Friday, October 30, 2015

• என் உயிரினும் மேலான தமிழ் மக்களே!

• என் உயிரினும் மேலான தமிழ் மக்களே!
நடிகரின் கட்டவுட்டிற்கு ஊற்றிய பாலை இந்த குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏன் மனம் வரவில்லை?
கடவுளுக்கு செலவு செய்யும் பணத்தில் ஒரு பகுதியை இந்த குழந்தைகளுக்கு கொடுத்திருந்தால் அவர்கள் உயிரைக் காப்பாற்றியிருக்கலாமே?
கடவுளோ அல்லது கட்டவுட்டுகளோ இனப் பிரச்சனைக்கு தீர்வு பெற்றுத் தரப்போவதில்லை எப்போது உணரப் போகிறீர்கள்?
கடந்த மாதம் நல்லூர் திருவிழாவுக்கு கூட்டம் கூடினார்கள். கந்தனை தேரில் வைத்து இழுத்தார்கள்.
தற்போது புலி படத்திற்கு கூட்டம் கூடியுள்ளார்கள். நடிகரின் கட்டவுட்டிற்கு பால் அபிசேகம் செய்துள்ளார்கள்.
கடவுளுக்கு கூட்டம்கூடி தேர் இழுப்பதாலோ அன்றி நடிகர்களின் கட்டவுட்டிற்;கு பால் அபிசேகம் செய்வதாலோ இனப் பிரச்சனைக்கு தீர்வு வரப்போவதில்லை என்பதை ஏன் உணர மறுக்கிறீர்கள்?
ஜரோப்பாவில் கால் பந்து விளையாட்டை அரசுகளே பெரிய அளவில் ஊக்கம் கொடுக்கும். ஏனெனில் மக்கள் தமது பிரச்சனைகளுக்காக போராடுவதில் இருந்து கவனத்தை திருப்ப இவ் அரசுகள் விளையாட்டு, சினிமா, சமயம் போன்றவற்றை பயன்படுத்துகிறது.
யுத்தகாலத்தில் விமானம்மூலம் கோயில்கள் மீது குண்டு வீசிய இலங்கை அரசு இன்று கெலிகெப்டர் மூலம் நல்லூர் கந்தனுக்கு பூ மழை பொழிகிறது.
கோயில்கள் கட்டி திருவிழா செய்வதற்கும், சினிமா நடிகர்களுக்கு கட்டவுட் கட்டி பால் அபிசேகம் செய்யவும் இலங்கை அரசு அனுமதிப்பது தமிழ் மக்களின் போராட்ட உணர்வை சிதைப்பதற்கே என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
வவுனியாவில் குழந்தைகளுக்கு பால் கொடுக்க வக்கின்றி தாய் தனது குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொல்லும் போது இன்னொரு மூலையில் தமிழ் மக்கள் நடிகரின் கட்டவுட்டிற்கு பால் அபிசேகம் செய்வது மிகப் பெரிய கொடுமையாகும்.

No comments:

Post a Comment