Friday, October 30, 2015

பாகிஸ்தான் பாடகருக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது.

பாகிஸ்தான் பாடகருக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது.
ஈழ அகதிகள் சிறப்புமுகாமில் அடைக்கப்படுகிறார்கள்.
இந்திய அரசு பாகிஸ்தான் பாடகர் ஒருவருக்கு குடியுரிமை வழங்கவுள்ளது. ஆனால் 32 ஆண்டுகளாக வாழ்ந்தவரும் ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்க மறுக்கிறது. அதுமட்டுமல்ல ஈழ அகதிகளை கொடிய சிறப்புமகாமில் அடைத்து சித்திரவதை செய்கிறது.
இந்தியாவில் தீபெத் அகதிகள் உண்டு. ஆனால் அவர்கள் சிறப்புமுகாமில் அடைக்கப்படுவதில்லை.
இந்தியாவில் வங்கதேச அகதிகள் உண்டு. ஆனால் அவர்கள் சிறப்புமுகாமில் அடைக்கப்படுவதில்லை.
இந்தியாவில் நேபாள அகதிகள் உண்டு. ஆனால் அவர்கள் சிறப்புமுகாமில் அடைக்கப்படுவதில்லை.
இந்தியாவில் உள்ள எல்லா அகதிகளும் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் ஈழ தமிழ் அகதிகள் மட்டும் சிறப்புமுகாமில் அடைக்கப்படுகிறார்கள்.
எல்லா நாடுகளிலும் அகதிகள் உயர் கல்வி கற்ற வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில மட்டும்; ஈழ அகதிகளுக்கு உயர்கல்வி மறுக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் எட்டுக்கோடி தமிழர் உண்டு. இருந்தும் ஈழ அகதி நந்தினிக்கு மருத்துகல்வி மறுக்கப்பட்டது. சீனாவில் ஒரு தமிழரும் இல்லை. ஆனால் சீனா அவ் நந்தினிக்கு மருத்துவம் கற்ற புலமைப்பரிசிலுடன் வாய்ப்பு வழங்கியள்ளது.
இந்தியாவில்,
தீபெத் அகதி எங்கும் என்ன வேலையும் செய்யலாம்..
வங்கதேச அகதி எங்கும் என்ன வேலையும் செய்யலாம்.
பர்மிய அகதி எங்கும் என்ன வேலையும் செய்யலாம்.
ஆனால் ஈழ அகதி ஆட்டோ ஒட்டக்கூட லைசென்ஸ் எடுக்க முடியாது.
இதுதான் இந்தியா!

No comments:

Post a Comment