Friday, October 30, 2015

•கலைஞர் அவர்களே! மன்னிக்கவும் எங்களால் மறக்கவும் முடியவில்லை உங்களை மன்னிக்கவும் முடியவில்லை

•கலைஞர் அவர்களே! மன்னிக்கவும்
எங்களால் மறக்கவும் முடியவில்லை
உங்களை மன்னிக்கவும் முடியவில்லை
செய்தி- "இலங்கை நட்பு நாடு என்பதை நிறுத்துக. போர்க்குற்றம் மீது சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்துக- கருணாநிதி வேண்டுகோள்.
கலைஞர் அவர்களே!
நீங்கள் பதவியில் இருக்கும்போது நட்பு நாடாக தெரிந்த இலங்கை பதவி இல்லாத இப்போது நட்பு நாடு அல்ல என்று ஏன் தெரிகிறது?
நீங்கள் பதவியில் இருக்கும்போது உங்கள் மகள் கனிமொழி மகிந்தவுடன் கைகுலுக்கி பரிசில்கள் வாங்கியபோது தெரியாத போர்க் குற்றம் இப்பொது ஏன் தெரிகிறது?
நீங்கள் பதவியில் இருக்கும்போது ஆடிய 3 மணிநேர உண்ணாவிரத நாடகத்தையும் அதனைத் தொடர்ந்து பல்லாயிரம் தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டதையும் எம்மால் மறக்கவும் முடியவில்லை. மன்னிக்கவும் முடியவில்லை.
முள்ளிவாய்க்காலில் சிந்தப்பட்ட ரத்தம் காயுமுன்னரே உங்கள் மகள் கனிமொழி கொலைகார மகிந்தவுடன் கைகுலுக்கி பரிசில்கள் வாங்கியதை எம்மால் மறக்கவும் முடியவில்லை. மன்னிக்கவும் முடியவில்லை.
1990ம் ஆண்டு உங்களால் ஆரம்பிக்கப்பட்ட சிறப்புமுகாம் கொடுமைகள் இன்றும் தொடருகின்றன. அதை மூடவேண்டும் என்று இன்றும்கூட உங்களால் கோர முடியாததை எம்மால் மறக்கவும் முடியவில்லை. மன்னிக்கவும முடியவில்லை.
இப்போதுகூட ஈழத் தமிழர்களுக்காக நீங்கள் குரல் கொடுப்பது உண்மையில் ஈழத் தமிழர்கள் மீது கொண்ட அக்கறையால் அல்ல. மாறாக எதிர்வரும் தேர்தலில் உங்கள் மகன் ஸடாலினுக்கு முதலமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் எனபதற்காகவே.
இனியும் உங்களை நம்பி ஏமாறுவதற்கு தமிழன் ஒன்றும் அடி முட்டாள்கள் இல்லை

No comments:

Post a Comment