை.
ஈழத்தமிழர், தமிழக தமிழர் மட்டுமன்றி
உலகத் தமிழர் அனைவரும் ஒன்று சேர்வோம்
ஒருமித்துக் குரல் கொடு:ப்போம்.
இதுவே நாம் எதிரிக்கு
இன்று கொடுக்கப்போகும் செய்தி
ஆம். எங்கள் பகைவர் எங்கோ மறைவார்
நாம் அனைவரும் ஒன்றாதல் கண்டால்!
Image may contain: 4 people, shorts, outdoor and nature
அவர்கள் தம்மை சிங்கங்கள் என்கின்றனர்.
அவர்கள் தம்மை சிங்கங்கள் என்கின்றனர்.
எம்மை எறும்புகள் போல் நசுக்கிவிட்டதாக கூறி
போர் வெற்றிவிழா கொண்டாடுகின்றனர்.
ஆனால்,
அவர்கள் ஒரு விடயத்தை உணரவில்லை
எத்தனை எறும்புகளை நசுக்கி போட்டாலும்
எறும்புகள் வரிசையாக முன்னோக்கி வருமேயொழிய
ஒரு எறும்புகூட திரும்பி ஓடுவதில்லை
ஆனால் நாலு எருமை ஒன்றாக சேர்ந்தாலே
சிஙகம் வாலைச் சுருட்டிக் கொண்டு பயந்து ஓடும்.
அதுமட்டுமல்ல
சிங்கங்களைவிட எண்ணிக்கையில் எறும்புகள் அதிகம்.
அதில் ஒரு எறும்பு சிங்கத்தின் மூக்கினுள்ளேயோ
அல்லது காதின் உள்ளோயோ நுழைந்துவிட்டால்
அப்புறம் சிங்கம் செத்து தொலைவதைத் தவிர வேறு வழியில்லை.
எனவே நாம் எறும்புகளாகவே இருந்து கொள்கிறோம்.
நீங்கள் சிங்கங்களாகவே இருந்து கொள்ளுங்கள்.
எறும்புகள் ஒன்று திரள்கின்றன
ஒன்று சேர்ந்து ஒருமித்து வருகின்றன
இதுவே இன்றைய நாளில் சிங்கங்களுக்கு
எறும்புகள் சொல்லும் செய்தி!
Image may contain: 1 person, outdoor
முட்டைக்குள் இருக்கும் குஞ்சு வன்முறையை பாவித்து முட்டைக்கோதை உடைத்தே வெளிவருகிறது.
முட்டைக்குள் இருக்கும் குஞ்சு வன்முறையை பாவித்து முட்டைக்கோதை உடைத்தே வெளிவருகிறது.
கோழிக்குஞ்சிடம் சென்று யாரும் வன்முறையை பாவிப்பது தவறு. நீ அகிம்சைவாதியாக இரு என்று போதிப்பதில்லை
அதுபோல் தாயின் கருப்பைக்குள் இருக்கும் குழந்தைகூட பிறக்கும்போது வன்முறையை பாவித்து வெளிவருகிறது.
அதுமட்டுமல்ல அந்த குழந்தை பிறந்தவுடன் வீறிட்டு அழுவதே இந்த உலகில் அது செய்யும் முதல் போராட்டம்.
அழுத பிள்ளையே பால் குடிக்கும். அதுபோல் போராடிய இனமே விடுதலை பெறும்.
ஓடாத மானும் போராடாத இனமும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.
உலகில் நிகழ்ந்த அனைத்து விடுதலையும் வன்முறையிலேதான் நடந்துள்ளது.
அப்படியிருக்க தமிழ் இனம் மட்டும் அகிம்சை வழியில் விடுதலை பெற வேண்டும் என்று கூறுவது ஒன்றில் முட்டாள் தனமாக இருக்க வேண்டும்.
அல்லது அற்ப சலுகைகளுக்காக அடிமைத்தனத்தில் சுகம் காணும் பேர்வழகளின் உளறலாக இருக்க வேண்டும்.
ஒரு தேசிய இனத்தை அடக்கி ஒடுக்கும் எந்தவொரு தேசிய இனமும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது.
ஆனால், தமிழ் இனத்தை அடக்கி ஒடுக்கும் சிங்கள தேசிய இனத்துடன் 5 வயது முதல் வாழக் கிடைத்தது தனது பாக்கியம் என்று ஒரு தமிழ் தலைவர் கூறுவது அபத்தம்.
அதைவிட படு அபத்தமானது அவர் கூறியது சரி என்று நாலு பேர் நியாயப்படுத்த முயல்வது.
இது ஒன்றும் வியப்பு இல்லை. ஏனெனில் காலம் பூராவும் இப்படி கருங்காலிகளும் அதை நியாயப்படுத்தும் நாலு வெங்காயங்களும் இருக்கவே செய்கிறார்கள்.
Image may contain: one or more people and text
•கடவுள் முருகனும் தமிழ் பக்தனும் முள்ளிவாய்க்கால் படுகொலைகளும்
•கடவுள் முருகனும் தமிழ் பக்தனும்
முள்ளிவாய்க்கால் படுகொலைகளும்
பக்தன்- முருகா! தமிழ் கடவுளே! ஈழத்தில் எம் இனம் அழிகிறது. நீ கண் திறந்து பார்க்கக்கூடாதா?
முருகன்- பக்தா! நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்?
பக்தன்- எங்களை காப்பாத்து முருகா. எங்களை அழித்தவர்களை பழி வாங்கு முருகா. இந்த முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் நல்ல செய்தி கூறு முருகா!
முருகன்- என் கோயில் மீது விமானம் மூலம் குண்டு போட்டவர்கள். இப்போது ஹெலிகொப்டர் மூலம் பூ தூவுகிறார்கள். அவர்களையே என்னால் எதுவும் செய்ய முடியவில்லை அப்புறம் உன்னை எப்படி காப்பாற்றுவேன் என நம்புகிறாய்?
பக்தன்- என்ன முருகா இப்படி சொல்லுறாய்?
உன்னைவிட்டால் எமக்கு வேறு யார்தான் இருக்கிறார்கள்? “இயேசு சீக்கிரம் வருகிறார்” என்று கொஞ்சப் பேர் சொல்லித் திரியிறாங்க. அப்ப அவங்களிட்ட கேட்டுப் பார்க்கட்டுமா?
முருகன்- நவாலியில் அவரது தேவாலயத்தின் மீதே குண்டு போட்ட போது அவர் வந்தாரா? அல்லது அவரது பங்கு தந்தை கருணாகரன் அடிகளார் கிளைமோர் குண்டில் கொல்லப்பட்டபோது வந்தாரா? அல்லது அண்மையில் 3 தேவாலயத்தில் குண்டு வெடித்து பலர் இறந்தார்களே. அப்பவாவது அவர் வந்தாரா?
பக்தன்- இல்லை முருகா! அவர் இன்னும் வரவில்லைதான். அப்ப அல்லா விடம் கேட்டுப் பார்க்கட்டுமா?
முருகன்- தன் பள்ளிவாசல்கள் எரிக்கப்படுவதையே அவரால் தடுக்க முடியவில்லை. அப்புறம் உங்களை எப்படி அவரால் காப்பாற்ற முடியும்? இந்த ஏடறிந்த 2000 வருடத்தில் யாராவது ஒரு கடவுளாவது வந்திருக்கிறாரா? ஏன் எந்தக் கடவுளும் இப்ப வருவதில்லை என்று எப்பவாவது சிந்தித்திருக்கிறீர்களா?
பக்தன்- ஆமாம் ஆமாம் முருகா! அப்ப கடவுள் மதம் எல்லாம் பொய்யா?
முருகன்- “உழைத்து உழைத்து உருக்குலைந்துபோன மக்களை மேலெழும்பவிடாமல் அழுத்திவைக்கும் ஆபத்தான ஆயுதங்களே மதமும் கடவுளும்” என்று தோழர் லெனின் சொல்லியிருப்பதை நீ அறியவில்லையா?
பக்தன்- என்ன முருகா நீயும் கம்யுனிஸ்ட்; ஆகி விட்டாயா?
முருகன்- ஹா ஹா ஹா! சரி இதை அப்புறம் பேசுவோம். இப்ப உன் பிரச்சனையைப் பார்ப்பம்.
பக்தன்- ஆமாம் முருகா! எம் தமிழ்இனம் விடுதலை பெற வழிகாட்டு முருகா.
முருகன்- உன் மூதாதையர் 100 வருடம் ஆண்ட போர்த்துக்கேயரை எப்படி விரட்டினார்கள்? 100 வருடம் ஆண்ட ஒல்லாந்தரை எப்படி விரட்டினார்கள்? 150 வருடம் ஆண்ட ஆங்கிலேயரை எப்படி விரட்டினார்கள்?
பக்தன்- எப்படி முருகா?
முருகன்- அப்போதும் நான் நல்லுர் கோவிலில் இருந்தேன். ஆனால் அவர்கள் உன்னைப்போல் வந்து என்னிடம் கேட்டுக்கொண்டிருக்கவில்லை. அவர்கள் நம்பிக்கையுடன் போராடி விரட்டியடித்தார்கள்.
பக்தன்- 150 வருடம் ஆண்ட ஆங்கிலேயர்களை விரட்டியடித்த எம்மால் 60 வருடம் ஆளும் இலங்கை அரசை விரட்டியடிக்க முடியவில்லையே. அது ஏன் முருகா!
முருகன்- அன்று, ஆங்கிலேயர் நல்லாட்சி செய்வதாக கூறுவதற்கு சம்பந்தர் சுமந்திரன்கள் உங்கள் மூதாதையர் மத்தியில் இருக்கவில்லை.
பக்தன்- இருந்தாலும், ஆயுதம் ஏந்தியவர்கள் பயங்கரவாதிகள் என்று சம்பந்தர் அய்யா கூறுவது நியாயம்தானே?
முருகன்- அப்படியென்றால் உலகின் முதலாவது பயங்கரவாதி நான்தானே? நான் அகிம்சை வழியிலா சூரனை அழித்தேன்? வேலாயுதம் ஏந்தி போர் செய்துதானே சூரனை அழித்தேன்
பக்தன்- என்ன இருந்தாலும் போர் அழிவு அதிகமாக இருக்கிறது முருகா. நாங்க மீண்டும் எழும்ப முடியுமா?
முருகன்- வீழ்வது கேவலம் இல்லை. வீழ்ந்து கிடப்பதுதான் கேவலம். வீழ்வது மீண்டும் எழுவதற்கே! மிதிபடும் புழுகூட துடித்து எழுகிறது. வீரம் செறிந்த போராட்ட வரலாற்றைக் கொண்ட இனம் நீங்கள் மீண்டும் எழும்ப முடியும். அதுவும் முன்பைவிட பலமாக எழும்ப முடியும்.
பக்தன்- கேட்க நல்லாத்தான் இருக்கு முருகா! ஆனால் இது சாத்தியமா?
முருகன்- ஏன் சாத்தியமில்லை? 1971ல் அழிக்கப்பட்ட ஜே.வி.பி மீண்டும் எழவில்லையா? 1989ல் 60 ஆயிரம் இளைஞர்கள் கொல்லப்பட்ட பின்பும்கூட ஜே.வி.பி மீண்டும் எழுந்துதானே நிற்கிறது. சிங்கள் மக்களால் மீண்டும் எழுந்து நிற்க முடியுமென்றால் தமிழ் மக்களால் ஏன் முடியாது?
பக்தன்- ஆம் முருகா! இரந்து கேட்பதற்கு உரிமை ஒன்றும் பிச்சை அல்ல. அது போராடிப் பெற வேண்டியது. ஓடாத மானும் போராடாத இனமும் வாழ முடியாது.
முருகன்- போராடாத இனம் உரிமை பெறுவதில்லை. போராடிய இனம் உரிமை பெறாமல் விட்டதில்லை. தமிழ் இனம் நடத்தும் போராட்டமும் நிச்சயம் வெற்றி பெறும். வாழ்த்துகள்.
Image may contain: 1 person, standing
•எத்தனை தடைகள் அத்தனையும் தாண்டி நினைவு அஞ்சலிகள்!
•எத்தனை தடைகள்
அத்தனையும் தாண்டி நினைவு அஞ்சலிகள்!
பொலிசார் தடை
இராணுவம் தடை
புலனாய்வு துறையினர் தடை
நீதிமன்றம்கூட தடை
மொத்த அரசும் தடையை மேற்கொண்டது
அத்தனை தடைகளையும் தாண்டி
தமக்காக மாண்டவர்களை
மக்கள் நினைவு கூறிக் கொண்டிருக்கின்றனர்.
எங்கு மக்கள் கொன்று புதைக்கப்பட்டார்களோ
அந்த முள்ளிவாய்க்கால் தொடக்கம்
உலகெங்கும் எங்கு தமிழ் மக்கள் வாழ்கிறார்களோ
அங்கெல்லாம் மக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர்.
முகநூலில் நினைவு அஞ்சலி
இணைய தளங்களில் நினைவு அஞ்சலி
பாடல்கள் கவிதைகள் கட்டுரைகள்
குறும் ஒலி ஒளி நாடாக்கள் என
எங்கும் எதிலும் நினைவு அஞ்சலிகளே
ஆம். கலை கலாச்சாரம் பண்பாட்டு தளங்கள்
எல்லாவற்றிலும் நினைவு அஞ்சலி வடிவங்கள்
அடுத்த சந்ததிக்கு கடத்தப்பட்டு விட்டது
அடுத்த சந்ததி வெறுமனே
அழுதுவிட்டு ஓய்ந்து விடும் என எண்ணாதீர்கள்.
அது தனக்குரிய நீதியைப் பெறாமல்
ஒருபோதும் அமைதியாக இருந்துவிடாது
நடந்தது இனப்படுகொலை அல்ல
வெறும் போர்க்குற்றம் மட்டுமே என்றவர்
இனப் படுகொலைக்கு நீதி பெறாமல்
தமிழ் மக்கள் ஓய்ந்துவிடமாட்டார்கள்
என்று இம்முறை அறிக்கை விட்டிருக்கிறார்
பத்து வருடமாக என்னத்தைக் கிழித்தீர்கள்
என்று கேட்டு எள்ளி நகையாடியவர்களுக்கு
தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து ஒருமித்து
சொல்லியிருக்கும் செய்தி இதுதான்.
மறக்கவும் மாட்டோம்
மன்னிக்கவும் மாட்டோம்
எமக்குரிய நீதியைப் பெறாமல்
ஓய்ந்துவிடவும் மாட்டோம்.
Image may contain: one or more people
Image may contain: fire and outdoor
Image may contain: 1 person, fire and food
Image may contain: one or more people, outdoor and nature
• ஹோசிமினை எப்படி நினைவு கூருவது?
• ஹோசிமினை எப்படி நினைவு கூருவது?
இன்று வியட்நாம் தந்தை என புகழப்படும் ஹோசிமின் அவர்களின் 130 வது பிறந்த தினம் ஆகும்.(19.05.1890)
26 வருடங்கள் அமெரிக்க வல்லரசுக்கு எதிராக போராடி வெற்றியை பெற்றுக் கொடுத்தவர் ஹோசிமின் அவர்கள்.
உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? என்று ஹோசிமின் அவர்களிடம் கேட்டபோது “ கசப்பான உண்மையாக இருந்தாலும் அதை மறைக்காது மக்களிடம் கூறினேன். அவர்கள் எனக்கு வெற்றியை பெற்றுத் தந்தார்கள்” என்றார்.
ஆனால் இன்று சில தமிழ் தலைவர்கள் உண்மையை மக்களிடம் கூறுவதற்கு தயங்குகிறார்கள்.
தமிழ் மக்கள் விடுதலை பெற வேண்டும் என உண்மையாகவே அவர்கள் விரும்புவார்கள் எனில் அவர்கள் ஹோசிமின் கூறியபடி கசப்பான உண்மையாக இருந்தாலும் அதை மக்களுக்கு கூற முன்வரவேண்டும்.
இந்தியா மிகப்பெரிய வல்லரசு. அதனை எதிர்த்து ஈழத் தமிழர்களால் வெற்றி பெற முடியாது என்று கூறுபவர்களும் ஹோசிமின் வரலாற்றை படிக்க வேண்டும்.
வியட்நாம் மக்களால் அமெரிக்க வல்லரசின் ஆக்கிரமிப்பை விரட்டியடிக்க முடியுமென்றால் தமிழ் மக்களால் ஏன் இந்திய ஆக்கிரமிப்பை முறியடிக்க முடியாது?
நிச்சயமாக முடியும்!
Image may contain: 1 person, sitting, table and outdoor
Subscribe to:
Posts (Atom)