Monday, November 30, 2015

கனடாவில் இடம்பெற்ற நூல் வெளியீடு

• கனடாவில் இடம்பெற்ற நூல் வெளியீடும்,
சிறப்புமுகாம் கொடுமைகளுக்கு எதிரான கண்டனக் கூட்டமும்
கனடாவில் நேற்றைய தினம் (29.11.15) எனது "சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாம்" நூல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறப்புமுகாம் கொடுமைகளுக்கு எதிராக கண்டனமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திரு.ஜெயகரன் அவர்கள் இவ் நிகழ்விற்கு தலைமை தாங்கி வழி நடத்தினார்.
திரு.மார்க் அன்ரனி அவர்கள் முதலாவதாக உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து மனிதவுரிமை செயற்பாட்டாளர் திருமதி.உஷா சிறிஸ்கந்தராசா அவர்கள் உரையாற்றினார். அதன்பின்பு சர்வதேச மன்னிப்புச் சபையைச் சேர்ந்த திரு.ஜோன் ஆர்கியூ அவர்கள் உரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து பேராசிரியர் சேரன் அவர்கள் உரையாற்றினார். அதன்பின்பு திரு.கணன் சுவாமி அவர்கள் உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து திரு.அகிலன் அவர்கள் நூல் குறித்த ஆய்வுரையை வழங்கினார். திரு.ஈழவேந்தன் அய்யா அவர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டு தனது கருத்துக்களை தெரிவித்தார். இறுதியாக திருமதி. சிவவதனி பிரபாகரன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
பல்வேறு அரசியல் பின்னணியை கொண்ட உணர்வாளர்கள் ஒன்றாக நூல் வெளியீட்டில் கலந்துகொண்டு சிறப்புமுகாம் கொடுமைகளுக்கு எதிராக தமது குரலை வெளிப்படுத்தியிருப்பது நிச்சயம் அந்த அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளுக்கு ஆறுதல் தரும் செய்தியாகும்.
கனடாவின் இவ் நிகழ்வு ஏற்படுத்தியிருக்கும் தாக்கமானது சிறப்புமுகாம்கள் விரைவில் மூடப்பட்டு அதில் அடைத்து வைக்கப்பட்டிருக்கம் அகதிகளுக்க விடுதலையைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையை மேலும் வலுவூட்டுகிறது.
இந்த நிகழ்வில் பங்கு பற்றியவர்கள், பேசியவர்கள் எல்லாவற்றுக்கு மேலாக இதனை சிறப்பாக ஒழுங்கு செய்த ஏற்பாட்டாளர்கள் அனைவரின் உணர்வுகள் உண்மையிலே மிகவும் பாராட்டுக்குரியதாகும்.

No comments:

Post a Comment