Saturday, August 31, 2024

இந்தியாவில் தொடர்ந்து வாழ

இந்தியாவில் தொடர்ந்து வாழ விரும்பும் ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும். திரும்பி வர விரும்பும் அகதிகளுக்கு மறுவாழ்வுக்குரிய உதவிகளும் ஏற்பாடுகளும் செய்ய வேண்டும். இதுவே இந்தியாவில் இருக்கும் ஈழத் தமிழ் அகதிகள் பிரச்சனைக்கான தீர்வாகும். பிரதமர்கள் சிறிமா சாத்திரி ஒப்பந்த அடிப்படையில் தாயகம் திரும்பிய சுமார் 30000 இந்திய வம்சாவளித் தமிழர்கள் இன்னமும் அகதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை இலங்கை அரசு திரும்பி ஏற்றுக்கொள்ளாது. அவர்களால் இனி இவங்கைக்கு வர முடியாது. எனவே இந்திய அரசு அவர்களுக்கு குடியுரிமை வழங்கியே ஆக வேண்டும். இது குறித்து மலையக தமிழர் தலைவர் ஜீவன் தொண்டைமான் அவர்கள் அக்கறை காட்டாதது ஆச்சரியமாக இருக்கிறது. அவர் சினிமா நடிகைகளை அழைத்து வந்து கூட்டம் போடுவதில் காட்டும் அக்கறையை தமது மக்கள் மீதும் காட்ட வேண்டும்.

No comments:

Post a Comment