Monday, September 30, 2024
இருவரும் தமிழ்நீதிபதிகள்
இருவரும் தமிழ்நீதிபதிகள்
ஒருவர் சட்டமாஅதிபரின் உத்தரவை ஏற்க மறுத்து பதவியை துறந்தவர்
இன்னொருவர் சட்டமா அதிபரின் உத்தரவுக்கமைய தண்டனை வழங்கியவர்
ஒருவர் பாதுகாப்பு இன்மையால் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இன்னொருவர் தமிழர் பாதுகாப்பிற்கு துப்பாக்கி இல்லாத பொலிஸ் போதும் என்கிறார்.
ஓ! மரணித்த வீரனே!
ஓ! மரணித்த வீரனே!
நீ விரும்பிய சுதந்திர இந்தியா மலர்ந்தது , வெள்ளையர் ஆட்சி போயிற்று – ஆனால் கொள்ளையர் ஆட்சி வந்துவிட்டது.
வெள்ளையரை விரட்ட நீ குண்டெறிந்தபோது உன்னை தியாகி என்றழைத்தவர்கள் தோழர் தமிழரசன் எறிந்தபோது பயங்கரவாதி என்கிறார்கள்.
தோழர் தமிழரசனை சதி செய்து கொன்றுவிட்டு அவரை “திசை மாறிய பறவை” என்று நீலிக் கண்ணீர் வடிக்கிறாராம் காவல்துறை அதிகாரி
எதற்கு வரவேற்பு?
எதற்கு வரவேற்பு?
சிறை மீண்டதற்காக
எதற்கு சிறை போனார்?
ஊழல் செய்தமைக்காக
யாரு வழக்கு போட்டது ?
திமுக
யாரு வரவேற்பு கொடுப்பது ?
திமுக
விளங்கிடும்!
முன்பு சத்யராஜ்
முன்பு சத்யராஜ் மன்னிப்பு கோரினார்.
இப்போது காhத்தி தெலுங்கு நடிகர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
தவறு செய்யாமலே இவர்கள் ஏன் மன்னிப்பு கேட்கின்றனர்?
உறுதியாக நிற்க தைரியம் இல்லை என்றால் வாய் திறக்காமல் இருக்கலாமே.
செய்தி – நாளை துணை முதல்வராக
செய்தி – நாளை துணை முதல்வராக பதவி ஏற்கிறார் உதயநிதி ஸ்டாலின்
வாரிசு அரசியலுக்கு
இலங்கையில் ஏற்பட்ட முடிவு
தமிழ்நாட்டிலும் ஏற்படுமா?
நீதிபதி பென்சன்
நீதிபதி பென்சன்
கூடவே எம்.பி சம்பளம்
அது போதாதென்று சாராய பர்மிட் வேற
இதுக்கு எதற்கு
நெற்றியில் பட்டை
நடுவில குங்கும பொட்டு
கழுத்தில உருத்திராட்ச கொட்டை
த்தூ …
Saturday, August 31, 2024
இந்த பூமி தனிப்பட்ட
“இந்த பூமி தனிப்பட்ட மனிதனுடையதோ, ஒரு சமூகத்திற்கு உடையதோ,ஒரு தேசத்தினுடையதோ அல்ல.
ஏன் மனிதனின் கூட்டுச் சொத்தும் அல்ல.
நாம் பூமிக்கு விருந்தினர் மட்டுமே.
பூமியில் நமக்கு கிடைத்ததைவிட உயர்ந்த நிலையில் வரும் தலைமுறைக்கு கைமாற்றிக் கொடுக்க வேண்டிய கடப்பாடு நமக்கு உள்ளது”
- காரல் மார்க்ஸ்
நாம் இயற்கையை வெல்ல முடியாது. ஆனால் இயற்கை அழிவில் ஏற்படும் இழப்பை குறைக்க முடியும்.
மண் சரிவு நிகழப்போகிறது என்று அறிவித்த பின்பும் இத்தனை உயிர் இழப்பு எப்படி ஏற்பட்டது?
அரசு பொறுப்பு கூறவேண்டும்.
கேரள அரசு கொல்லப்பட்ட
கேரள அரசு கொல்லப்பட்ட தனது இரு மீனவக் குடும்பங்களுக்கு 10 கோடி ரூபா நட்டஈடு பெற்றுக் கொடுத்திருக்கிறது.
ஆனால் தமிழக அரசு 700க்கு மேற்பட்ட தனது மீனவர்கள் கொல்லப்பட்ட பின்பும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது.
இதற்கு காரணம் மலையாளிகளை மலையாளிகள் ஆளுகின்றனர். ஆனால் தமிழரை தமிழர் அல்லாதவர் ஆளுகின்றனர் என்றே நினைக்க தோன்றுகிறது.
இந்திய அரசின் பட்ஜட்டில் தமிழ்நாடு மாநிலத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை.
ஆனால் சிங்கள அரசுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இருந்தும் சிங்கள அரசு நன்றி மறந்து தொடர்ந்து தமிழக மீனவர்களைக் கொல்லுகின்றது.
சிங்கள அரசின் இந்த தைரியத்திற்கு காரணம் இந்திய அரசோ அல்லது தமிழக அரசோ இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காது என்ற நம்பிக்கையே.
அதனால்தான் போர் அற்ற இந்த காலத்திலும் கொஞ்சம்கூட இரக்கம் இன்றி தமிழக மீனவர்களைக் கொல்லுகின்றது.
இனியாவது தமிழர்கள் விழித்துக்கொள்வார்களா?
ஒருபுறம் கிரிக்கட்டில்
ஒருபுறம் கிரிக்கட்டில் தோற்றதற்காக தமிழக மீனவனை சிங்கள கடற்படை கொல்கிறது.
மறுபுறம் சிங்கள கிரிக்கட் வீரருக்கு சென்னையில் பாராட்டுவிழா நடக்கிறது.
50 வருட திராவிட ஆட்சியின் மகிமை இது?
செய்தி – 40கிலோ எலி இற
ைச்சியுடன் கந்தளாயில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உணவகங்களில் பிரியாணி,கொத்துரொட்டி, பற்றிஸ் வாங்குவோர் அவதானமாக இருக்கும்படி எச்சரிக்கை.
குறிப்பு – பதிவில் கூறப்பட் செய்திக்கும் கீழே உள்ள படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை 😂
இந்தியன் மைலாய்
•“இந்தியன் மைலாய்” எனப்படும் வல்வை படுகொலைகள்!
1968 மார்ச் 16 யன்று அமெரிக்க ராணுவம் வியட்நாமில் 347 அப்பாவி வியட்நாம் மக்களை சுட்டுக் கொன்றது.
இது மைலாய் படுகொலைகள் (My Lai Massacre ) என அழைக்கப்படுகிறது.
1989 ஆகஸ்ட் 2 யன்று வல்வெட்டித்துறையில் அமைதிப்படை என வந்த இந்திய ராணுவம் தமிழ் மக்களை படுகொலை செய்தது.
இப் படுகொலைகள் “இந்தியன் மைலாய்” என அழைக்கப்படுகிறது.
•64 பொது மக்கள் கொல்லப்பட்டனர்
•100 க்கு மேற்பட்டோர் காய மடைந்தனர்
•50 க்கு மேற்பட்ட பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டனர்.
•சுமார் 200 வீடுகள் தீயிட்டு கொழுத்தப்பட்டன.
•40 க்கு மேற்பட்ட கடைகள் எரிக்கப்பட்டன .
•150 க்கு மேற்பட்ட மீன்பிடி வள்ளங்கள் சேதமாக்கப்பட்டன.
•வல்வை நூலகம் முற்றாக எரித்து சேதமாக்கப்பட்டது.
இத் தாக்குதல்கள் ஆகஸ்ட் 2, 3. 4 திகதிகளில் வல்வெட்டித்துறையில் நடைபெற்றது.
இறந்தவர்களின் உடல்களை எடுத்து அடக்கம் செய்யக்கூட இந்திய ராணுவம் அனுமதிக்கவில்லை.
வியட்நாம் கொலைகளுக்காக 26 அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு எதிராக அமெரிக்க அரசு வழக்கு தாக்கல் செய்தது.
அதில் ஒரு அதிகாரிக்கு மட்டும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
வல்வெட்டித்துறையில் படுகொலை செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு எதிராக இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
இந்த வல்வைப் படுகொலைகளுக்காக எந்தவொரு இந்திய ராணுவ அதிகாரியும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.
சீக்கிய படுகொலைகளுக்காக சீக்கிய மக்களிடம் மன்னிப்பு கோரிய பிரதமர் மோடி, வல்வை படுகொலைகளுக்காக தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோரவில்லை.
வியட்நாம் படுகொலைக்காக அனுதாபப்பட்ட சர்வதேசம்கூட வல்வைப் படுகொலைகளையிட்டு கவனம் கொள்ளவில்லை
ராஜீவ் கொலைக்கு நீதி கோருவோர் வல்லைப் படுகொலைக்கு ஏன் நீதி கோருவதில்லை?
ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரையில் ராஜீவுக்கு போனால் உயிர். தமிழனுக்கு போனால் ம - ர். அப்படித்தானே?
400 இந்தியர்களை
400 இந்தியர்களை சுட்டுக்கொல்ல உத்தரவிட்ட அதிகாரி டயரை இங்கிலாந்து சென்று கொன்ற உதம்சிங்கை "தியாகி" என்று கௌரவிக்கும் இந்திய அரசு,
8000 தமிழர்களை கொல்ல காரணமான ராஜீவ் காந்தியை இந்தியா சென்று கொன்ற தாணுவை "பயங்கரவாதி" என்கிறது.
இது என்ன நியாயம்?
(31.07.2024 உதம் சிங் நினைவு தினம்)
இன்று ஆகஸ்ட் 2ம் திகதி
இன்று ஆகஸ்ட் 2ம் திகதி தனிநாயகம் அடிகளாரின் 111வது பிறந்த தினம் ஆகும்.
உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தை உருவாக்கி முதல் நான்கு உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளை நடத்தியவர் தனிநாயகம் அடிகளார்.
இதனால் ஈழத் தமிழர்களால் மட்டுமன்றி உலகத் தமிழர்களாலும் பெரிதும் மதிக்கப்படுபவர்.
அத்தகைய தனிநாயகம் அடிகளார் பற்றி வட்ஸ்அப்பில் உலாவிய ஒரு செய்தி படிக்க நேர்ந்தது.
தனிநாயகம் அடிகளார் ஒரு பறங்கியர் என்றும் தனது கிருத்தவமத வளர்ச்சிக்காக துரையப்பா மீது வீண் பழி சுமத்தி இளைஞர்கள் மூலம் துரையப்பாவை கொன்றார் என அச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
உடல் முழுவதும் இந்து மத வெறி கொண்ட ஒருவனால் மட்டுமே இப்படி ஒரு செய்தியை எழுத முடியும்.
இது துரோகிகள் தியாகிகளாகவும் தியாகிகள் துரோகிகளாகவும் மாற்றும் காலம்.
எனவே தாராளமாக துரையப்பாவை தியாகியாக மாற்றட்டும்.
ஆனால் அதற்காக தமிழுக்காக வாழ்ந்து மடிந்த தனிநாயகம் அடிகளாரை துரோகியாக்க வேண்டாம்.
பக்கத்து வீட்டிலே கோழியைக்
“பக்கத்து வீட்டிலே கோழியைக் கொன்னுட்டாங்க.
தட்டிக் கேட்கலாம் என்று போனேன்
ஒரு கோப்பை குழம்பு கொடுத்தாங்க
பேசாம வாங்கிட்டு வந்திட்டேன்
எப்படி நம்ம ராஜதந்திரம்?”
குறிப்பு - இந்த பதிவிற்கும் கீழே உள்ள படத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று நான் சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்?😂
கடந்தமுறை தமிழ்பேசும்
கடந்தமுறை தமிழ்பேசும் மக்களின் வாக்கு தேவையில்லை எனக்கூறி தனிச் சிங்கள வாக்கில் கோத்தா வெற்றி பெற்றார்.
ஆனால் இம்முறை யாரும் தனிச் சிங்கள வாக்கில் வெற்றி பெற முடியாது.
அதுமட்டுமன்றி தனி சிங்கள வாக்கில் வெற்றி பெறுவது பயன் இல்லை என்றும் சிங்கள அரசியல்வாதிகள் பேசுகின்றனர்.
குறிப்பாக ஜேவிபி தலைவர் அனுரா அவர்கள் தெற்கு அரசியல்வாதிகள் இதுவரை இனவாத அரசியலையே மேற்கொண்டு வந்தனர் என்று பகிரங்கமாக கூறியுள்ளார்.
தமிழ் மக்களின் போராட்டத்தை பயங்கரவாதம் என்று கூறிவந்த சிங்கள தலைமைகள் இப்போது தமது இனவாத அரசியல் பற்றி பேசுகின்றனர்.
நல்ல மாற்றம். வரவேற்போம்.
குறிப்பு – வெற்றியை வேற்றி என எழுதப்பட்டுள்ளது. அனுராவின் பிரச்சாரப்பிரிவினர் இதை கவனத்தில் கொள்ளவும்.
ஒரு டவுட் ?
• ஒரு டவுட் ?
பெண்ணின் முதல் மாதவிடாயை சாமாத்திய விழாவாக எமது சமூகம் கொண்டாடுகிறது.
அதுவும் புலம்பெயர்ந்து போன கனடா நாட்டில் ஹெலிகொப்டர் பிடித்தெல்லாம் கொண்டாடுகிறது.
பரவாயில்லை. இங்கு எனது டவுட் என்னவென்றால்,
பெண்ணின் முதல் மாதவிடாயை கொண்டாடும் எமது சமூகம் அடுத்தடுத்த மாதவிடாயை தீட்டாக ஏன் பார்க்கிறது?
ஏன் அவ் வேளைகளில் பெண்ணை கோயிலினுள் செல்லவிடாமல் தடுக்கிறது?
எமது பெண் கடவுள்களுக்கு மாதவிடாய் வருவதில்லையா? அவர்களுக்கும் தீட்டாக பார்க்கப்படுகிறதா?
காலத்திற்கு எற்ப பழக்கவழக்கங்களை நாம் மாற்றினால் என்ன?
குறிப்பு – யாருடைய மனதையும் புண்படுத்துவது என் நோக்கம் இல்லை. யாரிடமாவது பதில் இருந்தால் பகிருங்கள்.
திருடர்கள் ஜாக்கிரதை!
•திருடர்கள் ஜாக்கிரதை!
திருடர்கள் இரண்டு வகைப்படும்
(1) சாதாரண திருடர்
(2) அரசியல் திருடர்
சாதாரண திருடர் - இவர்கள் எமது பணம், நகை, கடிகாரம், கைபேசி போன்ற எமது உடமைகளை திருடுபவர்கள்.
அரசியல் திருடர் - இவர்கள் எமது எதிர்காலம், கனவு, தொழில், சம்பளம், ஆரோக்கியம், கல்வி, மகிழ்ச்சி என பலவற்றை திருடுபவர்கள்.
இந்த இரண்டு திருடர்களுக்குள் வேறுபாடு என்னவெனில்,
சாதாரண திருடர் நம்மை தெரிவு செய்கின்றனர்.
அரசியல் திருடரை நாம் தெரிவு செய்கிறோம்.
அதைவிட,
சாதாரண திருடர்களை பொலிஸ் கைது செய்யும்.
அரசியல் திருடர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு கொடுக்கும்.
எச்சரிக்கை – தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. யோக்கியன்கள் வருவார்கள். செம்பை எடுத்து உள்ளே வையுங்கள்.😂
நேற்று ஒரு யோக்கியன் (ரணில்) யாழ்ப்பாணம் வந்தார். இனி மற்ற யோக்கியன்களும் வருவார்கள். கவனம்.
தேர்தல் நேரத்தில் அகதிகளுக்கு
தேர்தல் நேரத்தில் அகதிகளுக்கு குடியுரிமை பெற்றுக் கொடுக்கப்படும் என திராவிட முதல்வர் வாக்குறுதி அளித்தார்.
தேர்தல் முடிந்த பின்பு இப்போது அகதிகளை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்ப அவர் முயல்கிறார்.
அகதிகளை அவர்களது விருப்பத்திற்கு மாறாக பலவந்தமாக திருப்பி அனுப்பக்கூடாது என உயர்நீதிமன்ற உத்தரவு உள்ளது.
இப்போது அந்த நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக அகதிகளை பலவந்தமாக திருப்பி அனுப்ப முயல்வது கண்டனத்திற்குரியது.
இது குறித்து முதல் கண்டனக்குரல் வழக்கம்போல் சீமான் அவர்களிடமிருந்து வந்திருக்கிறது.
ஈழத் தமிழர் ஏன் சீமானை ஆதரிக்கின்றனர் என கேட்பவர்களுக்கு பதில் இது.
குறிப்பு -
இந்தியாவில் தொடர்ந்து வாழ விரும்பும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்.
திரும்பி வர விரும்பும் அகதிகளுக்கு மறுவாழ்வுக்குரிய உதவிகளும் ஏற்பாடுகளும் செய்ய வேண்டும்.
இதுவே இந்தியாவில் இருக்கும் ஈழத் தமிழ் அகதிகள் பிரச்சனைக்கான தீர்வாகும்.
தோழர் பிரடெரிக் எங்கெல்சின்
தோழர் பிரடெரிக் எங்கெல்சின் நினைவு நாள்(05.08.24)
தோழர் எங்கெல்ஸ் இல்லையேல் கால் மார்க்ஸ் இல்லை. மாக்சியமும் இல்லை என்று தோழர் லெனின் கூறியிருந்தார்.
ஆனால் தோழர் எங்கெல்ஸ் “அனைத்து பெருமைகளையும் தன் நண்பன் கால் மார்க்ஸ்ற்கே உரியது” என்று அடக்கத்துடன் கூறுகிறார்.
அத்தகைய மாபெரும் ஆசான் தோழர் எங்கெல்ஸ் நினைவு தினம் இன்று ஆகும். (05.08.2024)
உலகுக்கு "மூலதனம்" தந்தவர்கள் கார்ல் மார்க்சு - எங்கெல்சு.
கார்ல் மார்க்சு மூலதனத்தை வெளியிட முழுமூச்சாக தோள்கொடுத்து உதவியவர் எங்கெல்சு.
இவர் பிரசியாவிலுள்ள பர்மன் என்னுமிடத்தில் 1820-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 28-ஆம் நாள் பிறந்தவர்.
மான்செசுடரில் தன்னுடைய தந்தையின் நூற்பு ஆலையில் 1845ஆம் ஆண்டு வேலை செய்த பொழுது தொழிலாளர்களின் மேல் முதலாளித்துவத்தின் வரையற்ற அடிமைத்தனத்தை நேரடியாக உணர்ந்தார்.
அங்கிருந்து ஜெர்மனிக்கு செல்லும் வழியில் பாரீசில் கார்ல் மார்க்சைச் சந்தித்து நட்பை வளர்த்துக்கொண்டார்.
1849-இல் ஜெர்மனியிலிருந்து தப்பி இங்கிலாந்து வந்து முதலாளித்துவத்தின் மீது தாக்குதல் நடத்தும் கார்ல்மார்க்சுக்கு உதவுவதையே தன்னுடைய வாழ்வின் நோக்கமாகக் கொண்டிருந்தார்.
பணமின்றி துயரப்பட்டுக் கொண்டிருந்த மார்க்சுக்கு உதவுதற்காகவே மீண்டும் தன் தந்தையின் நூற்பு ஆலையில் வேலை செய்தார்.
1869- சூலை 1 அன்று தனது ஆலையின் பங்கை விற்றுவிட்டு வணிக அடிமைத்தனத்திலிருந்து தன்னையே விடுவித்துக்கொண்டார்.
அதை ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான நாளாகக் கருதினார்.
1870- செப்டம்பரில் மார்க்சுக்கு அதிகமாக ஒத்துழைக்க எண்ணி மார்க்சின் இல்லத்தருகிலேயே வந்து தங்கினார்.
நேரடியாக பொருளாதார உதவி செய்வதோடு மட்டுமல்ல, நியுயார்க் டெய்லி டிரிபூனல் பத்திரிகைக்கு மார்க்ஸ் பெயரால் கட்டுரைகளை எழுதி அதன்முலம் மார்க்சுக்கு பணம் கிடைக்கச் செய்தார்.
தன்னலம் கருதாத எங்கல்சின் இடையறாத நிதி உதவி மட்டும் இல்லையேல் மார்க்ஸ் மூலதனத்தை முடித்திருககமாட்டார், என்று லெனின் எங்கல்ஸின் உதவி பற்றி கூறுகிறார்.
மார்க்சின் கருத்துக்களை வளமுள்ளதாக்க அவ்வப்போது உறவாடி பல புதிய கருத்துக்களையும் மார்க்சுக்குக் கொடுத்தார்.
தன்னுடைய தனித்தன்மையை அதிகம் வெளிக்காட்டாவிட்டாலும் மிகப்பெரிய அறிஞர் இவர் என்பதை அனைவரும் அறிவர்.
மார்க்சின் "மூலதனம்" நூல் இவருடைய தனித்தன்மையை நன்கு வெளிக்காட்டுகிறது.
மேலும் 1847-48 காலவாக்கில் பொதுவுடைமை அறிக்கையையும் இவர் வெளியிட்டார்.
எங்கெல்சு மிகப்பெரிய அறிஞர்; தத்துவஞானி;. எல்லாவற்றையும் கற்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்.
மார்க்சின் நெருங்கிய நண்பர் எங்கெல்சு 1895-ஆம் ஆண்டு ஆகத்து 5-ஆம் நாள் இறந்தார்.
ஈக மன்றோ ஈகம்
ஈக மன்றோ ஈகம்
================
மானமும் உயிரும் வாழ்வும் கருதி
வானமும் நிலமும் நீரும் கடந்து
கானமும் புகுந்து களத்தினும் நெரிந்து
தானும் குடும்பும் இனமும் இடர்ப்பட
ஆயிரம் ஆயிரம் இளையரும் பெண்டிரும்
மாய்வதும் திரிவதும் ஆகிய நிலைகொள்
ஈழத் தமிழர் இடையினில் தோன்றிக்
காழ்த்த நெஞ்சின் கன்னி இளமுகை
தன்னையும் இழந்து தமரையும் இழந்த
அன்னைக் குலத்தோர் அறங்கூர் மறத்தி -
'தானு'வென் பெயரினள் தன்னினம் அழித்த
வீணனுக் கெதிரா வெகுண்ட வெஞ்சினம்
நெஞ்சினும் உயிரினும் நிலைத்த நினைவொடு
ஒருதனி நின்றே ஊர்நடு சிதைத்த
ஈக மன்றோ ஈகம்
ஆகுமோ உலகவள் அழிவிலாப் புகழ்க்கே!
பாவலரேறு பெருஞ்சித்திரனார் (1991)
Subscribe to:
Posts (Atom)