Saturday, August 31, 2024

ஒரு குரங்கு வளர்ப்பவன்,

ஒரு குரங்கு வளர்ப்பவன், குரங்குகளுக்கான உணவு திட்டத்தை குரங்குகளிடம் சொல்லிக் கொண்டிருந்தான். காலையில் மூன்று ரொட்டி, மாலையில் நான்கு ரொட்டி வழங்கப்படும் என்றான் அப்போழுது மாலை நேரம் என்பதால் எல்லா குரங்குகளும் ஒத்துக்கொண்டன. சில நாட்கள் போனது. ஒரு நாள் காலை நேரத்தில் எல்லாக்குரங்குகளும் புரட்சி செய்தன எங்களுக்கு காலையில் மூன்று போதாது என்று குரல் எழுப்பின. குரங்கு வளர்ப்பவன் சொன்னான் அப்படியென்றால் காலையில் நான்கு மாலையில் மூன்று. குரங்குகளுக்கு சந்தோசம் தங்களுடைய புரட்சி வெற்றியடைந்ததாக. இதற்கு திருப்ப்தியடைந்தது எல்லா குரங்குகளும் ஒத்துக்கொண்டன. குரங்கு வளர்ப்பவன் சிரித்துக்கொண்டான். ஏனென்றால் அவனுக்கு தெரியும் எப்படி இருந்தாலும் மொத்தம் ஏழுதான் என்று. இந்த குரங்குகளின் நிலை போன்றதே இலங்கை மக்களின் நிலையும். இந்த (குரங்கு) மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்துதான் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். பிறகு போராட்டம் செய்து வேறு ஒரு ஆட்சியைக் கொண்டு வருகிறார்கள். ஆட்சியாளர்கள் மாறுகிறார்கள். ஆனால் ஆட்சி மாறுவதில்லை.; மக்கள் வாழ்வில் எந்த முன்னேற்றமும் ஏற்படுவதில்லை. தாம் ஆட்சியாளர்களை தோற்கடித்துவிட்டதாக மக்கள் நினைக்கின்றனகர். ஆனால் உண்மை என்னவெனில் மக்கள்தான் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

No comments:

Post a Comment