Saturday, August 31, 2024

கேரள அரசு கொல்லப்பட்ட

கேரள அரசு கொல்லப்பட்ட தனது இரு மீனவக் குடும்பங்களுக்கு 10 கோடி ரூபா நட்டஈடு பெற்றுக் கொடுத்திருக்கிறது. ஆனால் தமிழக அரசு 700க்கு மேற்பட்ட தனது மீனவர்கள் கொல்லப்பட்ட பின்பும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. இதற்கு காரணம் மலையாளிகளை மலையாளிகள் ஆளுகின்றனர். ஆனால் தமிழரை தமிழர் அல்லாதவர் ஆளுகின்றனர் என்றே நினைக்க தோன்றுகிறது. இந்திய அரசின் பட்ஜட்டில் தமிழ்நாடு மாநிலத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. ஆனால் சிங்கள அரசுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இருந்தும் சிங்கள அரசு நன்றி மறந்து தொடர்ந்து தமிழக மீனவர்களைக் கொல்லுகின்றது. சிங்கள அரசின் இந்த தைரியத்திற்கு காரணம் இந்திய அரசோ அல்லது தமிழக அரசோ இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காது என்ற நம்பிக்கையே. அதனால்தான் போர் அற்ற இந்த காலத்திலும் கொஞ்சம்கூட இரக்கம் இன்றி தமிழக மீனவர்களைக் கொல்லுகின்றது. இனியாவது தமிழர்கள் விழித்துக்கொள்வார்களா?

No comments:

Post a Comment