Friday, October 30, 2015

•"கிளிப்பிள்ளைகள்" என்று கூறுவதற்கு கொஞ்சம்கூட கூச்சம் வரவில்லையா?

•"கிளிப்பிள்ளைகள்" என்று கூறுவதற்கு கொஞ்சம்கூட கூச்சம் வரவில்லையா?
செய்தி- "கிளிநொச்சி மக்கள் எங்கள் கிளிப்பிள்ளைகளே"- இந்திய துணைத்தூதர்- ஆறுமுகம் நடராஜன்
இலங்கை அரசுடன் சேர்ந்து பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை கொன்றொழித்தவிட்டு இப்போது எப்படி கொஞ்சம்கூட கூச்சமின்றி கிளிநொச்சி மக்கள் எங்கள் கிளிப்பிள்ளைகள் என்று கூறமுடிகிறது?
எந்த வன்னி மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தார்களோ அதே வன்னி மண்ணில் வந்து மரம் நடுவது எதற்காக?
50 ஆயிரம் வீடு கட்டி தருவதாக வாக்குறுதி அளித்தார்கள். அதைப் பெறுவதற்கு அப்பாவி மக்கள் பாலியல் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. அதுமட்டுமன்றி 8 லட்சம் ருபா தருவதாக கையெழுத்து வாங்கிவிட்டு 6 லட்சம் ரூபாவே கொடுக்கிறார்கள்.
இந்த முறைகேடுகளை கண்டு கொள்ளாமல் இருக்கும் இந்திய துணை தூதர் நடராஜன் எதற்காக நாம் இரத்த உறவுகள் என்று நீலிக் கண்ணீர் வடிக்கிறார்?
தமிழனை வைத்தே தமிழனை தாஜா பண்ணிவிடமுடியும் என இந்திய அரசு கனவு காண்கிறது.
ஆனால் தமிழ்மக்கள் இந்திய அரசு செய்த கொடுமைகளை ஒருபோதும் மறக்கவும் மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள்.

No comments:

Post a Comment