Friday, October 30, 2015

•உறுதியளித்தபடி 7ம் திகதிக்கு முன்னர் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்

•உறுதியளித்தபடி 7ம் திகதிக்கு முன்னர் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்
முதலில் அரசியல் கைதிகள் இல்லை என்றார்கள்.
பின்பு பொது மன்னிப்பு வழங்க முடியாது என்றார்கள்.
இப்போது சிலருக்கு பிணை வழங்கப்படும் என்கிறார்கள்.
இதுவும்கூட 7ம் திகதிக்கு முன்னர் நடக்குமா தெரியவில்லை.
குண்டு வாங்கி கொடுத்த கே.பி மீது வழக்கு எதுவும் இல்லை.
குண்டு வைக்கச் சொன்ன தளபதி கருணாவுக்கு சிறை இல்லை.
ஆனால் சாப்பாடு கொடுத்த அப்பாவிகளை 25 வருடமாகியும் விடுதலை செய்ய மறுப்பு.
இது என்ன நியாயம்?
1971ல் ஆயுதம் ஏந்திப் போராடிய ஜே.வி.பி தலைவர் உட்பட அனைவருக்கும் இதே யுஎன்பி அரசே பொது மன்னிப்பு வழங்கியது.
1989ல் கைது செய்யப்பட்ட ஜே.வி.பி அங்கத்தவர்களும் இதே யுஎன்பி அரசே பொது மன்னிப்பு வழங்கியது.
1987ல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் இதே யுஎன.பி அரசே தமிழ் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கியது.
இவ்வாறு எற்கனவே பலமுறை பொது மன்னிப்பு வழங்கிய அரசுக்கு இப்போது மட்டும் மன்னிப்பு வழங்க என்ன தடை?
தமிழ் கைதிகளை விடுதலை செய்யக்கூடாது என்று இதுவரை எந்த சிங்கள அமைப்பும் கோரவில்லை.
மாறாக இவ் தமிழ் கைதிகளை விடுதலை செய்யும்படி சிங்கள மக்களும் வீதியில் இறங்கி போராடுகிறார்கள்.
இருந்தும்கூட இலங்கை அரசு கைதிகளை விடுதலை செய்ய மறுக்கிறது.
"நல்லாட்சி" என்ற பெயரால் தொடர்ந்தும் இனவாதத்தையே இலங்கை அரசு விதைக்கிறது.
சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் 7ம் திகதி முன்னர் உறுதியளித்தபடி விடுதலை செய்யப்பட வேண்டும்.
இல்லையேல் அறிவித்தபடி தமிழ்தேசியகூட்டமைப்பு தலைவர்கள் கைதிகளின் விடுதலைக்காக போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment