Saturday, November 30, 2013

• தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் சிங்கள கட்சிகளுடன் தமிழ் மக்கள் சேர்ந்து மகிந்த ராஜபக்ச அரசை தோற்கடிக்க வேண்டும்- சுனந்த தேசப்பிரிய

• தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் சிங்கள கட்சிகளுடன் தமிழ் மக்கள் சேர்ந்து மகிந்த ராஜபக்ச அரசை தோற்கடிக்க வேண்டும்- சுனந்த தேசப்பிரிய

கடந்த ஞாயிற்றுக்கிழமை (03.11.2013) யன்று லண்டனில் ஈஸ்டகாமில் மாலை 5.00 மணியளவில் தமிழ் மொழி சமூகங்களின் செயற்பாட்டகம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு சுனந்த தேசப்பிரிய உரையாற்றினார்.

இலங்கை- நமக்கு முன்னுள்ள கருத்தியல் தெரிவுகளும் செயற்பாட்டு வழிமுறைகளும் என்னும் தலைப்பில் பேராசிரியர் கணேசன் கருத்தரங்கை வழிநடத்தினார். சுனந்த தேசப்பிரிய ஆங்கிலத்தில் நடத்திய உரையாடலின் தொகுப்புரையை சுசீந்திரன் தமிழில் வழங்கினார்.

சுனந்த தேசப்பிரிய ஒரு ஊடகவியலாளர். மனித உரிமைச் செயற்பாட்டாளர். முன்னாள் ஜே.வி.பி உறுப்பினர். தமிழ் மக்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என பல காலமாக வலியுறுத்தி வருபவர். தற்போது மகிந்த அரசின் அச்சுறுத்தல் காரணமாக சுவிற்சலாந்தில் தஞ்சம் பெற்று இருப்பவர்.

வடக்கு மாணாசபையை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியிருப்தை ஒரு நல்ல தொடக்கமாக தான் கருதுவதாகவும் இதிலிருந்து ஒரு நல்ல மாற்றத்தை நோக்கி செல்ல முடியும் என சுனந்த தேசப்பிரிய தனது உரையாடலின் போது குறிப்பிட்டார். மேலும் கூட்டமைப்பானது அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுடன் பேசுவதிலும் விட சிங்கள மக்களுடன் பேசுவது பயன் உள்ளதாக இருக்கும். ஏனெனில் சிங்கள மக்களின் ஆதரவு இன்றி யாராலும் எந்த தீர்வையும் தர முடியாது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

முன்பு சந்திரிக்கா ஒரு சமாதானத்தை தருவார் என நம்பினோம். ஆனால் அன்றைய சூழ்நிலையில் அது கைகூடவில்லை. இன்று நிiமை மாறியிருக்கிறது. நாம் அனைவரும் ஒன்று பட்டு உழைத்தால் அனைத்து மக்களுக்கும் சிறந்த தீர்வை பெற்றுக் கொடுக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். கடந்த மாகாண சபைத் தேர்தலில் சிங்கள உறுமய போன்ற இனவாதக் கட்சிகள் கட்டுக்காசு கூட இல்லாமல் சிங்கள மக்களால் தோற்கடிக்கப்பட்டிருப்பதை நாம் கவனத்தில் கொள்ளல் வேண்டும் என்றார்.

நாம் எமக்காக சிங்கள் மக்கள் குரல் கொடுப்பதில்லை என்கிறோம். அதேவேளை சிங்கள மக்களில் இருந்து எமக்காக குரல் கொடுக்கும் சுனந்த தேசப்பிரிய போன்றவர்களை நாம் எந்தளவு ஆதரவளித்து ஊக்கப் படுத்துகிறோம்?

No comments:

Post a Comment