Monday, May 25, 2020

இம்முறை அதிகளவு தமிழ் மக்களும் அமைப்புகளும்

இம்முறை அதிகளவு தமிழ் மக்களும் அமைப்புகளும் தானுவிற்கு வீர வணக்கம் செலுத்தியுள்ளனர். இது எதிர்பார்த்தபடியே எதிரிக்கு தாங்கமுடியாத எரிச்சலையும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது. ஆம். எப்படி பஞ்சாபில் சென்று இந்திரா காந்தியைக் கொன்றது தவறு என்று கூறமுடியாதோ அதேபோன்று ராஜீவ் காந்தியைக் கொன்றது தவறு என்று தமிழ் மக்கள் மத்தியில் இனி கூற முடியாத நிலை உருவாகின்றது. ஆனால் ராஜிவ் காந்தியைக் கொன்ற தானுவிற்கு இப்போது அல்ல 1992 லேயே வீர வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது. லெனின் தலைமையிலான தமிழ்நாடு விடுதலைப்படையானது 21.05.1992 யன்று தானுவிற்கு வீர வணக்கம் செலுத்தியுள்ளது. அதுவும் வெறுமனே அஞ்சலி செலுத்தவில்லை. மாறாக கும்பகோனம் தொலைக்காட்சி மற்றும் அஞ்சல் நிலையங்கள் மீது குண்டு தாக்குதல் மேற்கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளது. குறிப்பு - தமிழ்நாடு விடுதலைப்படை தாணுவிற்கு வீர வணக்கம் செலுத்தி ஒட்டிய போஸ்டர் கீழே தரப்பட்டுள்ளது. Image may contain: 1 person, text

•மறையாது மடியாது நக்சல்பாரி மரணத்தை வென்றிடும் நக்சல்பாரி!

•மறையாது மடியாது நக்சல்பாரி மரணத்தை வென்றிடும் நக்சல்பாரி! இன்று நக்சல்பாரி எழுச்சியின் 53 வது ஆண்டாகும் (24.05.1967) நக்சல்பாரி கிளர்ச்சி துவங்கி 53 ஆண்டுகள் முடிந்துவிட்டன. அது விவசாயிகளின் விடியலுக்காகத் துவங்கியது. அந்த எழுச்சிக்குக் காரணம் ஓர் பழங்குடிப் பெண்மணி. அவரின் பெயர் ஷாந்தி முண்டா. இப்போது ஷாந்தி முண்டாவிற்கு 77 வயதாகிறது. கூன் விழுந்துவிட்டது. குனிந்தபடிதான் நடக்கிறார். 53 ஆண்டுகளுக்கு முன்பு மே 24 வந்தபோது ஷாந்தி முண்டா தன் 20 வயதுகளில் இருந்தார். குத்தகை விவசாயிகள் தங்களுக்குக் விளைச்சலில் கூடுதல் பங்கு வேண்டும் என்று கோரி, போராடி வந்தனர். அந்தப் போராட்டத்தின் போது சோனம் வாங்டி என்ற போலீஸ்காரர் போராடிய பெண் ஒருவரைத் தாக்கினார். ஷாந்தி முண்டாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஷாந்தி முண்டாவின் முதுகில், பழங்குடிகள் வழக்கப்படி, அவரின் 15 மாதக் குழந்தையைக் கட்டி சுமந்துகொண்டிருந்தார். இருந்தபோதும், அவர் அந்த போலீஸ்காரரை தாக்கினார். மற்றவர்களும் சேர்ந்துகொண்டனர். போலீஸ்காரர் செத்து வீழ்ந்தார். மறுநாள் படையினர் திரும்பி வந்தனர். தாக்குதல் தொடுத்தனர். 11 விவசாயிகளும் பழங்குடியினரும் கொல்லப்பட்டனர். மே 25.. நக்சல்பாரி புரட்சி வெடித்தது.. கிளர்ச்சி நாட்டின் பற்பலப் பகுதிகளுக்குப் பரவியது. இதன்பின்னா ஆயுதம் தாங்கிப் போராடியவர்களை நக்சல்பாரிகள் (நக்சலைட்டுகள்) என்று அழைப்பது வழக்கமானது. ஏனென்றால் வடக்கு வங்கத்தைச் சேர்ந்த நக்சல்பாரி என்ற கிராமத்தில்தான் முதல் பொறி எழுந்தது. ஷாந்தி முண்டாவின் வீட்டுச் சுவர் மண் சுவர்தான். மேலே அஸ்பெஸ்ட்டாஷ் கூரை. அமர்வதற்கு பிளாஸ்டிக் சேர்தான் இருக்கிறது. வேறு சொத்துகள் ஏதும் இல்லை. எந்த முன்னேற்றமும் இல்லை என்கிறார் ஷாந்தி முண்டா. “முன்பு நிலப்பிரபுக்கள் சுரண்டினார்கள். இப்போது அரசு சுரண்டுகிறது“ என்கிறார். நக்சல்பாரியில் ஆரம்பமான இந்த கிளர்ச்சி தமிழ்நாட்டிற்கும் பரவியது. தமிழ்நாட்டில் தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள், அப்பு, பாலன் போன்றவர்கள இந்த எழுச்சியில் உருவாகியவர்கள். இன்று இந்த நக்சல்பாரி இயக்கம் இந்தியா முழுவுதும் பரவி வேரூன்றியுள்ளது. குறிப்பாக 7 மாநிலங்களில் 60 மாவட்டங்களில் இவர்களுடைய ஆட்சி நடைபெறுவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குறிப்பிட்டிருந்தார். பாகிஸ்தான் சீனாவை விட இந்த நக்சல்பாரி இயக்கமே முதன்மையான எதிரி என்று இந்திய அரசு குறிப்பிடும் அளவிற்கு இந்த இயக்கத்தின் வளர்ச்சி இருக்கிறது. இலங்கையைபோல் நான்கு மடங்கு பெரிய பிரதேசம் அவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக இந்திய அரசே ஒத்துக்கொண்டுள்ளது. நக்சலைட்டுகள் பயங்கரவாதிகள் அல்லர். அவர்கள் தேபக்தர்கள் என்று இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒருவர் நக்சலைட்டோ அல்லது மாவோயிஸ்டோ என்பதற்காக அவரை கைது செய்ய முடியாது என்று கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் தமிழக பெண் வழக்கறிஞர் ஒருவரை மாவோயிஸ்டு என்று முத்திரை குத்தி சுட்டுக்கொன்றுள்ளது கேரள பொலிஸ். சுட்டுக் கொன்றோ அல்லது சிறையில் அடைத்தோ மாவோயிஸ்டுகளின் வளர்ச்சியை இந்திய அரசால் தடுத்து நிறுத்த முடியவில்லை. Image may contain: 1 person, standing

இந்திய மாவோயிஸ்டுகளின் போராட்டம்

•இந்திய மாவோயிஸ்டுகளின் போராட்டம் ஈழத் தமிழர் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன? 53 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கு வங்கத்தில் நக்சல்பாரி என்ற ஊரில் ஆரம்பித்த மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்டம் இன்றுவரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இன்று இந்த மாவோயிஸ்டுகளின் இயக்கமானது இந்தியா முழுவுதும் பரவி வேரூன்றியுள்ளது. குறிப்பாக 7 மாநிலங்களில் 60 மாவட்டங்களில் இவர்களுடைய ஆட்சி நடைபெறுவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குறிப்பிட்டிருந்தார். பாகிஸ்தான் சீனாவை விட இந்த நக்சல்பாரி இயக்கமே முதன்மையான எதிரி என்று இந்திய அரசு குறிப்பிடும் அளவிற்கு இந்த இயக்கத்தின் வளர்ச்சி இருக்கிறது. இலங்கையைபோல் நான்கு மடங்கு பெரிய பிரதேசம் அவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக இந்திய அரசே ஒத்துக்கொண்டுள்ளது. ஈழத்தில் செய்ததுபோன்று சுட்டுக் கொன்றோ அல்லது பெண்களை பாலியல் வல்லுறவு செய்தோ மாவோயிஸ்டுகளின் வளர்ச்சியை இந்திய அரசால் தடுத்து நிறுத்த முடியவில்லை. செப் - 11 க்கு பிறகு உலகில் ஆயுதப் போராட்டம் சாத்தியமில்லை என்று எழுதும் அரசியல் ஆய்வாளர்கள் முகத்தில் ஓங்கி குத்தியுள்ளது இந்த மாவோயிஸ்டுகளின் போராட்டம். இந்திய அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை நடத்திவரும் இவ் மாவோயிஸ்டுகள் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு தமது ஆதரவினைத் தெரிவித்துள்ளனர். "விடுதலைப்புலிகள் தற்போது பின்னடைவைச் சந்தித்தாலும் தமிழ்த்தேசத்தின் தீர்க்கப்படாத அபிலாசைகள் பல ஆயுதந்தாங்கிய தேசிய விடுதலை இயக்கங்களை எழச் செய்யும்" -இந்திய மாவோயிஸ்ட் தலைவர் ஆசாத் (24 ஏப்ரல் 2009 ஊடக அறிக்கையில்) "தமிழ்த்தேசத்திற்கு எதிரான போரில் சிறீலங்கா அரசுக்கு இந்திய ஆளும் வர்க்கங்கள் தான் எப்போதும் பின்புலமாய் உள்ளது " -மாவோயிஸ்ட் தலைவர் ஆசாத் (24 ஏப்ரல் 2009 ஊடக அறிக்கையில்) இந்திய அரசுக்கு எதிராக போராடும் மாவோயிஸ்டுகளை ஆதரித்து அவர்களுடன் ஜக்கியப்படுவதன் மூலமே இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பை ஈழத் தமிழ் மக்களால் தடுத்து நிறுத்த முடியும். Image may contain: 1 person, outdoor Image may contain: one or more people and outdoor Image may contain: one or more people and outdoor Image may contain: 1 person

விகடன் குழுமம் தனது 176 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

விகடன் குழுமம் தனது 176 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. விகடனின் இந்த ஈவு இரக்கமற்ற செயலைக் கண்டித்து பல இலக்கியவாதிகள் தமது விருதை திருப்பியளித்து வருகின்றனர். அந்த வகையில் ஈழத்து தமிழ் இலக்கியவாதியான சோபாசக்தி தனக்கு விகடன் அளித்த 3 விருதுகளையும் திருப்பி அனுப்புவதாக அறிவித்துள்ளார். எழுத்தாளர்களுக்கு ஆதரவாக சோபாசக்கி தமது விருதுகளை திருப்பி அளித்தது ஈழத் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கிறது. அனைத்து தமிழ் மக்களும் விகடன் குழுமத்தை கண்டிப்பதோடு வேலை நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு ஆதரவாக இருப்போம். Image may contain: text that says "விக்டன் ஆனந்த விருதுகள் 2015 திறமைக்கு மரியாதை" Image may contain: 1 person, beard and close-up

விகடன் விருதை திருப்பியளிக்கும்

•விகடன் விருதை திருப்பியளிக்கும் இன்னொரு ஈழத்து தமிழ் எழுத்தாளர் ! விகடன் குழுமம் 176 ஊழியர்களை தடாலடியாக பணிநீக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல இலக்கியவாதிகள் தமக்கு அளித்த விகடன் விருதுகளை திருப்பி அளிக்கின்றனர். அந்த வரிசையில் ஈழத்து இன்னொரு தமிழ் எழுத்தாளரான தமிழ்நதி அவர்கள் விகடன் தனக்கு வழங்கிய இரு விருதுகளையும் திருப்பி அளிக்கின்றார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, “எழுத்தோடு தொடர்புடைய ஒருத்தியாக என்னால் ஆற்றக்கூடிய எதிர்வினை ஒன்றுதான். அது, ஆனந்தவிகடனால் எனக்கு வழங்கப்பட்ட இரண்டு விருதுகளையும் திருப்பிக் கொடுப்பது. எழுத்துசார் சக மனிதர்களுக்கான என்னுடைய தார்மீக ஆதரவாகவே விருதுகளைத் திருப்பிக் கொடுப்பதைக் கருதுகிறேன். மற்றப்படி இந்த முடிவு ஆனந்தவிகடனை எந்தவிதத்திலும் பாதிக்காது என்பதையும் அறிவேன்”. “பொருளாதாரரீதியாக நிர்க்கதியாக நிற்கும் தோழர்களுடன் மானசீகமாக உடனிருக்கிறோம்” என்று கூறும் எழுத்தாளர் தமிழ்நதியின் உணர்வுகள் ஈழத் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கிறது. அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். No photo description available. Image may contain: 1 person, selfie and close-up

Wednesday, April 29, 2020

மே தின வாழ்த்துகள்.

•மே தின வாழ்த்துகள். உழைக்கும் மக்கள் இழப்பதற்கு உயிரைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஆனால் அவர்கள் வெல்வதற்கு ஒரு உலகம் காத்திருக்கிறது - கால் மார்க்ஸ் எட்டு மணி நேர வேலை எட்டு மணி நேர ஓய்வு எட்டு மணி நேர உறக்கம் இதற்காகப் போராடி சிக்காக்கோ வீதிகளில் இரத்தம் சிந்தியவர்களின் நினைவே "மே தினம்" எமக்காகப் போராடிய அவர்கள் சிந்திய இரத்தம் தோய்ந்ததே எம் கரங்களில் தவளும் "செங்கொடி". வாழ்வதற்காக உழைக்க ஆரம்பித்த மனிதன் இன்று உழைப்பதற்காக வாழ்கிறான். மாற்றுவோம் இந்த அவல நிலையை. உலகின் பாதி சொத்து வெறும் 62 முதலாளிகளிடம் குவிந்து கிடக்கிறது. இந்த 62 முதலாளிகளின் சொத்து மதிப்பு 119 லட்சம் கோடி ரூபா இது 350 கோடி ஏழை மக்களின் சொத்துக்கு சமமானது. பணக்காரர்களின் சொத்து மதிப்பு 44 சத விகிதம் உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஒன்பது பேரில் ஒருவர் இரவு உணவு இன்றி பட்டினியாக உறங்க செல்கிறார். இந்தியாவில் ஒவ்வொரு அரை மணி நேரமும் ஒரு விவசாயி தற்கொலை செய்கிறார். ஏன் இந்த நிலை? உலகில் செல்வம் சமமாக பங்கிடாமல் இருப்பதே காரணம். ஆறு மனி நேர வேலை கேட்போம் எட்டு மணி நேர உறக்கம் கேட்போம் பத்து மணி நேர ஓய்வு கேட்போம். போராடுவோம் எமக்காக மட்டுமல்ல எமது அடுத்த சந்ததிக்காகவும்! •முதலாளி, தொழிலாளி சுரண்டலை ஒழிப்போம் •உடல் உழைப்பிற்கும் மூளை உழைப்பிற்கும் இடைவெளியை நீக்குவோம். •நகரத்திற்கும் கிராமத்திற்கும் வேறுபாட்டை இல்லாது செய்வோம் வாருங்கள் தோழர்களே! ஒன்றாய் அணிதிரள்வோம்! Image may contain: 1 person

நாம் பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு வழியில்லை!

நாம் பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு வழியில்லை! இவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். பிரதி அமைச்சரும்கூட. தற்போது இவர் பதவியில் இல்லை. ஆனாலும் மக்களுக்கு சேவை செய்வதில் எப்பவும்போல் இருக்கிறார். ஏழை மக்களுக்கு உதவ என்று தானே உணவு சமைத்து எடுத்துச் சென்றார். ஆனால் பொலிசார் அனுமதிக்கவில்லை. இவர் ஜதேக கட்சியை சேர்ந்தவர். எனினும் உடனே இவர் மகிந்தவின் மகன் நாமலுடன் தொடர்பு கொண்டு தன் நிலையை விளக்கி அனுமதி பெறுகிறார். இவர் சிங்கள இனத் தலைவர். இப்படி ஒரு தலைவர் தமிழ் மக்களுக்கு இல்லையே என எம்மை ஏங்க வைக்கிறார். ஏனெனில் எமது தலைவர்கள் பதவி கிடைத்ததும் நீண்ட உறக்கத்திற்கு சென்று விடுகிறார்கள். தேர்தல் அறிவித்தால் மட்டுமே உறக்கத்தில் இருந்து எழுந்து வந்து அறிக்கை விடுகிறார்கள். எமது தலைவர்களும் மகிந்தவுடனும் அவர் மகன் நாமலுடனும் தொடர்பு கொள்கிறார்கள். ஆனால் அது தமக்கு சொகுசு பங்களா மற்றும் வாகனம் பெறுவதற்காகவே தொடர்பு கொள்கிறார்கள். இவர் மக்களுக்கு உதவுவதற்காக பொலிசாரை மீறுகிறார். ஆனால் எம் தலைவர்கள் அந்த பொலிசார் பாதுகாப்பு இல்லை என்றால் மக்கள் மத்தியில் வரமாட்டோம் என அடம் பிடிக்கிறார்கள். என்ன செய்வது? நாம் பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு வழியில்லை. Image may contain: one or more people and people standing Image may contain: 1 person