Saturday, August 31, 2024

2009ல் நிகழ்ந்த முள்ளிவாய்க்கால்

2009ல் நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கலைஞர் கருணாநிதி அவர்களை சந்தித்தனர். அப்போது வயது மூப்பு காரணமாக பேசிக் கொண்டிருக்கும்போதே கலைஞர் கருணாநிதி அடிக்கடி உறங்கியிருக்கிறார். உறக்கத்தில் இருந்து விழித்தபோது அவர் கேட்ட முதல் கேள்வி “பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?” இவ்வாறு மொத்தம் நான்கு தடவை "பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?" எனக் கேட்டார். இவ்வாறு தமிழ்த்தேசியகூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். கலைஞரின் ஆழ் மனதில் இக் கேள்வி ஏன் இருந்துள்ளது? அவர் செய்த துரோகம் அவரை இறுதிவரை துரத்தியதா?

No comments:

Post a Comment