Friday, October 30, 2015

• இந்திய அரசை எதிர்த்து ஈழத் தமிழர்களுக்கு அமெரிக்க அரசு ஆதரவு வழங்குமா?

• இந்திய அரசை எதிர்த்து ஈழத் தமிழர்களுக்கு
அமெரிக்க அரசு ஆதரவு வழங்குமா?
(1)வியட்நாமில் படுகொலைகள் செய்த அமெரிக்க அரசு,
ஈராக்கில் படுகொலைகள் செய்த அமெரிக்க அரசு, 
ஆப்கானிஸ்தானில் படுகொலைகள் செய்துவரும் அமெரிக்க அரசு,
ஈழப் படுகொலைகளை கண்டித்து ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்யும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமாகும்.
(2)காஸ்மீரில் படுகொலைகள் செய்யும் இந்திய அரசு, ,
சதீஸ்கரில் படுகொலைகள் செய்யும் இந்திய அரசு,
ஈழத்தில் நடந்த படுகொலைகளை கண்டித்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு வழங்கும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமாகும்.
(3) இந்திய அரசின் உதவியுடனே ஈழத் தமிழர்கள் அழிக்கப்பட்டார்கள். எனவேதான் இந்திய அரசு இலங்கை அரசை பாதுகாத்து வருகின்றது. எனவே இந்திய அரசின் விருப்பத்திற்கு மாறாக அமெரிக்க அரசு ஒருபோதும் செயற்படாது. ஏனெனில் ஈழத்தமிழரின் சிறிய சந்தைக்காக பெரிய இந்திய சந்தையை இழக்க அமெரிக்கா விரும்பாது.
(4) இனப்படுகொலைகள் நிகழ்த்தியோரை தண்டிக்க வேண்டுமாயின்,
தமிழர்களுக்கு ஒரு சிறந்த தீர்வு கிடைக்க வேண்டமாயின்,
சிங்கள மக்களின் அதரவின்றி ஒருபோதும் நிகழாது.
எனவே முதலில் சிங்கள மக்களுக்கு கூறி அவர்களின் ஆதரவையே திரட்ட வேண்டும்.
(5) இந்திய அரசு மெல்ல மெல்ல இலங்கையை விழுங்குகிறது. விரைவில் இலங்கையை தனது 27வது மாநிலமாக மாற்ற முனைகிறது. எனவே இந்த இந்திய விரிவாதிக்கத்திற்கு எதிராக சுதந்திர உணர்வு கொண்ட சிங்கள மக்கள் தமிழ் மக்களின் ஆதரவுடன் ஒரு போராட்டத்தை விரைவில் ஆரம்பிப்பார்கள். இது தவிர்க்கமுடியாதது. அப்போது தமிழ்மக்களின் சுயநிர்ண உரிமையை அவர்கள் நிச்சயம் அங்கீகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

No comments:

Post a Comment