Friday, October 30, 2015

•லண்டனில் நடைபெற்ற (நீர்வேலி) "கலைவிழா"

•லண்டனில் நடைபெற்ற (நீர்வேலி) "கலைவிழா"
இன்று ( 24.10.15) மாலை 6 மணிக்கு லண்டனில் வுட்பிறிஜ் பாடசாலை மண்டபத்தில் யாழ்- நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் மற்றும் நீர்வேலி நலன்புரி சங்கம் இணைந்து வழங்கிய கலைமாலை நிகழ்வு இடம்பெற்றது.
தாயகத்தில் உயிர் நீத்தவர்களுக்கான மௌன அஞ்சலியுடன் நிகழ்வுகள் ஆரம்பித்தன.
முதலில் சக்தி நுண்கலை மாணவர்களின் நடனம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மெல்லிசைக் குழுவினரின் கான மழை இடம்பெற்றது.
அதன்பின்பு சட்டதரணி சிறிகாந்தலிங்கம் அவர்களின் தயாரிப்பு நெறியாழ்கையில் "மாவீரன் பண்டார வன்னியன்" நாடகம் இடம்பெற்றது.
அடுத்ததாக லண்டன் திரிசக்தி இலக்கிய சங்கமம் வழங்கிய பட்டி மன்றம் நடைபெற்றது. "எமது பாரம்பரிய விழுமியங்களைப் பாதுகாத்து மரபு சார்ந்த இலக்கியங்களை இளஞசமுதாயத்திற்கு கையளிக்க வேண்டியது, சமுதாய அமைப்புகளின் பணியா? அல்லது தனி மனிதர்களின் பணியா?" என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
மீண்டும் மெல்லிசை குழுவினரின் கானமழை தொடர்ந்தது. அத்துடன் இரவு உணவும் வழங்கப்பட்டது.
நன்கு திட்டமிட்டு மிகச் சிறப்பாக நிகழ்வை நடத்தியுள்ளார்கள். கடந்த 13 வருடமாக இவ் நிகழ்வை இவர்கள் நடத்தி வருகிறார்கள்.
யாழ் மாவட்டத்தில் பிரபலமான ஒரு பாடசாலையின் பழையமாணவர் ஒன்றுகூடல் லண்டனில் தேம்ஸ்நதியில் மிதக்கும் ஓட்டலில் பல லட்சம் செலவில் நடத்தினார்கள். ஆனால் அந்த பாடசாலையில் கம்பியுட்டர் பிறின்டருக்குரிய காட்றிஜ் வாங்குவதற்கு பணம் இல்லாமல் கஸ்டப்பட்டதை நான் நேரில் கண்டிருக்கிறேன்.
அத்தகைய ஒரு அவலமான பழைய மாணவர் போல் அல்லாமல் இந்த அத்தியார் இந்து கல்லூரி பழைய மாணவர்கள் பல பயனுள்ள வேலைகளை செய்து மற்றவர்களுக்கு ஒரு சிறந்த முன் உதாரணமாக வழிகாட்டியுள்ளார்கள்.
உண்மையில் இந்த நிகழ்வை அரங்கேற்றிய அந்த பழைய மாணவர்கள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்களே!

No comments:

Post a Comment