Monday, June 29, 2020
தூத்துக்குடி அல்ல,
•தூத்துக்குடி அல்ல,
அது துயரக்குடி!
அன்று 14 அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றார்கள். இன்று அப்பாவி தந்தையையும் மகனையும் கொன்றுள்ளார்கள்.
பொலிஸ் மக்களின் நண்பன் இல்லை. அது அரசின் ஏவல்படை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாய் உள்ளது.
சிதம்பரத்தில் பத்மினி என்ற பெண் பொலிசாரால் பாலியல் வல்லுறவு செய்து கொல்லப்பட்டபோது அந்த பொலிஸ் நிலையத்தையே குண்டு வைத்து தகர்த்த தமிழ்நாடு விடுதலைப்படைத் தளபதிகள் லெனின் , சுதந்ரம் போன்றவர்கள் இன்று இல்லையே என ஏக்கத்தை தருகிறது.
Image may contain: 2 people, including Antony Suresh
வெற்றியைவிட பெரிசாக ஒன்று இருக்கிறது என்றால்
•வெற்றியைவிட பெரிசாக ஒன்று இருக்கிறது என்றால்
அது எதிரிகளுக்கு நாம் கொடுக்கிற நடுக்கம்தான்!
புலிகளை தடை செய்துவிட்டோம் என்றார்கள்
புலிகளை கொன்று புதைத்து விட்டோம் என்றார்கள்.
புலிகளை வெற்றி கொண்டுவிட்டோம் என்றார்கள்
ஆனாலும் அவர்கள் நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
சங்கிகளுக்குகூட தம்மை விளம்பரப்படுத்த பிரபாகரன் படம்தான் தேவையாக இருக்கிறது.
தென்னிந்தியாவில் அதிக சம்பளம் பெறும் சினிமா நடிகரான விஜய்க்குகூட விளம்பரப்படுத்த பிரபாகரன் படம் தேவையாக இருக்கிறது.
தமிழ்நாடு மக்கள் மனங்களில் பிரபாகரன் இருக்கிறார் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று தேவை?
Image may contain: 3 people, including கோவி. ரமேஷ் and Kanagarajk Rajk, people standing
சிரித்துக் கொண்டு செருக்களம் புகுர முடியும்
•சிரித்துக் கொண்டு செருக்களம் புகுர முடியும் ஆனால்
சிரித்துக்கொண்டு மரணத்தை முத்தமிட முடியுமா?
“சிரித்துக் கொண்டு வாடா தமிழா செருக்களம் புகுர” என்று தமிழர் விடுதலைக்கூட்டணி தலைவர்கள் 1977களில் மேடைகளில் பேசுவதுண்டு.
ஆனால் இவ்வாறு அழைத்த எந்த தலைவர்களும் களம் புகுரவில்லை. அதுமட்டுமல்ல தங்கள் பிள்ளைகளையும் களத்திற்கு அனுப்பவில்லை.
சரி அதை விடுவம். அதைக் கதைப்பதில் இப்ப எந்த பயனும் இல்லை. ஆனால் களம் புகுந்த இளைஞர்கள் சிரித்துக் கொண்டே புகுந்தனர் என்பதில் ஜயம் இல்லை.
அதேவேளை, சிரித்துக்கொண்டே மரணத்தை முத்தமிட முடியுமா என்று நான் சந்தேகப்பட்டது உண்டு.
போராடிக் கொண்டிருக்கும்போது இறப்பது வேறு. ஆனால் இறப்பதற்கென்றே போராட செல்வது வேறு. அதுவும் சிரித்துக் கொண்டே செல்வது இன்னும் வேறுவிதமானது.
அதுவும் எமது காலத்தில் எம் கண் முன்னால் அந்த அதிசயத்தை எமது இளைஞர்கள் செய்து காட்டியுள்ளார்கள் என்பதை அறியும்போது பெரிமிதமாக இருக்கிறது.
இதோ போர்க் என்ற இளைஞரை பாருங்கள்.
மாங்குளம் ராணுவமுகாமை தாக்குவதற்கு வெடிமருந்து நிரப்பிய வாகனத்தை சிரித்த முகத்துடன் அவர் விடைபெற்று செல்வதைப் பாருங்கள்.
இன்னும் சில நிமிடங்களில் அவர் மரணமடையப் போகிறார் என்பது அவருக்கு நன்கு தெரியும்.
இந்த இறுதி நிமிடங்களில் அவரின் பெற்ற தாயின் முகம் நினைவுக்கு வந்திருக்கும்.
அவரது சகோதரர்களின் நினைவுகள்கூட வந்திருக்கும். அவர் பிறந்து வளர்ந்த மண் நினைவுக்கு வந்திருக்கும்.
இத்தனையும் தாண்டி அவரால் எப்படி சிரித்த முகத்துடன் சென்று மரணத்தை முத்தமிட முடிந்தது?
பெண்களை கர்ப்பமாக்கி தற்கொலைதாரிகளாக அனுப்புகிறார்கள் என்று மணி ரத்தினம் படம் எடுத்தார்.
போதை மருந்து கொடுத்து தற்கொலைதாரிகளை அனுப்புகிறார்கள் என்று இலங்கை அரசு பிரச்சாரம் செய்தது.
போராட சென்றவர்களை பலவந்தமாக தற்கொலைதாரிகளாக மாற்றுகிறார்கள் என்று இந்திய அரசு கூறியது.
ஆனால் இதெல்லாம் தவறான, பொய் பிரச்சாரம் என்பதை நிரூபிக்கும் பல சாட்சியங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
எதிர்காலத்தில் வரலாறு இவர்களை எப்படி அடையளப் படுத்தப் போகின்றது என்று தெரியவில்லை.
ஆனால், சிரித்தக்கொண்டே மரணத்தை முத்தமிட முடியும் என்பதை நிரூபித்த இவர்களது தியாகம் எந்தவித சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டது. அற்புதமானது.
Image may contain: 1 person
புலிகள் களத்தில் இருக்கும்வரை
புலிகள் களத்தில் இருக்கும்வரை புலிகள் மீதான விமர்சனம் என்பது மாற்று கருத்து என்ற அரசியல் தன்மை இருந்தது.
ஆனால் கடந்த பத்து வருடமாக புலிகள் இல்லாத நிலையில் புலிகள் மீதான விமர்சனம் என்பது இன்னொரு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு உதவுவதாக இருக்க வேண்டும்.
மாறாக புலிகள் மீதான விமர்சனம் என்பது எதிரிகளான இலங்கை இந்திய அரசுகளுக்கு உதவி செய்பவையாக இருக்கக்கூடாது.
தமது புலிகள் மீதான விமர்சனம் இலங்கை இந்திய அரசுகளுக்கே உதவுகிறது என்று தெரிந்தும் ஏன் சிலர் அவ்வாறு செய்கிறார்கள்?
ஏனெனில் போராடாமல் இருப்பதற்கு அது அவர்களுக்கு உதவுகிறது.
புலிகள் மீதான விமர்சனம் என்பது போராடாமல் இருப்பதற்கு அவர்களுக்கு உதவுகிறது.
Image may contain: 1 person, text
த்தூ! காறி உமிழுங்கள்
த்தூ! காறி உமிழுங்கள்
இந்த வயதான மனிதரின் கேவலமான செயலுக்கு!
சம்பந்தர் ஐயா பதவியைப் பெறுவதற்காக கீழ் இறங்குவார் என்று தெரியும். ஆனால் இந்தளவுக்கு இறங்குவார் என்று யாரும் எதிர் பார்த்திருக்க முடியாது.
பதவி போனபின்னும் பதவியால் கிடைத்த சொகுசுபங்களாவை விடமால் கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கும் இந்த மனிதர் பதவியைப் பெறுவதற்காக கேவலமான வழியில் இறங்குவது ஆச்சரியம் இல்லைத்தான்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணியினரின் வேட்பாளரை தம் அணிக்கு தாவ வைத்திருப்பது அதுவும் பணம் கொடுத்து தாவ வைத்திருப்பது அசிங்கமானது என்று இந்த மூத்த தலைவருக்கு தெரியவில்லையா?
ஒருவேளை அந்த வேட்பாளரே விரும்பிக் கட்சி மாறினாலும் அது சரியில்லை என்று கூறி அனுப்பியிருக்க வேண்டிய இந்த வயதான தலைவர் மாறாக பணம் கொடுத்து கட்சி மாற வைத்து வெற்றி பெற வேண்டுமா?
இவருடைய கட்சி எம்.பி வியாழேந்திரன் 50 கோடி ரூபா வாங்கிக்கொண்டு மகிந்த அணிக்கு தாவியதை கண்டித்த இந்த வயதான தலைவர் இனி எந்த முகத்துடன் கட்சி தாவுவதைக் கண்டிக்க முடியும்?
தமிழ்தேசியக் கூட்டமைப்பு சார்பில் ஒரு தும்புக்கட்டையை நிறுத்தினாலே ஈசியாக ஜெயிக்கும் என்றவர்கள், அதுவும் சம்பந்தர் ஐயா படுத்துக்கொண்டே ஜெயிப்பார் என்றவர்கள் இப்போது மாற்றுக் கட்சியினரை அதுவும் வேட்பாளரையே பணம் கொடுத்து மாற்றுகின்றார்கள் என்றால் அதன் அர்த்தம் என்ன?
தோல்விப் பயம் சுமந்திரனுக்கு மட்டுமல்ல இந்த வயதான தலைவருக்கும் வந்துவிட்டது. அதனால்தான் வெற்றி பெறுவதற்காக எந்த லெவலுக்கும் இறங்க தயாராகி விட்டனர்.
பொதுவாக தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி இப்படி வேட்பாளர்களை விலைக்கு வாங்கி அசத்துவார். இம்முறை சம்பந்தர் ஐயா இதனை செய்து தான் ஈழத்து கருணாநிதி என்பதை நிரூபித்துள்ளார்.
No photo description available.
Image may contain: 2 people, people sitting
•சர்வதேசமயமாகும் தமிழக பொலிஸ் கொலை!
•சர்வதேசமயமாகும் தமிழக பொலிஸ் கொலை!
தமிழ்நாட்டில் சாத்தான்குளத்தில் பொலிஸ் மேற்கொண்ட இரட்டைக் கொலை இந்தியாவையும் தாண்டி சர்வதேச கவனத்தை பெற்று வருகிறது.
அமெரிக்காவில் நடைபெற்ற கறுப்பு இனத்தவரின் கொலை எப்படி சர்வதேச கவனத்தை பெற்றதோ அதேபோன்று தமிழக பொலிசின் கொலையும் சர்வதேசத்தின் கவனம் பெற்று வருகிறது.
கொல்லப்பட்ட தந்தையும் மகனும் மாரடைப்பு வந்து இறந்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகிறார்.
அதேவேளை இறந்த இருவருக்கும் தலா பத்து லட்சம் ரூபா வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் தெரிவிக்கிறார்.
இதில் இருந்து என்ன தெரிகிறது? சுகயீனம் காரணமாக இறந்தார்கள் என்ற காவல் கண்காணிப்பாளரின் கூற்றை தமிழக முதலமைச்சரே நம்பவில்லை அல்லது எற்றுக்கொள்ளவில்லை என்றுதானே அர்த்தம்.
ஏனெனில் சுகயீனம் காரணமாக இறந்திருந்தால் எதற்காக தமிழக முதலமைச்சர் நிதி வழங்க முன் வர வேண்டும்?
ஆனால் மக்கள் நிதி கேட்கவில்லை. அவர்கள் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்கிறார்கள்.
எப்படி அமெரிக்காவில் பொலிஸ் அராஜகத்திற்கு எதிராக மக்கள் நீதி கேட்டார்களோ அதேபோன்று தமிழக மக்களும் பொலிஸ் கொலைக்கு எதிராக நீதி கேட்கிறார்கள்.
எப்படி அமெரிக்க மக்களின் போராட்டத்திற்கு சர்வதேச மக்களின் ஆதரவு வழங்கப்பட்டதோ அதேபோன்று தமிழக மக்களின் போராட்டத்திற்கும் சர்வதேச மக்களின் ஆதரவு நிச்சயம் வழங்கப்பட வேண்டும்.
பொதுவாக “குற்றவாளிகள் தலைமறைவு. பொலிசார் வலைவீச்சு” என்றே செய்தி வருவது வழக்கம். இந்திய வரலாற்றில் முதன் முதலாக “பொலிசார் தலைமறைவு” என்ற செய்தி வந்துள்ளது.
இதுதான் தமிழக மக்களின் போராட்ட சாதனை. இனி இது தொடரும்.
https://www.facebook.com/ProjectNightfall/videos/272402503853278/
Pause
-2:53
Additional visual settings
Enter Watch and ScrollClick to enlarge Unmute
3,858,899 Views
கனடாவில் பெறப்பட்ட 20 கோடி ரூபா எங்கே?
கனடாவில் பெறப்பட்ட 20 கோடி ரூபா எங்கே?
“நேர்மையானவர்” சுமந்திரன் பதில் தருவாரா?
கனடாவில் இருக்கும் தமிழர்களால் தாயகத்தில் உள்ள ஏழை மக்களின் புனர்வாழ்வுக்காக அனுப்பபட்ட 20 கோடி ரூபா நிதி எங்கே?
இதனைக் கேட்பவர்கள் சுமந்திரனின் மாற்று கட்சியினர் அல்ல. மாறாக சுமந்திரனின் தமிழரசுக்கட்சி மகிளிர் அணியினரே கேட்கின்றனர்.
பணம் கனடாவில் இருந்து வந்ததை திருகோணமலை தமிழரசுக்கட்சி வேட்பாளர் குகதாசன் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார்.
பணம் தானே பெற்று வந்ததாக சுமந்திரனும் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால் பணம் தன்னிடம் தரப்படவும் இல்லை. பணம் எங்கே என்று தனக்கு தெரியவில்லை என்று தமிழரசுக்கட்சி பொருளாளர் கூறுகிறார்.
புலம்பெயர் நாடுகளில் புலிகளின் பணத்தை சிலர் சுருட்டிவிட்டனர் என்று நீலிக் கண்ணீர் வடிக்கும் சுமந்திரன் இந்த 20 கோடி ரூபா பணத்தை சுருட்டியவர் யார் என்று கூறுவாரா?
கடந்த 5 நாளில் 79 சந்திப்புகளை தான் நிகழ்த்தியதாக சுமந்திரன் பெருமையாக கூறுகிறார். அதில் ஒரு சந்திப்பிலாவது இந்த பணம் எங்கே என்பதை ஏன் அவரால் கூற முடியவில்லை?
குறிப்பு - கனடாவில் இருந்து வந்த 20 கோடி ரூபாவுக்கும் கணக்கு இல்லை. இந்திய தூதரிடம் இருந்து பெறும் தேர்தல் நிதிக்கும் கணக்கு இல்லை. இந்த லட்சணத்தில சுமந்திரன் நேர்மையானவர், என்ற பில்டப்பிற்கு குறைவில்லை.
Image may contain: 1 person, sitting and indoor
Subscribe to:
Posts (Atom)