Friday, October 30, 2015

• இந்திய அரசை எதிர்த்து ஈழத் தமிழர்களுக்கு அமெரிக்க அரசு ஆதரவு வழங்குமா?

• இந்திய அரசை எதிர்த்து ஈழத் தமிழர்களுக்கு
அமெரிக்க அரசு ஆதரவு வழங்குமா?
(1)வியட்நாமில் படுகொலைகள் செய்த அமெரிக்க அரசு,
ஈராக்கில் படுகொலைகள் செய்த அமெரிக்க அரசு, 
ஆப்கானிஸ்தானில் படுகொலைகள் செய்துவரும் அமெரிக்க அரசு,
ஈழப் படுகொலைகளை கண்டித்து ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்யும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமாகும்.
(2)காஸ்மீரில் படுகொலைகள் செய்யும் இந்திய அரசு, ,
சதீஸ்கரில் படுகொலைகள் செய்யும் இந்திய அரசு,
ஈழத்தில் நடந்த படுகொலைகளை கண்டித்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு வழங்கும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமாகும்.
(3) இந்திய அரசின் உதவியுடனே ஈழத் தமிழர்கள் அழிக்கப்பட்டார்கள். எனவேதான் இந்திய அரசு இலங்கை அரசை பாதுகாத்து வருகின்றது. எனவே இந்திய அரசின் விருப்பத்திற்கு மாறாக அமெரிக்க அரசு ஒருபோதும் செயற்படாது. ஏனெனில் ஈழத்தமிழரின் சிறிய சந்தைக்காக பெரிய இந்திய சந்தையை இழக்க அமெரிக்கா விரும்பாது.
(4) இனப்படுகொலைகள் நிகழ்த்தியோரை தண்டிக்க வேண்டுமாயின்,
தமிழர்களுக்கு ஒரு சிறந்த தீர்வு கிடைக்க வேண்டமாயின்,
சிங்கள மக்களின் அதரவின்றி ஒருபோதும் நிகழாது.
எனவே முதலில் சிங்கள மக்களுக்கு கூறி அவர்களின் ஆதரவையே திரட்ட வேண்டும்.
(5) இந்திய அரசு மெல்ல மெல்ல இலங்கையை விழுங்குகிறது. விரைவில் இலங்கையை தனது 27வது மாநிலமாக மாற்ற முனைகிறது. எனவே இந்த இந்திய விரிவாதிக்கத்திற்கு எதிராக சுதந்திர உணர்வு கொண்ட சிங்கள மக்கள் தமிழ் மக்களின் ஆதரவுடன் ஒரு போராட்டத்தை விரைவில் ஆரம்பிப்பார்கள். இது தவிர்க்கமுடியாதது. அப்போது தமிழ்மக்களின் சுயநிர்ண உரிமையை அவர்கள் நிச்சயம் அங்கீகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

• என் உயிரினும் மேலான தமிழ் மக்களே!

• என் உயிரினும் மேலான தமிழ் மக்களே!
நடிகரின் கட்டவுட்டிற்கு ஊற்றிய பாலை இந்த குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏன் மனம் வரவில்லை?
கடவுளுக்கு செலவு செய்யும் பணத்தில் ஒரு பகுதியை இந்த குழந்தைகளுக்கு கொடுத்திருந்தால் அவர்கள் உயிரைக் காப்பாற்றியிருக்கலாமே?
கடவுளோ அல்லது கட்டவுட்டுகளோ இனப் பிரச்சனைக்கு தீர்வு பெற்றுத் தரப்போவதில்லை எப்போது உணரப் போகிறீர்கள்?
கடந்த மாதம் நல்லூர் திருவிழாவுக்கு கூட்டம் கூடினார்கள். கந்தனை தேரில் வைத்து இழுத்தார்கள்.
தற்போது புலி படத்திற்கு கூட்டம் கூடியுள்ளார்கள். நடிகரின் கட்டவுட்டிற்கு பால் அபிசேகம் செய்துள்ளார்கள்.
கடவுளுக்கு கூட்டம்கூடி தேர் இழுப்பதாலோ அன்றி நடிகர்களின் கட்டவுட்டிற்;கு பால் அபிசேகம் செய்வதாலோ இனப் பிரச்சனைக்கு தீர்வு வரப்போவதில்லை என்பதை ஏன் உணர மறுக்கிறீர்கள்?
ஜரோப்பாவில் கால் பந்து விளையாட்டை அரசுகளே பெரிய அளவில் ஊக்கம் கொடுக்கும். ஏனெனில் மக்கள் தமது பிரச்சனைகளுக்காக போராடுவதில் இருந்து கவனத்தை திருப்ப இவ் அரசுகள் விளையாட்டு, சினிமா, சமயம் போன்றவற்றை பயன்படுத்துகிறது.
யுத்தகாலத்தில் விமானம்மூலம் கோயில்கள் மீது குண்டு வீசிய இலங்கை அரசு இன்று கெலிகெப்டர் மூலம் நல்லூர் கந்தனுக்கு பூ மழை பொழிகிறது.
கோயில்கள் கட்டி திருவிழா செய்வதற்கும், சினிமா நடிகர்களுக்கு கட்டவுட் கட்டி பால் அபிசேகம் செய்யவும் இலங்கை அரசு அனுமதிப்பது தமிழ் மக்களின் போராட்ட உணர்வை சிதைப்பதற்கே என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
வவுனியாவில் குழந்தைகளுக்கு பால் கொடுக்க வக்கின்றி தாய் தனது குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொல்லும் போது இன்னொரு மூலையில் தமிழ் மக்கள் நடிகரின் கட்டவுட்டிற்கு பால் அபிசேகம் செய்வது மிகப் பெரிய கொடுமையாகும்.

• "சுத்துமாத்து" சுமந்திரனின் லண்டன் கூட்டம்!

• "சுத்துமாத்து" சுமந்திரனின் லண்டன் கூட்டம்!
இன்று 03.10.15 யன்று மாலை 4.30 மணிக்கு லண்டன் ஈஸ்ட்காமில் சுமந்திரன் அவர்களின் ரகசிய கூட்டம் நடைபெற்றது.
சுமந்திரன் தன்னை தமிழ் மக்களின் பிரதிநிதி என்கிறார். தான் மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.பி என்கிறார். அப்படியானால் லண்டனில் தமிழ் மக்களை நேரில் சந்திக்க திராணியற்று ஏன் ரகசியமாக கூட்டம் நடத்துகிறார்?
இதுவரை வந்த இலங்கை அரசுகள் எவையும் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்க்காதபடியால்தான் பிரபாகரன்கள் உருவானார்கள் என்று சிங்கள ஜனாதிபதி சந்திரிக்கா கூறியிருக்கிறார். ஆனால் இலங்கை அரசு பல முறை தீர்வு தர முன்வந்தபோது தமிழ்மக்கள் அதனை நிராகரித்துவிட்டதாக சுமந்திரன் புது வரலாறு கூறுகிறார்.
சிங்கள தளபதி சரத்பொன்சேகா தமிழக தலைவர்களை கோமாளிகள் என்றார். அதேபோல் சுமந்திரன் தமிழக தலைவர்கள் "நேரம் ஒரு பேச்சு பேசும் தலைவர்கள்" என்று கிண்டல் செய்கிறார்.
ஈழத் தமிழ்மக்களுக்கு தமிழக மக்களின் அதரவு இல்லாமல் இருந்திருந்தால் இந் நேரம் இந்திய அரசு ஈழத் தமிழர்களை பூண்டோடு அழித்திருக்கம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்திய அரசின் ஆதரவு எமக்கு இருக்கிறது. எனவே தமிழக ஆதரவு தேவையில்லை என்று சின்னப்பிள்ளைதனமாக சுமந்திரன் கூறுகிறார்.
இதுவரை 650 தமிழக மீனவர் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டது குறித்து எந்த கண்டனமும் தெரிவிக்காத சுமந்திரன், தமிழக அரசியல்வாதிகளின் 2000 ரோலர்கள் தினமும் வந்து ஈழக் கடற்பகுதியை அழிப்பதாக கூறுகிறார்.
தமிழக மக்கள் ஒனறி;னைந்து ஆதரவு வழங்கிய போது சுமந்திரன் தமிழக பல்கலைக்கழகத்தில் சொகுசாகப் படித்தவர்.
17 தமிழக இளைஞர்கள் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்தபோது இவர் கொழும்பில் சொகுசாக வாழ்ந்தவர்.
தமிழக தலைவர்கள் ஈழத் தமிழர்களுக்காக சிறையில் வாடிய போது இவர் கொழும்பில் சிங்கள தலைவர்களுடன் விருந்துண்டவர்.
அப்படிப்பட்ட சுமந்திரன் கூறுகிறார் தமிழக தலைவர்களினதும் மக்களினதும் ஆதரவு தேவையில்லை என்று.
இவர் யார் என்று இப்பொது தெரிகிறதா?
இவர் வரலாற்றை ஏன் திரிக்கிறார் என்று புரிகிறதா?
இவரின் சுத்துமாத்துகள் யாவும் யாருக்காக என்று புரிகிறதா?
ஒரு பிய்ந்த செருப்பு இல்லாமற்போய்விட்டதே என்று என் வாழ்வில் இன்றுதான் நான் முதன் முதலாக கவலைப்பட்டேன்.

இந்த அவலத்தை புத்திஜீவி என்று அழைக்கிறார்களே!

• இந்த அவலத்தை புத்திஜீவி என்று அழைக்கிறார்களே!
தனது சொந்த இனத்தை கொன்றவர்களுடன் சேர்ந்து பாற்சோறு சாப்பிட்டவர்
தனது சொந்த இனத்தை அழித்தவர்களுடன் சேர்ந்து கிரிக்கட் விளையாடியவர்
தனது சொந்த இனத்தை அடிமைப்படுத்திய சிங்கக்கொடியை ஏந்தியவர்
அப்படிப்பட்டவர்,மாட்டிறைச்சி சாப்பிட்டதற்காக முதியவரைக்கொன்ற பி.ஜே.பி கொடியை அணிய வெட்கப்படுவாரா?
இலங்கை அரசுக்கு போர்க்கப்பல் இலவசமாக மோடி அரசு வழங்குவது குறித்து இவருக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால் அதனை எதிர்க்கும் தமிழக தலைவர்கள் சந்தர்ப்பவாதிகளாம்.
நடந்தது இனப்படுகொலை என்றும் அதற்கு சர்வதேச விசாரணை தேவையென்றும் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசின் ஆதரவு தேவையில்லையாம். ஆனால் இலங்கை அரசை தொடர்ந்து காப்பாற்றி வரும் இந்திய அரசின் ஆதரவு மட்டும் இவருக்கு போதுமாம்.
இத்தகைய அவலமான ஒருவரை சிலர் எப்படி "புத்திஜீவி" என்று அழைக்கிறார்கள்?

தமிழ் மக்களே! யோக்கியன் வருகிறார். செம்பை எடுத்து உள்ளே வையுங்கள்

• தமிழ் மக்களே!
யோக்கியன் வருகிறார். செம்பை எடுத்து உள்ளே வையுங்கள்
செய்தி- வன்முறையை ஆதரிக்க முடியாது. இந்தியாவுக்கு ஏற்றவாறு தமிழ்மக்கள நடந்து கொள்ள வேண்டும் - சம்பந்தர் அய்யா
சம்பந்தர் அய்யாவிடம் சில கேள்விகள் கேட்க விரும்புகிறோம்
(1)வன்முறையை தமிழ் இளைஞர்கள் தாங்களாக ஏற்றுக்கொண்டார்களா அல்லது அவர்கள் மீது திணிக்கப்பட்டதா?
(2)அகிம்சை வழி சாத்தியமற்றதால் இளைஞர்கள் வன்முறையை தேர்ந்தெடுத்தார்களா? அல்லது அவர்கள் வன்முறை மீது காதல் கொண்ட மனநோயாளிகளா?
(3) துரையப்பாவை துரோகி என்று வர்ணித்து அவரை இளைஞர்கள் மூலம் கொல்லவைத்து வன்முறையை ஆரம்பித்து வைத்தவர்கள் யார்?
(4)அவ்வாறு கொலை செய்த இளைனஞர்களுக்காக வழக்கு பேசி அவர்களை தியாகிகளாக்கியவர்கள் யார்?
(5)வன்முறையில் ஈடுபட்ட சிவகுமாரனை தியாகி சிவகுமாரன் என்று சொல்லி வாக்கு கேட்டு எம்.பி ஆனவர்கள் யார்?
(6)இந்திய அரசு போராளிகளுக்கு பயிற்சியும் ஆயதமும் வழங்கியது அகிம்சை வழியா அல்லது வன்முறை வழியா?
(7) அமைதிப்படை என்று வந்து பல்லாயிரம் மக்களை கொன்று குவித்தது வன்முறை இல்லையா? ஆனால் அதனை எதிhப்பது மட்டும் வன்முறையா?
(8) ஆயதப் போராட்டம் நடத்திய புலிகளை தமிழ்மக்களின் ஏகோபித்த ஒரே பிரதிநிதிகள் என்று கூறி எம்.பி பதவி பெற்றவர்கள் யார்? அப்போது புலிகள் நடத்திய போராட்டம் வன்முறையாக தெரியவில்லையா?
(9) இலங்கை ராணுவம் தமிழ் மக்களை கொல்லாம். கற்பழிக்கலாம். கற்பழித்த ராணுவ வீரர்களை நீதிமன்றில் அஜர் செய்ய இலங்கை அரசு மறுக்கலாம். அது குறித்து உங்கள் சர்வதேசமும் கண்டு கொள்ளாமல் இருக்கும். ஆனால் அதற்கு எதிராக இளைஞர்கள் ஆயதம் ஏந்தினால் அது வன்முறையாக உங்களுக்க தெரிவது ஏன்?
(10) வன்முறையின்றி எந்த தீர்வும் பெற முடியாது என்ற தோழர் லெனின் கூறுகிறார். அப்படியென்றால் அகிம்சை வழியில் எப்படி தீர்வு பெற முடியும் என்றோ அல்லது அவ்வாறு தீர்வு பெற்ற ஒரு நாட்டையோ உங்களால் காட்ட முடியுமா?
தயவு செய்து உங்கள் சொகுசு வாழ்க்கைக்காக தமிழ் இனத்திற்கு துரோகம் இழைக்காதீர்கள். இனத்திற்காக போராடி உயிர் நீத்த போராளிகளின் தியாகத்தை கொச்சைப்படுத்தாதீர்கள்.

நடந்தது இனப்படுகொலையா அல்லது வெறும் போர்க்குற்றம்தானா?

• நடந்தது இனப்படுகொலையா அல்லது வெறும் போர்க்குற்றம்தானா?
லண்டனில் நடைபெற்ற கூட்டத்தில் சுமந்திரன் " நடைபெற்றது இனப்படுகொலைதான். ஆனால் அதை நிரூபிப்பதற்கு போதிய ஆதாரங்கள் இன்மையால் நடைபெற்றது போர்க்குற்றம் என்றே நாம் கூறவேண்டியிருக்கிறது என்றார்.
அதேகூட்டத்தில் கருத்துக்கூறிய தியாகி சிவகுமாரனின் சகோதரர் (இவரும் தமிழரசுக்கட்சியின் தீவிர உறுப்பினர்) "நடைபெற்றது இனப்படுகொலைதான் என்று நிரூபிப்பதற்கு லண்டனில் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று வழி காட்டுங்கள்" என சுமந்திரனிடம் கேட்டார். ஆனால் சுமந்திரன் அதற்குரிய பதில் அளிக்கவில்லை.
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும் தற்போதைய மாகாண முதல்வருமமான விக்கினேஸ்வரன் அவர்கள் நடந்தது இனப்படுகொலையே என தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். அப்படியாயின் அவர் ஆதாரம் இல்லாமலா தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்? ஆதாரம் காட்ட வேண்டும் என்பது தெரியாமலா தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்?
தமிழக சட்டசபையும் நடந்தது இனப்படுகொலையே என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இனப்படுகொலை என்பதற்கு ஆதாரம் வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியாதா?
ஜெர்மன் தீர்ப்பாயம், ட்ப்ளின் தீர்ப்பாயம் போன்றவை நடந்தது இனப்படுகொலை என்றே கூறியுள்ளன. இவ்வாறு கூறுவதற்கு ஆதாரங்கள் வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியாதா?
நடந்தது இனப்படுகொலை என்றே சுமந்திரனும் ஏற்றுக்கொள்கிறார். அதற்குரிய ஆதாரம் இல்லை என்றால் தேiவையான ஆதாரத்தை திரட்டுவதுதானே ஓர் உண்மையான வழக்கறிஞரின் வேலையாக இருக்கவேண்டும்.
அதைவிடுத்து நாடு நாடாக வந்து இனப்படுகொலைக்கு ஆதாரம் இல்லை என்று மகிந்தவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதை விடுத்து அதற்குரிய ஆதாரங்களை திரட்ட சுமந்திரன் பொன்றவர்கள் முயற்சி செய்யலாமே!

இனி அகிம்சை வழியில் போராடி தீர்வு பெறுவோம் - சம்பந்தர் அய்யா தெரிவிப்பு.

 இனி அகிம்சை வழியில் போராடி தீர்வு பெறுவோம் - சம்பந்தர் அய்யா தெரிவிப்பு.
அகிம்சை வழியில் போரடிய தமிழ் தலைவர்கள் வாங்கிய அடியை சம்பந்தர் அய்யா மறந்துவிட்டாரா?
காலிமுகத்திடலில் மண்டை உடைந்து ரத்தம் சிந்த சிந்த எமது தலைவர்கள் ஓடியதை சம்பந்தர் அய்யா மறந்துவிட்டாரா?
தமிழ் மக்கள் அகிம்சை வழியில் போராடிய போது சிங்கள அரசு இனக்கலவரங்களை உருவாக்கி தமிழ் மக்களை அழித்த வரலாற்றை சம்பந்தர் அய்யா மறந்துவிட்டாரா?
அகிம்சை வழியில் போராடி பயன் அற்ற நிலையில்தானே இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள்.
அதனால்தானே தமிழ் மக்களும் அந்த ஆயுதப் போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கினார்கள்.
அகிம்சை வழிப் போராட்டம் என்பது சரணாகதிப் போராட்டமாகும். அதனால் ஒருபோதும் தீர்வு பெற முடியாது.
எனவே மீண்டும் அகிம்சை வழியில் போராட்டம் என்ற சம்பந்தர் அய்யாவின் அறிவிப்பு என்பது மாபெரும் வரலாற்று துரோகமாகும்.